spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்

பெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்

-

- Advertisement -

பெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்

இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்களின் கவனமெல்லாம் பேட்டரி வாகனங்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. பலரும் பேட்டரி வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை. வாகன ஓட்டிகளிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது, இந்தக் கலக்கத்தை போக்கும் விதமாகவே  பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக  மின்சார வாகனங்களை அறிமுகம் செய்திருக்கின்றனர்.

we-r-hiring

வரும் காலங்களில் பேட்டரி வாகனங்கள் தான் தீர்வு என்பதை உணர்ந்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.

தமிழக அரசு போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத  அனைத்து மின்சார  வாகனங்களுக்கும்  100% விலக்கு அளித்துள்ளது.

சுற்றுப் புறச்சூழலை பாதுகாக்க இத்தகைய வாகனங்கள் பெருமளவு உதவும் என்பதால் அரசு இதற்கு மானியமும் வழங்குகிறது.  நடுத்தர மக்களை கவரும் வகையில் முன்னணி நிறுவனங்கள் பலவும்  பேட்டரி வாகன உற்பத்தியில் இறங்கியுள்ளன.

குறிப்பாக இந்த வாகனங்கள்  70 கி.மீ. தூரம் ஓடுகின்றன என்றபோது, இத்தகைய பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் பற்றி அறிவது அவசியமாகிறது.

எதிர்காலத்தில் பேட்டரி வாகனங்களை ஒட்டாத வாகன ஓட்டிகள் இல்லை என்ற நிலை உருவாகும்.  சைக்கிளில் இருந்து இருசக்கர வாகனங்களுக்கு மாறியது போல், இந்த இருசக்கர வாகனங்களில் இருந்து அனைவரும் மின்சார வாகனங்களுக்கு மாறும் காலம்  வெகு தூரத்தில் இல்லை.

எனவே இப்போது சந்தைக்கு வந்துள்ள பேட்டரி இரு சக்கர வாகனங்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.

தொழில்நுட்ப ரீதியில் இவை எவ்வாறு சிறப்பாக செயல்படுகின்றன என்பதை தெரிந்து கொள்வதன் மூலம், சிறந்த பேட்டரி வாகனத்தை வாங்க உதவியாக இருக்கும்.

ஏதெர் 450 : பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் புதிய தயாரிப்புதான் இந்த பேட்டரி ஸ்கூட்டர்.  இந்த நிறுவனம் தனியாருடன் கூட்டு சேர்ந்து சார்ஜிங் மையத்தையும் பெங்களூருவில் நிறுவி வருகிறது.

இது 3.9 விநாடிகளில் 40 கி.மீ வேகத்தை எட்டும். இதன் முன்பகுதியில் 7 அங்குல தொடு திரைவசதி கொண்ட டேஷ் போர்டு டச் டிஸ்ப்ளே உள்ளது.  இது வாகனம் செல்ல வேண்டிய பாதையை காட்டும். அத்துடன்  பேட்டரிக்கு 3 ஆண்டு வரை உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

இதன் விலை ரூ1.24 லட்சம் ஆகும்.  இதில் அதிகபட்சம் 80 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.  இதில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 கி.மீ. தூரம் வரை பயணிக்க முடியும் என்கிறார்கள்.  4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம்.

ஹீரோ என்.ஒய்.எக்ஸ். இ5 :

இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 45 கி.மீ.  இந்த ஸ்கூட்டரில் லித்தியம் அயன் ரக பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.  இந்த ஸ்கூட்டரில் பிரஷ் இல்லாத டி.சி. ஹப் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பின்புற இருக்கையை மடித்துவிட்டு அதில் லோடு ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைத்துள்ளனர். இதன் பேட்டரிக்கு 3 ஆண்டுகள் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இதன் விலை ரூ.50,490 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கி.மீ. வரை பயணிக்கலாம்.  இந்த பேட்டரி சார்ஜ் ஆக 4 மணி நேரம் ஆகும்.

ஒகினாவா பிரைஸ்: இந்தியன் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஒகினாவா, இரண்டு பேட்டரி ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

பிரைஸ் மற்றும் ரிட்ஜ் என்ற பெயரில் இவை அறிமுகம் ஆகியுள்ளன.  இதில் ஒரு கி.மீ. தூரம் பயணிக்க 10 காசு மட்டுமே செலவாகும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது மூன்று கண்கவர் வண்ணங்களில் வெளிவந்துள்ளது.

மேலும் இதில்  திருடு போவதை எச்சரிக்கும் அலாரம், பொத்தானை அழுத்தி ஸ்டார்ட் செய்யும் வசதி, ஸ்கூட்டர் இருக்குமிடம் அறியும் வசதிகளும்  உள்ளன.

மொபைல் சார்ஜ் செய்வதற்கான போர்ட், தள்ளிச் செல்லும்போது உதவும் முன்புற, பின்புறம் சுழலும் வசதி, பகல் நேரங்களில் ஒளிரும் விளக்கு ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும்.

இதன் விலை ரூ. 59,889. அதிகபட்ச வேகம் மணிக்கு 75 கி.மீ. ஆகும். பேட்டரி சார்ஜ் செய்தால் 170 கி.மீ. முதல் 200 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். சார்ஜ் ஆக 6 மணி முதல் 8 மணி நேரம் வரை ஆகும்.

MUST READ