வேலுமணி, செங்கோட்டையன் போன்றவர்கள் சசிகலாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டதாகவும், பணத்தை கொடுத்தாவது கட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
அமித்ஷா – எடப்பாடி சந்திப்பின்போது அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமேதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- எடப்பாடி பழனிசாமி, மிரட்டலுக்கு பயந்து தான் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளார். பாஜக – அதிமுக கூட்டணி அமைந்தால், அதிமுக வாக்குகள் ஒரு சதவீதம் கூட அவர்களுக்கு செல்லாது. இது மிகவும் பொருந்தாத கூட்டணியாகும். ஒரு வேளை பாஜகவின் மிரட்டலுக்கு அடி பணியாமல் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி அமைக்கவிட்டால் அவருக்கு பலன் அளிக்கும். ஆனால் அவரால் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாது. ஊழல் விவகாரத்தில் அனைவரும் சிக்கியுள்ளார்கள். முன்னாள் அமைச்சர்கள் அனைவரது ஜாதகமும் அமித்ஷா கைகளில் உள்ளன. பாஜக நினைத்திருந்தால் இவர்கள் அனைவர் மீதும் அமலாக்கத்துறை பாய்ந்திருக்கும். அதிமுக மீது அவர்கள் கை வைக்காமல் இருப்பதற்கு காரணம் எப்படியாவது அதிமுக தொண்டர்களின் வாக்குகளை வாங்கி விடலாம் என்கிற நம்பிக்கைதான். சிவசேனாவின் நிலைமை தான் அதிமுகவுக்கு ஏற்படும். முதலில் கூட்டணி அமைக்கும். பின்னர் அதிமுகவை விழுங்கிவிடும்.
எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு அழைத்ததன் மற்றொரு நோக்கம் என்பது, அதிமுக ஒருங்கிணைப்பு ஆகும். எஸ்.பி. வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோரை சசிகலா தான் கட்டுப்படுத்துகிறார். அவர் பணத்தை கொடுத்து அதிமுகவை கைப்பற்றும் மனநிலைக்கு வந்துவிட்டார். அதனால்தான் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை சென்று சசிகலா பார்த்தார். களத்திற்கு நான் மீண்டும் வந்துவிட்டேன் என்பதை காண்பிக்க அவ்வாறு செய்தார். எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி. வேலுமணிக்கும் பெரிய அளவில் மோதல் உள்ளது. வேலுமணி தனது இல்ல திருமணத்திற்கு எடப்பாடி பழனிசாமியை அழைக்கவில்லை. திருமண வரவேற்புக்கு அவர் வந்தபோதும், மைக் பிடித்து பேசவில்லை. இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கக்கூடிய மோதலுக்கு பின்னால் உள்ளதும் பாஜகதான். பாஜக, சசிகலா, செங்கோட்டையன், வேமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், தம்பிதுரை என அனைவரையும் பாஜக கைப்பற்றிவிட்டது. அதில் சிக்காதது எடப்படி பழனிசாமி மட்டும்தான். அதனால் தான் அவரது உறவினர் வீட்டில் சோதனை நடத்தி 650 கோடி ஊழலுக்கான ஆதாரங்களை கைப்பற்றியது. அதிமுகவில் இருக்கும் குழப்பத்தை பயன்படுத்தி, பாஜக கூட்டணிக்கு வந்தால் கட்சி இருக்கும், இல்லாவிட்டால் சசிகலாவுக்கு கட்சியை கொடுத்துவிட்டு உங்களை சிறையில் அடைப்போம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனை எடப்பாடி பழனிசாமியும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் அமித்ஷாவிடம் வைக்கப்பட்ட கோரிக்கை என்பது ஓபிஎஸ், சசிகலாவை கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தற்போதைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. இந்த விவகாரத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லியுள்ளார். அந்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இனி எடப்பாடி பழனிசாமியின் நிலைமை என்பது கேள்விக்குறியதுதான். அதற்கான சூழ்நிலையை பாஜக ஏற்படுத்திவிட்டது. அடுத்தபடியாக அண்ணாமலை விகாரம். அதிமுக தொண்டர்கள் எப்படி பாஜகவை வெறுக்கிறார்களோ? அதற்கு நிகராக அண்ணாமலையையும் வெறுக்கிறார்கள். அண்ணாமலை இருக்கக்கூடாது என்பதில் அதிமுகவில் இருவேறு கருத்துக்கள் கிடையாது. இதில் முக்கியமான முன்னேற்றம் என்ன என்றால் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பையா ஜோஷி என்பவரிடம் தமிழ்நாடு, கேரளாவை கவனிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் அண்ணாமலையை மாற்றுவதில் உறுதியாக உள்ளார். அதன் காரணமாகவே அண்ணாமலை அடிக்கடி டெல்லி சென்று திமுக கூட்டணி உடைந்துவிடும் என்று சொல்லி வருகிறார்.
அதிமுக – பாஜக கூட்டணிக்கு நடிகர் விஜயின் த.வெ.க வராது. அதிமுக – பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் எல்லாம் விஜய்க்குதான் வாக்களிக்க போகிறார்கள். அதிமுகவை பாஜக முழுமையாக கைப்பற்றிவிடும். அதனால் அதிமுகவின் கடமையை செய்யப்போகிற இடத்தில் விஜய் கட்சி உள்ளது. அதனால் அதிமுக – பாஜக கூட்டணி என்பது தவெகவுக்குதான் நன்மை செய்துள்ளது. தவெக தனித்து நின்றால் அதிகளவு வாக்குகளை பெற வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு மக்களே பாஜகவுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள்தான். கடந்த தேர்தலில் அவர்கள் தனியாக நிற்கும்போதே திமுக இருவரும் ஒன்றுதான் என்று பிரச்சாரம் செய்தது. அந்த பிரச்சாரம் இன்றைக்கு ஒன்றாகிவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு, பூஜியம் என்று வந்தது. இப்போது அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா என்று சேர்வதால் கட்சி சற்று பலமடையும். சில இடங்களில் கடுமையான போட்டியை கூட அளிக்கலாம். சீமான் அதிமுக – பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டார். ஆனால் பாஜகவுடன் அவர்களுடன் திரைமறைவில் அட்ஜஸ்ட் செய்துகொள்வார். இந்த முறை அவர்களுடைய வாக்குகளையும் தவெக வாங்கிவிடும். இதன் மூலம் தவெக ஒரு பெரிய கட்சியாக உருவெடுக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.