- Advertisement -
வரத்து குறைவு காரணமாக தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயா்ந்துள்ளது.தொடா் மழையின் காரணமாகவும், செடிகள் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தக்காளி மற்றும் காய்கறிகளின் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் தக்காளி விலை கிடு கிடுவென உயா்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.50 வரை விற்கப்பட்டது.
இந்நிலையில், இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.10 உயா்ந்து ரூ.60 முதல் ரூ70 வரை விற்பனை செய்யப்படுவதாக கோயம்பேடு சந்தையில் சில்லறை வியாபாாிகள் தொிவித்துள்ளனா். அதே போல் பீன்ஸ், கேரட், உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் சுமாா் ரூ.5 முதல் ரூ15 வரை உயா்ந்துள்ளதாகவும் காய்கறி வியாபாாிகள் வருத்ததுடன் தொிவித்துள்ளனா். கடந்த நாட்களாகவே தக்காளி விலை ரூ.25 வரை உயா்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
