மெகா கூட்டணி அமைக்கிறபோது கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை வழங்குவது அதிமுகவுக்கு மிகப்பெரிய சவால் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணியில் நிலவும் குழப்பங்கள் குறித்தும், எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள சவால்கள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:-. நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கட்சித் தலைமைக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. அதில் பாளையங்கோட்டை, நெல்லை தொகுதிகளில் அதிமுக தான் போட்டியிட வேண்டும். இல்லாவிட்டால் கட்சி கையை விட்டு போய்விடும் என்று தெரிவித்துள்ளனர். நெல்லை தொகுதி என்பது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தொகுதியாகும். அவர் அதிமுகவில் இருந்துவிட்டு பாஜகவுக்கு சென்றவர். அவரை பிடிக்காதவர்கள் அப்படி சொல்லியிருக்கலாம். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற நயினார் நாகேந்திரனுக்கு எதற்காக தேர்தல் வேலை பார்க்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் 2 தொகுதிகளையும் பாஜகவுக்கு கொடுக்கக்கூடாது என்று சொல்கிறார்கள். எப்படி இருந்தாலும் மாவட்ட செயலாளர் சரிசெய்துவிடுவார். எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளரை அழைத்து சரிசெய்து விடுவார்.
அதிமுக – பாஜக கூட்டணி தேர்தலுக்கு 10 மாதங்களுக்கு முன்பாக அமைந்தது நல்லதற்கா? கெட்டதற்கா? என்று தெரியவில்லை. தற்போது ஏற்பட்டுள்ளது போன்று நிறைய பிரச்சினைகள் வரும். கூட்டணி கட்சிகள் அதிகரிக்க அதிகரிக்க பிரச்சினை அதிகமாகும். நாளை பாமக, தேமுதிக சேரும்பட்சத்தில் ஏற்கனவே தினகரன், ஓபிஎஸ் எல்லாம் இருக்கிறார்கள். தினகரன், ஒபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சீட் வழங்கினால், அதிமுககாரர்கள் கோபித்துக்கொள்வார்கள். நெல்லையில் 2021ல் நயினார் நின்று வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இன்றைக்கு பாஜக தலைவராக உள்ளார். அதனால் அவருடைய செல்வாக்கு தொடரக்கூடாது என்று அதிமுகவினர் குரல் எழுப்புகிறார்கள். கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுகவுக்கு நம்பர்ஸ் கொடுப்பதில் பிரச்சினை. கடந்த முறை அதிமுக 191 இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்கள். அதில் அதிமுக மட்டும் 179 இடங்களில் போட்டியிட்டார்கள். மற்ற இடங்களில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டார்கள். அப்படி இருக்கிற சூழலில் பாஜக மேலும் 20 இடங்கள் கேட்டால், ஏற்கனவே அதிமுக போட்டியிட்ட இடங்களில் கட்சியினர் சும்மா இருக்க மாட்டார்கள். மெகா கூட்டணி அமைக்க அமைக்க எடப்பாடிக்கு தலைவலிதான்.
அதிமுக – பாஜக கூட்டணியில் நீங்கள் பாமகவை சேர்த்தீர்கள் என்றால்? அவர்கள் 30 தொகுதிகளுக்கு குறைவாக கேட்கமாட்டார்கள். மெகா கூட்டணியில் இருந்தாலும், இந்த முறை திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டால், அதிமுகவின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று நினைக்கும். அப்போது, அதிகமான இடங்களில் போட்டியிட விரும்புவார்கள். தேமுதிக 15 இடங்களாவது கேட்கும். தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு பகுதிகளில் அதிமுக, பாஜக தான் தொகுதிகளை பங்கு போட்டுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. தெற்கில் ஓரு அட்வாண்டேஜ் என்ன என்றால்? ஜான்பாண்டியனும், கிருஷ்ணசாமியும் அதிமுக கூட்டணிக்கு வந்தால் சீட் வழங்க வேண்டிய நிலை உள்ளது. இதேபோல், தினகரன், ஒபிஎஸ்க்கும் சீட்டுகளை வழங்க வேண்டும். அதனால்தான் மெகா கூட்டணி அமைப்பது சவால் என்கிறேன்.
நெல்லை மாவட்டத்தில் அதிமுக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் 3வது இடத்திற்கு அதிமுக வந்தது. ஓபிஎஸ், தினகரன் போன்றவர்கள் எதிர்ப்பதாலும், வன்னியர் உள்இடஒதுக்கீடு விவகாரத்தாலும் அதிமுக கோட்டைவிட்டார்கள். அண்ணாமலையை நீக்கிவிட்டு, நயினாரை கொண்டுவந்ததே தெற்கில் அதிமுக – பாஜக கூட்டணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக தான். ஆனால் அவரே அதிமுகவுக்கு பிரச்சினை ஆகிவிட்டார் என்றால்? ஒரு வருஷத்திற்குள்ளாக பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. சமாதானம் ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. தேர்தல் கூட்டணி என்பது தற்காலிகமானதாக இருக்க வேணடும். தோற்றால் கண்டுகொள்ளாமல் அடுத்த வேலையை பார்க்கலாம். இது போல 10 மாதத்திற்கு முன்பு கூட்டணி அமைத்தால், பல பிரச்சினைகள், சிக்கல்கள் இருக்கும். அதிமுக – பாஜக இடையே ஓபிஎஸ்ஐ சேர்க்க வேண்டுமா? என பிரச்சினை ஏற்படும். அல்லது பாஜக சின்னம் போன்ற விஷயங்களை வைத்து இபிஎஸ்.ஐ மிரட்டி ஓபிஎஸ்ஐ எப்படி கொண்டு வருகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அதிமுக – பாஜக திமுக எதிர்ப்பதில் தான் ஒன்றாக உள்ளனர். ஆனால் உங்களுக்குள் உள்ள பிரச்சினையை எப்பேது சரி செய்ய போகிறீர்கள் இவ்வாறு அவர் தெரிவித்தார்