spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகரூரில் விஜய் போட்டி? ஸ்கெட்ச் போடும் செந்தில் பாலாஜி! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

கரூரில் விஜய் போட்டி? ஸ்கெட்ச் போடும் செந்தில் பாலாஜி! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

-

- Advertisement -

விஜய், கரூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகிறது. அப்படி அவர் போட்டியிட்டால் அது மிக பயங்கரமான போட்டியாக அமையும் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்து பேசியது குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் இறந்தவர்களின் இடத்திற்கு சென்று பார்க்காமல், அவர்களை வரவழைத்து பார்த்திருக்கிறார். இது வரலாற்று பிழையாகும். நாளைக்கு விஜய், ஜனாதிபதி, பிரதமர் என்று எவ்வளவு பெரிய உச்சத்துக்கு சென்றாலும், இவர் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து பண்ணை வீட்டிற்கு அருகில் உள்ள நட்சத்திர விடுதியில் பார்த்தார் என்பது ஒரு விமர்சனமாக தான் இருக்கும். இனிமேல் விஜய் அதை சரிசெய்ய முடியாது.

விஜய், பாதிக்கப்பட்டவர்களிடம் கரூரில் மண்டபம் பார்த்தும் அமையவில்லை. அதன் காரணமாகவே சென்னைக்கு அழைத்து சந்திக்க வேண்டியதாகிவிட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதாக அவர்கள் சொல்கிறார்கள். முதலில் ஒரு இரங்கல் கூட்டம் நடத்தப்போகிறீர்கள் என்றால்? அதற்கு எந்த விதமான பிரச்சினையும் இருக்காது என்று சொல்வது முதல் தவறு. இவர்களுக்கு மண்டம் வழங்கினால்,  அங்குள்ள சேர்கள், பொருட்கள் சேதமடைந்தால் யார் பொறுப்பேற்பது. உங்களுக்கு முன்பு சேர் கொடுத்தவர்களின் நிலை என்ன ஆனது? அவர்கள் மீது எந்த பிரச்சினையும் இல்லாதது போல பழியை மற்றவர்கள் மீது போடுவது அபத்தம்.

இன்றைக்கு விஜய் உடன், தவெக, பாஜக நட்பு பாராட்டுகிறார்கள். அவர்களுக்கு தெரிந்த கல்லூரிகளோ, மண்டபங்களோ கிடையாதா? விஜய், கட்சியை சேர்ந்தவர்களுக்கு மணடபமோ, ஓட்டல்களோ கிடையாதா? கரூரில் மட்டும்தான் கிடைக்கவில்லையா? அல்லது திருச்சி, நாமக்கல் போன்ற எந்த இடத்திலும் அவர்களுக்கு மண்டபம் கிடைக்கவில்லையா? பாஜக, அதிமுக தொடர்பு வேண்டாம் என்று நினைத்தார்கள் என்றால்? அதற்கு கட்சியின் சார்பில் கட்டணத்தை செலுத்தி இருக்கலாம்.

கரூரில் உள்ள தவெக தொண்டர்களிடம் வீடு எடுத்து, பாதிக்கப் பட்டவர்களை அழைத்து பார்த்திருக்கலாம். ஏன் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு சென்றிருந்தாலே பெரிய பிரச்சினை எல்லாம் வந்திருக்காது. விஜய்க்கு கரூர் செல்வதற்கு விருப்பமே கிடையாது. அதற்கு பயமா? அல்லது அரசியலா? எது காரணம் என்று தெரியவில்லை.

நயினார் நாகேந்திரன்

விஜய் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் தான், அவர் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை மகாபலிபுரம் அழைத்து வந்து சந்தித்தாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது பச்சை அரசியல். கூட்டணிக்காக நயினார் நாகேந்திரன் விஜய்க்கு ஆதரவாக பேசுகிறார். உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் விஜய் வீட்டை விட்டு வெளியே போக மாட்டாரா? அவரால்தான் மக்களுக்கு அச்சுறுத்தலே தவிர, மக்களால் அவருக்கு அச்சுறுத்தல் கிடையாது.

கரூரில் விஜய் களமிறங்க உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. இதில் சிறிது அளவுதான் உண்மை இருக்கிறது. இதுபோன்ற செய்திகளை ஆங்காங்கே விதைக்கிறார்கள். அப்படி விஜய் கரூரில் நிற்கும்பட்சத்தில் அது சரியான போட்டியாக அமையும். எங்கு பிரச்சினை ஏற்பட்டதோ அங்கிருந்து சரி செய்கிறேன் என்று போய் நிற்பது சரியான விஷயம். ஆனால் எதிரில் நிற்பது செந்தில்பாலாஜி. உச்ச நடிகர், பெரிய அரசியல் கட்சியின் தலைவர் விஜய், கரூருக்கு வர பயப்படுவதற்கு காரணம் யார்?

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Photo: Minister Senthil Balaji

2021 சட்டமன்றத் தேர்தலின்போது கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிற்பதால், செந்தில் பாலாஜியை வேறு தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை ஆலோசனை சொன்னது. அப்போது கரூரில் ஒரு அமைச்சரை தோற்கடிப்பது என்பது என்னால் மட்டுமே முடியும். அதை நான் நம்புகிறேன். கரூர் மட்டுமல்ல ஒட்டுமொத்த மாவட்டத்தையும் சேர்த்து வெற்றிபெற்று வந்து அண்ணா அறிவாலயத்தில் பார்க்கிறேன். இது எனக்கான போராட்டம். நீங்கள் வருத்தப்படாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது தான் சொல்லப்பட்டதாக செய்தி. அது செய்தி அல்ல. அதை நடைமுறைப் படுத்தி காட்டி வெற்றி பெற்றவர். அவர் இன்றைக்கு ஊழல்வாதியாக அன்றைய முதலமைச்சரால் குற்றம்சாட்டப்பட்ட செந்தில்பாலாஜி.

விஜய் கரூரில் போட்டியிடுகிறார் என்றால், அரசியலில் மேலும் வளர நான் விஜயை தோற்கடிப்பேன் என்றுதான் செந்தில் பாலாஜி நினைப்பார். கூட்டநெரிசல் சம்பவத்திற்கு கரூரில் சென்று விசாரித்தபோது அவர்களுக்கு ஊழல் என்பது பெரிய விஷயம் இல்லை. தங்களுக்கு எதாவது ஒன்று என்றால் செந்தில்பாலாஜி தான் செய்வார் என்கிறார்கள். வேறு எங்கு சென்று விசாரித்தாலும் விஜய் பேரை சொல்கிறார்கள். ஆனால் கரூரில் அப்படி இருக்கவில்லை.

கரூர் சம்பவம்: விஜய்க்கு கண்டனம்.... சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

பொதுவாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் போட்டியிடும் தொகுதிகள் முக்கியத்துவம் பெறும். ஒருவேளை விஜய் கரூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்றால் அந்த தொகுதியும் முக்கியத்துவம் பெறும். ஆனால் மற்ற 2 தொகுதிகளை விட பயங்கரமான போட்டி நிலவும் தொகுதியாக கரூர் இருக்கும். காரணம் செந்தில் பாலாஜி என்பவர் வாக்கு அரசியலுக்கு சரியான முறையில் தயாராகிய ஒரு தலைவர் ஆவார்.

அவரை எதிர்த்து ஒரு உச்ச நட்சத்திரமான விஜய். இரண்டுக்கும் சரியாக முட்டிக்கொள்ளும். அதேவேளையில் கொளத்தூரில் முதல்வரும், எடப்பாடியில் எதிர்க்கட்சி தலைவரும் வெல்வது எதிர்பார்த்த ஒன்றுதான். செந்தில்பாலாஜிக்கு திமுகவில் கொடுக்கப்படும் முக்கியத்துவம், மற்ற சீனியர்களுக்கு கோபத்தையும் ஏற்படுத்தும். முதலமைச்சரையோ, முக்கிய அமைச்சர்களையோ செந்தில்பாலாஜியால் எளிதில் தொடர்புகொள்ள முடியும்.

கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ எப்.ஐ.ஆரில் ஏன் விஜய் பெயரை சேர்க்கவில்லை என்று நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி இருக்கிறார். பாஜக கூட்டணிக்காக அவருடைய பெயரை சேர்க்கவில்லையா என்றும் கூறியுள்ளார். மத்திய விசாரணை அமைப்புகள், முதலில் விசாரிக்கும் அமைப்பிடம் இருந்து ஆவணங்களை பெற்று அவர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள். அதற்கு பிறகு தேவைப்பட்டால் கூடுதலாக எப்.ஐ.ஆரில் பெயர்களை சேர்ப்பார்கள்.

விஜய், ஆதவ் போன்றவர்களை எப்.ஐ.ஆரில் சேர்க்கக்கூடாது என்று கிடையாது. ஆனால் எதற்காக அவர்கள் போட வேண்டும்? இந்த விவகாரம் அரசியல் ரீதியாகதான் போகிறது. சீமான் கேட்கும் கேள்வி சரியானதுதான். தமிழக அரசுக்கு பயம். பாஜகவுக்கு ஆதாயம். விஜய் பெயரை சேர்த்தால் பிரச்சினையாகும் என்று தமிழக அரசு பயந்தார்கள். ஆனால் பாஜக எப்ஐஆரில் விஜய் பெயரை சேர்க்கலாமா? என்று கேட்டு விஜயிடம் கூட்டணி பேரம் பேசுவார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ