செங்கல்பட்டு அருகே வல்லம் பகுதியில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்திற்க்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் 15 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகியது. இந்த தீ விபத்து குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.செங்கல்பட்டு முருகேசநார் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ் (29) இவர் செங்கல்பட்டு அருகே வல்லம் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகின்றார். வழக்கம் போல் நேற்று கடையை மூடிவிட்டு வீட்டிற்க்கு சென்ற நேரத்தில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்திற்க்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் இருசக்கர வாகனங்கள் தீ பற்றி எரிய துவங்கியதைக் கண்ட சாலையில் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகள் செங்கல்பட்டு தீயணைப்புதுறை அலுவலகத்திற்க்கு தகவல் தெரியபடுத்தினர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ பற்றி எரிந்துக் கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 15 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகியது சில வாகனங்கள் மட்டுமே பத்திரமாக மீட்கப்பட்டது. செங்கல்பட்டு – திருக்கழுகுன்றம் சாலை வல்லம் பகுதியில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடைக்கு மர்ம நபர்கள் நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்து குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை
