spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பெண் மீது வேன் மோதி விபத்து

பெண் மீது வேன் மோதி விபத்து

-

- Advertisement -

ஊத்துக்கோட்டையில்  கேரளா பதிவெண்  கொண்ட டூரிஸ்ட் வேன் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த பெண் மீது மோதிவிட்டு தப்பிய ஓட்டுனரை பிடித்து  சரமாரியாக பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அண்ணாசிலை பகுதியில் ஆந்திர மாநிலம் பென்னேரி கண்டிகை பகுதியில் இருந்து  கட்டுமான பணிக்கான கொத்தனார், சித்தாள் வேலைகளுக்கு பெண்கள்,ஆண்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் காலை நேரங்களில் வந்து சாலை ஓரத்தில் காத்திருந்தனர்.

we-r-hiring

இந்நிலையில் சத்தியவேடு பகுதியில் இருந்து அதிவேகமாக  வந்த கேரளா பதிவு கொண்ட டூரிஸ்டர் பஸ் ஒன்று  சாலையின் வளைவில்  திரும்ப முயன்ற போது  பென்னேரி கண்டிகை பகுதியை சேர்ந்த  ஏகவல்லி  என்ற பெண்மணியின் மீது பேருந்து மோதிவிட்டு ஓட்டுநர் நிற்காமல் சென்றுள்ளார்.

அப்போது அப்பகுதியில் வேலைக்காக காத்திருந்த ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் வாகனத்தை தூரத்தி சென்று நிறுத்தி அதில் இருந்த வாகன ஓட்டுனரை  மடக்கிப்பிடித்து சாலையில் வைத்து சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

MUST READ