spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஒர்க் அவுட் ஆகாத 10 நாள் ரிகர்சல்! ஜேப்பியார் அட்மிஷன் ப்ரமோஷன் மீட்டிங்!

ஒர்க் அவுட் ஆகாத 10 நாள் ரிகர்சல்! ஜேப்பியார் அட்மிஷன் ப்ரமோஷன் மீட்டிங்!

-

- Advertisement -

காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசியது, ஜனநாயன் ஆடியோ வெளியீட்டிற்கான பிரீ பிரமோஷன் என்று சமூக செயற்பாட்டாளர் மணிகண்டன் வீராசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

காஞ்சிபுரம் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடர்பாக தவெக முன்னாள் நிர்வாகி மணிகண்டன் வீராசாமி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஜே.பி.ஆர் கல்வி வளாகத்தில் நடைபெற்றது. விஜய் சந்திப்பு நிகழ்ச்சிக்காக 10 நாட்களாக தன்னார்வலர்களுக்கு பாதுகாப்பு நடவக்கைகள் குறித்து வகுப்புகள் நடைபெற்றது. இதற்காக விடுதி மாணவர்களை காலி செய்து, சொந்த ஊர்களுக்கு அனுப்பி விட்டனர். விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தனியார் அரங்கில் நடத்தியதால், இதற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்கப்படவில்லை. விஜய் வருகையின்போது தொண்டர்கள் வரக்கூடாது என்று தவெக சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இருந்தபோதும் விஜயை பார்க்க ஒரு ரசிகர் முயன்றபோது அவரை பவுன்சர்கள் தூக்கி வீசினார்கள். மதுரை மாநாட்டில் தடுப்புகளில் கிரீஸ் தடவினார்கள். ஆனால் இங்கே தரகத்தை அடித்தார்கள். இதில் இருந்து அவர்கள் எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சி மக்கள் சந்திப்பு கிடையாது. தவெக உறுப்பினர்கள் 2,000 பேரை தேர்வு செய்து அனுமதித்தார்கள். 1500 பெண்களும், 500 ஆண்களும் அனுமதிக்கப்பட்டனர்.

கரூர் சம்பவத்தை பொருத்த வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கி விட்டார்கள். அதோடு அந்த விவகாரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டதால், இந்த வழக்கில் தற்போதைக்கு எதுவும் நடைபெறாது. எனவே தவெகவினர் அவற்றை எல்லாம் மறந்துவிட்டு அடுத்த மனநிலைக்கு சென்றுவிட்டார்கள். கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் ரூ.5000 தருவதாக சொன்னவர், ஜேபிஆர் கல்லூரி உரிமையாளர் மரிய வில்சன் தான். இவர் கல்லூரியில் நடைபெற்ற விபத்து ஒன்றில் அப்பாவி வடமாநில தொழிலாளர்கள் 10 பேர் இறந்து போனார்கள். ஆனால் அவர்களுக்கு எந்த நிதியுதவியும் வழங்கவில்லை. விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியே, மரிய வில்சன் கல்லூரிக்கு அடுத்த கல்வி ஆண்டிற்கு மாணவர் சேர்க்கைக்காக நடைபெறும் புரமோஷன்தான். இவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கியதற்கு கைமாறாக விஜய் புரமோஷன் செய்கிறார். அதற்கு காரணம் சாராயக்கடை நடத்துகிற புஸ்ஸி ஆனந்த் கைகளால் அந்த கல்லூரியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்துகிறார்கள்.

காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசியது என்பது பக்கா மாஸ் ஸ்பீச். ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டை தமிழ்நாட்டில் நடத்தலாம் என திட்டமிட்டார்கள். அது நடக்காததால் மலேசியாவில் வெளியிட உள்ளனர். எனவே இந்த நிகழ்வை ஒரு குட்டி ஆடியோ லான்ச் ஆகவே பார்க்கிறேன். முழுக்க முழுக்க சினிமா வசனங்களை தான் விஜய் பேசினார். விஜய் கட்சி தொடங்கி 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர் ஒட்டுமொத்தமாக பேசியது 3 மணிநேரம் கூட இருக்காது. அண்ணா மக்களிடம் செல் என்று சொன்னதாக விஜய் சொல்கிறார். ஆனால் அண்ணா 24 மணி நேரத்தில் 27 கூட்டங்களில் பேசியவர். நீங்கள் 3 ஆண்டுகளில் 3 மணி நேரம் தானே பேசியுள்ளீர்கள். சேலத்தில் டிசம்பர் 4ஆம் தேதி பேச வேண்டும் என்று விஜய் அனுமதி கேட்கிறார். டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினமாகும். காவல்துறை அனுமதி வழங்க மறுக்கவில்லை. வேறு தேதியை கேட்குமாறு சொல்கிறார்கள். ஆனால் காவல்துறை எங்களை ஒடுக்குவதாக சொன்னார். ஆனால் தற்போது மட்டும் எப்படி காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த வாரம் எஸ்ஐஆர் ஆர்ப்பாட்டத்தின்போதும், காவல்துறை மீது குற்றம்சாட்டினார்கள்.

விஜய் தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளாக வீட்டிற்கு ஒரு இருசக்கர வாகனம், அனைவருக்கும் சொந்த வீடு வழங்கப்படும் என்று சொல்கிறார். தமிழ்நாட்டின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும். வீட்டிற்கு ஒரு பட்டதாரி வர வேண்டும் என்று சொல்கிறார். தேசிய அளவில் உள்ள உயர் கல்வி சராசரியை விட தமிழ்நாட்டில் 51 சதவீதம் உள்ளது. நாம் ஐரோப்பிய நாடுகளுடன் போட்டி போடுகிறோம். தமிழ்நாட்டில் பெண்கள் 40 சதவீதத்திற்கு மேல் பணிக்கு செல்கிறார்கள். தமிழ்நாட்டின் உயர்கல்வி கட்டமைப்புகள் குறித்து எதுவும் தெரியாமல் விஜய் தற்குறித்தனமாக பேசி கொண்டிருக்கிறார். அதனால் தான் அவரை தற்குறிகளின் தலைவன் என்று சொல்கிறோம். தவெக தொண்டர்களை தற்குறி என்று சொல்வது தவறுதான். ஆனால் தவெக தொண்டர்கள் மரத்தின் மீது ஏறுவதும், மூத்த பத்திரிகையாளர் சாம் டேனில்ஸ் கழுத்தில் துண்டை போட்டு இழுப்பதும் தற்குறி தனம் என்று கண்டிக்கிறோம். ஆனால் விஜய் பொதுமக்களை தற்குறிகள் என்று சொல்வதாக கூறுகிறார்.

விஜய் தன்னுடைய கூட்டத்தில் திமுக, தவெக இடையே தான் போட்டி என்று சொல்கிறார். அதை தாண்டி அவர்களுக்கு அரசியல் ரீதியாக என்ன சொல்லிக் கொடுத்தார். நாங்கள் தப்பாக வாக்களித்துவிட்டோம். அரசாங்கம் தப்பாக நடக்கிறது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்கிறார். அப்படி இருந்தால் திமுகவுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டியதுதானே. விஜய் பேசிய கல்வி நிறுவனமே, நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதுதான். மரியவில்சனை அவர் கட்சியில் இருந்து நீக்கிவிடுவாரா? உங்கள் கட்சியிலேயே பிரச்சினை உள்ளபோது திமுக குறித்து பேச என்ன தார்மிக உரிமை உள்ளது. பாலாற்றில் மணல் கொள்ளையில் அனைத்துக் கட்சியினரும் ஈடுபடுகிறார்கள். அவர் ஏன் திமுகவை மட்டும் எதிர்க்கிறார். கோவை, மதுரைக்கு மெட்ரோ அனுமதி வழங்காதது குறித்து விஜய் பேசினாரா? டெல்டாவில் நெல்லுக்கான ஈரப்பதத்தை உயர்த்தாது குறித்து அவர் பேசினரா? காரணம் ஜனநாயகன் படம் வெளியாகும் வரை அவர் மத்திய அரசு குறித்து எதுவும் பேச மாட்டார். ஜனவரி 9க்கு பிறகு வேண்டுமானால் அவர் பேசலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ