HomeBreaking Newsவிஜய் மாநாடு - வெடிக்கும் அரசியல் பிரச்னை...? தயக்கம் காட்டும் போலீஸ்

விஜய் மாநாடு – வெடிக்கும் அரசியல் பிரச்னை…? தயக்கம் காட்டும் போலீஸ்

-

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி அதாவது வரும் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டு ஏற்பாட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, பல்வேறு குழுக்களை அமைத்து விஜய் தீவிரமாக கண்காணித்து வருகிறார்.

தவெக மாநாடு நுழைவாயில் கோட்டையின் மதில் சுவர் வடிவில் அமைக்கப்பட்டு அதில் இரண்டு யானைகள் இருபுறமும் பிளிரும் வகையில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாடு மேடையின் அருகே காமராஜர், பெரியார், அம்பேத்கர், விஜய் கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. மாநாடு மேடையில் “வெற்றி கொள்கை திருவிழா” என்கிற வாசகத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய போது அதற்கான விளக்கத்தை மாநாட்டில் சொல்வதாக தெரிவித்திருந்தார் விஜய். இதனால் மாநாட்டிற்கு தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் கட்சிக் கொள்கையை மாநாட்டில் விஜய் அறிவிக்க இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் தவெக மாநாட்டிற்கு 50 ஆயிரம் பேருக்கு தான் இருக்கை என போலீஸ் அனுமதி பெற்ற கடிதத்தில் குறிப்பிடப்ப்ட்டிருந்தது. ஆனால், தற்போது மாவட்ட நிர்வாகிகள் கூறும் தகவல்படி பார்த்தால், அந்தக் கூட்டம் இன்னும் 4 அல்லது அல்லது 5 மடங்கு கூட்டம் வரலாம் எனத் தெரிய வந்துள்ளதாம். அப்படி கூடுபவர்களுக்கு போதிய வசதிகள் இன்னும் ஏற்பாடு செய்யப்படாத நிலையில் போலீஸ் தரப்பில் இப்போதே அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல். எது நடந்தாலும் நாம தான் பொறுப்பேற்க வேண்டும். இல்லையென்றால் அரசியல் பிரச்னையாக மாறு. என்ன செய்வது என்று விழி பிதுங்கி நிற்கிறார்கள் காவல்துறையினர்.

MUST READ