அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து ஏற்கனவே ஓபிஎஸ் வெளியேறிய நிலையில், தற்போது பிரேமலதா, டிடிவி தினகரன் போன்றவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் அந்த கூட்டணி கலகலத்து போய் உள்ளது தெரிவதாக ஊடகவியலாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து ஊடகவியலாளர் செந்தில்வேல் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் தெரிவித்துள்ளதாவது:- நேற்று நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் ரூ.395 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரியாவில் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் கடுமையாக பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்த போதும் பெட்ரோல், டீசல் மீது வரிகளை விதித்து அவற்றின் விலையை உயர்த்தியது ஒருபுறம். மற்றொரு புறம் சுங்கக்கட்டணமும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் அரிசி, எண்ணெய், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிப்பிற்குள்ளாவர். கடந்த 7 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.3,200 உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக சில மாதங்களில் மட்டும் ரூ.34,642 கோடி தமிழ்நாடு அரசுக்கு இழப்பு ஏற்படும். இதில் பெரும்பாலான இழப்பு கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களுக்கு தான் ஏற்பட்டுள்ளது.
கொங்கு மண்டலத்தை குறிப்பிட்டு சொல்வதற்கு காரணம் பிரதமர் மோடியை தீவிரமாக ஆதரிப்பவர்கள் அதிகளவில் அங்கு உள்ளதால்தான். ஜிஎஸ்டி வரியால் கடுமையாக பாதிக்கப்பட்டாலும், அவர்கள் பாஜகவை ஆதரிப்பார்கள். தற்போது டிரம்ப் விதித்துள்ள 50 சதவீத வரியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதியும் இந்த கொங்கு மண்டலம்தான். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதால் பாதிக்கப்படும் பகுதிகளில் முதலிடத்தில் இருப்பது கொங்கு மண்டலம். ஆனாலும் மோடி, எடப்பாடி பழனிசாமி என்று சொல்லிக்கொள்வதும் கொங்கு மண்டலம்தான். கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் எடப்படி பழனிசாமி என்கிற ஒரு காரணத்திற்காக அவரை ஆதரிக்க தயாராக இருக்கும் கூட்டம். மத அடிப்படையில் பிரதமர் மோடியை ஆதரிக்க தயாராக இருப்பவர்கள் கொங்கு மண்டலத்தில் கணிசமாக இருக்கிறார்களா? இல்லையா? தற்போது இந்த வரிவிதிப்பால் பாதிக்கப்படப் போவதும் அவர்கள் தான். எனவே, மோடி, எடப்பாடியை ஆதரிப்பது குறித்து அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறார். எப்படியாவது திமுக கூட்டணி உடைந்து விடாதா என்று இலவு காத்த கிளி போல காத்திருக்கிறார். ஆனால் நேற்று என்ன நடந்துள்ளது பிரேமலதா விஜயகாந்த், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் என்று நம்பினோம். முதுகில் குத்திவிட்டார் என்று சொல்லிட்டார். பிரேமலதாவின் இந்த கருத்து மூலம் அதிமுக – தேமுதிக கூட்டணி எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. ஓபிஎஸ், வெளிப்படையாக பாஜகவினர் தங்களை அவமதிப்பு செய்தார்கள் ஒப்புக்கொண்டார். ஆனால் டிடிவி தினகரன் சற்று வித்தியாசமானவர். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பார். பிரதமர் மோடியை ஏன் சந்திக்கவில்லை என்றால், நான் அவரை பார்க்க நேரம் கேட்கவில்லை. அதனால் தரவில்லை என்பார். சரி நிர்மலா சீதாராமன் வந்தாரே, அவரை ஏன் பார்க்கவில்லை. அந்த விழாவுக்கு ஏன் உங்களை அழைக்கவில்லை. எதற்கும் பதில் இல்லை.
அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உடன் ஒரே மேடையில் அமர்வதை விரும்பவில்லை. நேற்று பாஜக கூட்டணியில் நான் இருக்கிறேனா? இல்லையா? என்று நயினாரிடம் கேளுங்கள், அவர் சரியான பதிலை தருவார் என்று தினகரன் சொல்கிறார். கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தங்களை, எடப்பாடி பழனிசாமி வந்த உடன் கழட்டி விடுகிறீர்களா? என்று தினகரனுக்கு கோபம் வந்துவிட்டது. அப்படி கழட்டி விட்டாலும் அவர் எங்கே செல்வார்?. அவரால் தனித்து போட்டியிடவும் முடியாது. அனுபவத்தில் சிறியவரான விஜயின் கட்சிக்கும் போக முடியாது. அப்போது எப்படியும் எடப்பாடி பழனிசாமியிடம் தான் போய் நிற்க வேண்டும். ஆனால் வெளிப்படையாக காட்டக்கூடாது என்பதற்காக நாங்கள் பாஜக கூட்டணியில் தான் இருக்கிறோம் என சமாளிக்கலாம் என்று பார்த்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி, கூட்டணியின் தலைவர் நான் தான். என்னை தாண்டி மோடி, அமித்ஷா உங்களை சந்தித்து விடுவாரா? என்று செக் வைத்து விட்டார். ஒருவேளை தினகரன் மோடியையும், அமித்ஷாவையும் சந்திக்கிற இடத்தில் உள்ளார் என்றால்? அவர் இருவரையும் சந்தித்து காட்ட வேண்டியது தானே?. தற்போது அவர் பாஜக கூட்டணியில் இருக்கிறாரா? என்பதையே நயினார் நாகேந்திரன் சொல்கிற இடத்திற்கு எப்படி வந்தது? அப்போது அதிமுக கூட்டணி இன்றைக்கு கலகலத்து போய் நிற்கிறது என்பதை பார்க்கிறோம்.
அன்புமணி ராமதாஸ் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லிவிட்டார். டோல்கேட் மூலம் எவ்வளவு சம்பாதித்து உள்ளீர்கள் என்று மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்பாவி மக்கள் சிரமப்படுகிறார்கள் என்று அன்புமணி சொல்லாமல் சொல்லிவிட்டார். ஆனால் இந்த நிமிடம் வரை எடப்பாடி பழனிசாமி அதைகூட சொல்லாமல் காலந்தாழ்த்திக் கொண்டு இருக்கிறார். தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அத்தியாவசியய பொருட்கள் விலை மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் உயர்ந்துவிட்டதே, அமெரிக்காவின் வரி விதிப்பால் மேற்குமண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதே, எதற்காகவாவது வாய் திறந்துள்ளீர்களா? இவை எதற்காகவும் நீங்கள் வாய் திறக்க வில்லை என்றால், நீங்கள் மக்கள் நலனுக்கு எதிரி. விரோதி என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.