பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்கின் ஒரு வார போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.தமிழகத்திலே பல தீவிரவாத சம்பவங்களையும், குண்டு வெடிப்புகளையும் நடத்தி பல உயிர்களை கொன்ற பயங்கரவாதி அபூபக்கர் சித்திக் 30 ஆண்டுக்கு பின் கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டுள்ளான். தமிழ்நாட்டில் பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்டவன் அபுபக்கர் சித்திக். 30 ஆண்டு தலைமறைவாக இருந்த அபுபக்கர் சித்திக்கை ராயசூட்டில் தமிழ்நாடு போலீசார் கைது செய்திருந்தனர். ஆந்திராவில் வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் அபுபக்கர் சித்திக்கை போலீசார் கைதுசெய்தனர். வெடிமருந்துகள் பறிமுதல் வழக்கில் பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் ஆந்திராவின் ராயசூட்டி கோர்ட்டில் ஆஜரானார். வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விரைவில் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்படும் என்றும் ஆந்திர போலீஸ் தெரிவித்தது.
மேலும், அத்வானி ரத யாத்திரையின்போது பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் அபுபக்கரிடம் போலீசார் ஒருவாரம் விசாரணை நடத்தினர். பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்கின் ஒரு வார போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழ் நாட்டில் நண்பகலுக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
