- Advertisement -
நகைச்சுவையாலாலும், தனது வித்யாசமான சிரிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த நகைச்சுவை மன்னன் குமரிமுத்து மறைந்து, இன்று நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

1980-களில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் என நூற்றுக்கணக்கில் வலம் வந்தனர். கவுண்டமணி, செந்தில் என பல நடிகர்கள் நகைச்சுவை நடிகர்களாக நடித்து வந்தனர். அதில் சிலர் மட்டுமே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தனர். அப்படி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் தான் குமரிமுத்து. மாறுகண்களோடு எளிமையான தோற்றத்தில் இருந்த குமரிமுத்துவின் சிரிப்புக்கே ரசிகர்கள் கொட்டிக் கிடந்தனர். அவர் செய்யும் நகைச்சுவை ஒரு பக்கம் இருந்தால், அவரது சிரிப்பு மற்றொரு பக்கம் ரசிகர்களை வயிலு குலுங்க சிரிக்க வைத்தது.

தனது 15- வயதில் குமரியில் இருந்து பிழைப்பிற்காக சென்னை வந்த குமரிமுத்துக்கு உதவியாக இருந்தவர் பிரபல நடிகர் நாகேஷ் தான். பொய் சொல்லாதே என்ற திரைப்படத்தின் மூலம் தான் குமரிமுத்துவை நாகேஷ் அறிமுகப்படுத்தினார். மனசுக்குள் மத்தாப்பு படப்பிடிப்பின்போது குமரிமுத்து எதார்த்தமாக சிரித்துள்ளார். இதைப் பார்த்து அசந்து போன இயக்குநர், இதேபோல படத்திலும் சிரிக்க வேண்டும் என அன்புக் கட்டளை இட்டார்.



