Homeசெய்திகள்தேர்தல் 2026விஜய் ஆர்வக்கோளாறில் அரசியலுக்கு வந்தவர் - நடிகர் சத்யராஜ் தாக்கு

விஜய் ஆர்வக்கோளாறில் அரசியலுக்கு வந்தவர் – நடிகர் சத்யராஜ் தாக்கு

-

- Advertisement -

அம்பத்தூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் சத்தியராஜ் திமுக சார்பில் போட்டியிடும் அம்பத்தூர் வேட்பாளர் டாக்டர் பூர்ணிமாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது தவெக தலைவர் விஜயிள் அரசியல் பிரவேசம் குறித்து பேசுகையில் விஜய் ஆரவக்கோளாறில் அரசியலுக்கு வந்துள்ளாா் என கடுமையாக விமர்சித்துள்ளாா்.விஜய் ஆர்வக்கோளாறில் அரசியலுக்கு வந்தவர் - நடிகர் சத்யராஜ் தாக்கு

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்துக்க கட்சியினரும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி, நடிகர் சத்யராஜ், அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் பூர்ணிமாவை ஆதரித்து பிரச்சார மேற்கொண்டாா்.

we-r-hiring

அம்பத்தூர் கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த பிரச்சார நிகழ்ச்சியில், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சத்யராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், மண்டல குழு தலைவர் பி.கே. மூர்த்தி, பகுதி செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பிரச்சார மேடையில் பேசிய சத்யராஜ், “விஜய் அரசியலுக்கு வந்தது ஆர்வக்கோளாறால். அவரது கட்சியின் கொள்கை தலைவர்களாக பெரியார், அம்பேத்கர் ஆகியோரை கூறினாலும், அதை கட்சித் தொண்டர்களுக்கு சரியாக எடுத்துச் சொல்ல வேண்டும்” என்றார்.

மேலும், “விஜய் ஒரு சிறந்த நடிகர், நல்ல நடனக் கலைஞர். அவர் சினிமாவில் நல்ல இடத்தை பெற்றிருக்கிறார். அதனால் அவரை சினிமாவிலேயே வைத்திருப்பது நல்லது” என்று கூறிய அவர், அரசியல் தளத்தில் விஜயின் திறனை கேள்விக்குட்படுத்தினார்.

மத்திய அரசை எதிர்த்து நிற்கும் தைரியம் விஜய்க்கு இல்லை என்றும் சத்யராஜ் குற்றம்சாட்டினார். “மத்திய அரசிலிருந்து ஒரு சத்தம் வந்தாலே விஜய் ஒளிந்து கொள்வார். அதற்கு எதிராக நின்று பேசக்கூடியவர் நமது முதலமைச்சர் தான்” என்று அவர் தெரிவித்தார்.

அத்துடன், தமிழக அரசியல் சூழலைப் பற்றியும் கருத்து தெரிவித்த சத்யராஜ், “பாஜக மத அரசியலை உருவாக்க முயற்சிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் அது சாத்தியமில்லை. யாரிடமும் தலைகுனியாமல், தைரியமாக நிற்கும் அரசை நாம் ஆதரிக்க வேண்டும்” என்றார்.

​அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’  –  ராகுல் காந்தி தாக்கு…

MUST READ