
சென்னை போயஸ் தோட்டத்தில் நடைபெற்ற சசிகலாவின் இல்ல புதுமனை புகுவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தார்.
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ ஜெ.தீபா வசம் சென்ற நிலையில், அதற்கு எதிரே பிரம்மாண்டமான இல்லத்தை சசிகலா கட்டி, அதற்கு ஜெயலலிதா இல்லம் என பெயரிட்டுள்ளார். பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு அந்த இல்லத்தில் சசிகலா குடியேறியுள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, தமது புதிய இல்லத்தில் புதுமனை புகுவிழா நடத்திய அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி கண்ணீர் மல்க மரியாதைச் செலுத்தினார்.
சசிகலாவின் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் சசிகலாவின் புதுமனை புகுவிழாவிற்கு சென்று வாழ்த்து தெரிவித்தார். சுமார் 2 மணி நேரம் சசிகலாவைச் சந்தித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் சசிகலாவின் இல்லம் கோயில் போன்று உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“கொ.ம.தே.க.வுக்கு நாமக்கல் தொகுதி…..ஐ.யூ.எம்.எல்.க்கு ராமநாதபுரம் தொகுதி”- அதிரடி காட்டும் தி.மு.க.!
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், “இந்த இல்லம் நிம்மதி, சந்தோஷம் எல்லாம் தர பிரார்த்திக்கிறேன்” என்றார்.