spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsஅதர்வா, நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ' படத்தின் டீசர் வெளியீடு!

அதர்வா, நிமிஷா சஜயன் நடிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் டீசர் வெளியீடு!

-

- Advertisement -
kadalkanni

அதர்வா, நிமிஷா சஜயன் நடிக்கும் டிஎன்ஏ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.அதர்வா, நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ' படத்தின் டீசர் வெளியீடு!

மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டிஎன் ஏ. இந்த படத்தினை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் அதர்வாவுடன் இணைந்து நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன் கருணாகரன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திலே ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்க பார்த்திபன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஜிப்ரான் இந்த படத்தின் பின்னணி இசைக்கான பணிகளை கவனித்திருக்கும் நிலையில் ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சத்ய பிரகாஷ், அனலா ஆகாஷ், பிரவீன் சாய்வி, சகி சிவா ஆகியோர் இசையமைத்திருக்கின்றன. திரில்லர் கதைக்களத்தில் உருவாகி தரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

அதன்படி ஏற்கனவே இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். இந்த டீசரை பார்க்கும்போது ஒருநாள் கூத்து, மான்ஸ்டர் ஆகிய படங்களை போல் இந்த படமும் ஒரு வித்தியாசமான கன்டன்டில் உருவாகி இருப்பது போல் தெரிகிறது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ