

சென்னையில் ஸ்மோக் பிஸ்கேட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் கலந்த உணவுப் பொருட்களை ஆய்வுச் செய்ய உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
ரன்வீர் சிங்கின் டீப் பேக் விவகாரம்… டிவிட்டர் பயனாளர் மீது வழக்குப்பதிவு…
இது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் கூறியதாவது, “உறைய வைக்கவும், பேக்கிங் செய்யவும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படும். திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படும் இடங்களை கணக்கெடுத்து வருகிறோம். உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையத்தின் சுற்றறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருளாக திரவ நைட்ரஜனை எடுத்துக் கொள்ளக்கூடாது. உடல் உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். திரவ நைட்ரஜனைப் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
வேட்டையன் படப்பிடிப்பில் இழுபறி… ரஜினி படங்களுக்கு பாதிப்பு..
கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்டு சிறுவன் மயக்கம் அடைவது போன்ற வீடியோ வெளியாகியிருந்தது. இந்த நிலையில், திரவ நைட்ரஜன் உணவுப் பொருட்கள் சென்னையில் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ய உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
