- Advertisement -
பீகார் மாநிலம் பரவுனி ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே பெட்டிகளை பிரிக்கும் பணியில் ஊழியர் ஒருவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ரயில் பெட்டிகளையும் இன்ஜினையும் இணைக்கும் கப்லிங்கை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு கப்ளிங் நடுவில் சிக்கி உடல் நசுங்கி இறந்தார்.
லோகோ பைலட் என்ஜினை முன்னோக்கி இயக்குவதற்கு பதிலாக பின்னோக்கி இயக்கியதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. ஊழியர் உடல் நசுங்கி இறந்ததை பார்த்து மற்றவர்கள் சத்தம் போட லோகோ பைலட் இன்ஜினில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தார். ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.