Homeசெய்திகள்தமிழ்நாடு7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கம்!

7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கம்!

-

- Advertisement -

 

சென்னையில் மின்சார ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதால், பயணிகளின் வசதிக்காகக் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மது கேட்டு வாக்குவாதம் – இருவர் கைது

சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், 44 மின்சார ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்களின் வசதிக்காக இன்று (மார்ச் 03) காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வே

அதற்கேற்ப பயணிகள், தங்களது பயணங்களைத் திட்டமிடுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.இதனிடையே, சென்னையில் பல்வேறு இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக, கூடுதலாக மாநகர அரசு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

MUST READ