spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsதீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர்...

தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

-

- Advertisement -

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். மக்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக, இந்த ஆண்டு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான ஆம்னி பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

we-r-hiring

​இந்நிலையில், சில ஆம்னி பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு ஏற்கனவே பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

​தற்போது வந்துள்ள புகார்களின் அடிப்படையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், அதிக கட்டணம் நிர்ணயித்த 10 ஆம்னி பேருந்து நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளார். அந்த நிறுவனங்களின் கட்டணங்களைக் குறைக்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

​இந்த ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கட்டணத்தைக் குறைக்காமல், தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அத்தகைய பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

https://www.apcnewstamil.com/news/cinema-news/vishal-starring-magudam-movie-release-updat

MUST READ