இன்று ஒரே நாளில் தங்கம் விலை இரு முறை உயா்ந்துள்ளது. இதனால் மக்கள் அதிா்ச்சியில் உறைந்துள்ளனா்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.92,200க்கு விற்பனை செய்யப்பட்டது. பிற்பகலில் மேலும் சவரனுக்கு ரூ.440 அதிகரித்து 1 சவரன் ரூ.92,640க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. ஒரே நாளில் இருமுறை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிா்ச்சியில் உறைந்துள்ளனா். மாலையில் நகை வாங்க திட்டமிட்டிருந்த மக்கள் இந்த விலையேறத்தால் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் இன்று ஒரேநாளில் இருமுறை உயர்ந்துள்ளது. காலையில் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.195க்கும் பிற்பகலில் மேலும், கிராமிற்கு ரூ.2 உயர்ந்து 1 கிராம் வெள்ளி ரூ.197க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்திற்கு நிகராக வெள்ளியும் தொடர்ந்து ஏற்றம் கண்டுவருவதால் மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
கரூர் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரியது பாஜக தான் – அண்ணாமலை..!!