3 பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி இன்று நிறைவடையும் நிலையில், ஆளுநர் மாளிகையில் 3 பல்கலைக்கழக துணைவேந்தர்களும் ஆளுநரை சந்தித்துள்ளனர்.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சந்திரசேகர், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக ஜி.ரவி மற்றும் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் ஆகியோரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், இவர்கள் நேற்று ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்துள்ளனர். இதில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஆளுநர் தரப்பில் பிரிவு உபச்சாரம் வழங்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன், தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களும் துணைவேந்தர்கள் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கி.மீ பாலம் அமைக்க ரூ.195 கோடியா? என அன்புமணி அதிருப்பதி
