2026 சட்டமன்ற தேர்தலில் “மேற்கு மண்டலம் முழுவதும் திமுக முன்னிலை.. அதிமுகவுக்கு ஒரு சில இடங்கள் மட்டுமே கிடைக்கும்..” என ANS கருத்துக் கணிப்பு நிறுவனம் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ளாா்.
சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் அக்னி நியூஸ் சர்வீஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில், வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவுக்கு முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர். சுரேஷ்குமார் தலைமையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் படி, திமுக 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது.
மண்டல வாரியாக பார்க்கையில், தென் மண்டலத்தில் 42 தொகுதிகளிலும், மேற்கு மண்டலத்தில் 32 தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது. மொத்தத்தில் திமுக கூட்டணியே தெளிவான முன்னிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது.
அதிமுக 54 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளதாகவும், அதன் கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு குறைந்த அளவு வாக்குகள் கிடைக்கும் எனவும் கணிப்பு தெரிவிக்கிறது.
சென்னையில் அதிமுகவை விட தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) முன்னிலை பெறும் என்றும், ஆனால் அந்தக் கட்சியின் மொத்த வாக்கு சதவீதம் 10%-க்கு குறைவாகவே இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், நாம் தமிழர் கட்சி 8–9% வாக்குகள் பெறும் வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் வாக்காளர்களின் ஆதரவு திமுகவுக்கு முக்கிய பலமாக இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. 60%-க்கும் அதிகமான பெண்கள் திமுகவுக்கு வாக்களிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக “புதுமைப் பெண் திட்டம்”, “விடியல் பயணம்” போன்ற திட்டங்கள் மற்றும் மகளிர் உரிமைத் தொகை வழங்குதல் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மொத்தத்தில், தற்போதைய அரசியல் சூழலில் திமுக கூட்டணி தெளிவான முன்னிலையில் இருந்து, மீண்டும் ஆட்சியை அமைக்கும் நிலை காணப்படுகிறது என அக்னி நியூஸ் சர்வீஸ் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் – சூரியா சேவியாரின் கருத்து கணிப்பு
