ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை பெற்றுக் கொள்ள சம்மதித்துள்ள நிலையில் சுர்ஜித் தாயாரை கைது செய்ய வேண்டுமென கவின் தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.நெல்லையில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க மறுத்து நான்கு நாட்களாக அவர்கள் சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் உறவினர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். கனிமொழி எம்பி, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, திருமாவளவன் எம்பி, அமைச்சர்கள் கே என் நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, ஜான் பாண்டியன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்களும் கவின் இல்லத்திற்கு நேரில் வந்து அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். இந்நிலையில் ஐந்தாம் நாள் இன்று நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து வைக்கப்பட்டுள்ள கவின் உடலை பெற்றுக் கொள்ள அவரது பெற்றோர் சம்மதித்து இரண்டு கார் மற்றும் இரண்டு வேனில் ஆறுமுகமங்கலத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து கவின் தந்தை சந்திரசேகர் கூறுகையில்,

சுற்றுவட்டார மக்கள் வேண்டுகோள் வைத்து மகன் உடலை வாங்க சம்மதித்துள்ளோம். இதற்குக் காரணமான அனைத்து குற்றவாளிகளும் குறிப்பாக தாயார் கைது செய்யப்பட வேண்டும். இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் பணியிட நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றார் கேட்டுக் கொண்டாா்.
திண்டுக்கல்: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தகராறு – திருநங்கை மீது தம்பியே அரிவாள் வெட்டு!