- Advertisement -

மக்களவைத் தேர்தலுகு பா.ஜ.கவின் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகள், வடக் கிழக்கு மாநிலங்களில் நலத்திட உதவிகள் தொடங்கி வைப்பதற்கான பயணம் என்று பிரதமர் மோடி இரவு, பகல் பாராமல் கடினமாக உழைத்து வருவதாக சமூகவலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
விரைவில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு பா.ஜ.கவின் முதற்கட்ட வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அதை தலைமை ஏற்று நடத்திய பிரதமர் மோடி, கூட்டம் முடிந்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் வீடு திரும்பினார்.
அதையடுத்து பல்லாயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்படும் மக்கள் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக ஜார்கண்ட், பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு 2 நாள்கள் பயணமான மோடி புறப்பட்டுச் சென்றார். தற்போது பிரதமர் மோடிக்கு 73 வயதாகும் நிலையில் “சூப்பர்ஹியூமன்” போல தினமும் நாட்டுக்காக அவர் உழைத்து வருகிறார் என்று பலரும் சமூகவலைதளங்களில் கூறியுள்ளனர்.

நாம் தினசரி காலை எழுவதற்கு முன்னதாக பிரதமர் மோடியின் பணிகள் துவங்குகின்றனர். நாம் தூங்கச் சென்ற பின்னர் தான் அவருடைய வேலைகள் நிறைவடைகின்றன. இந்தியாவில் நடைபெறும் பல்வேறு தேர்தல்களில் பா.ஜ.க தொடர்ந்து மகுடம் சூடுவதற்கு மோடியின் உழைப்பு தான் முக்கிய காரணமாக உள்ளது என்று ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதை விடவும், இந்த நாட்டுக்கான மிகவும் அர்ப்பணிப்புடனும் வேட்கை கொண்டும் பிரதமர் மோடி செயல்படுகிறார். பல்வேறு காரியங்களில் செய் அல்லது செத்து மடி என்கிற பாணியை பின்பற்றுகிறார். அவருடைய நடைமுறை வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவரும் பாடமாகும் என்று இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் முக்கிய சடங்காக ப்ரான் பிரதிஷ்டை இருந்தது. அதற்காக அவர் 11 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து பூஜையில் கலந்துகொண்டார். கட்சி சார்பில்லாமல் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் தொடர்ந்து கடினமாக உழைக்கும் நபராக பிரதமர் மோடி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் பலரும் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர்.


