சாதிகள் ஒழிக்கப்படும் வரை திராவிட இயக்கம் இருந்துகொண்டே இருக்கும் என்று திராவிட இயக்க சிந்தனையாளர் மருத்துவர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் திமுக மீது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து மருத்துவர் காந்தராஜ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பின்போது, திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் திமுக தான் சாதி மறுப்பு கட்சியாகுமே. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை எப்படி அவர்களது வெற்றியாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர்கள் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள அவசியம் இல்லை. சனாதன கோட்பாட்டின் அடிப்படையில் பெண்கள் இழி பிறவிகள் ஆவர். நீங்கள் மேல் சாதியாக இருந்து என்ன புண்ணியம் ராமர் கோவில் திறப்புக்கு உங்களை கூப்பிடவில்லையே. அவரையும்தான் ஓரங்கட்டினார்கள். திரவுபதி முர்மு, பட்டியலினத்தவர். விதவை. பெண் என்று சனாதனத்திற்கு முழு விரோதம். அதனால் ஜனாதிபதியாக இருந்தாலும் அவர் பங்கேற்க முடியாது. அதை ஒழிக்கத்தான் திமுக பாடுபடுகிறது. நீங்களும் கோவிலுக்குள் போக வேண்டும் என்றுதான் திமுக பாடுபடுகிறது. சாதிகளை ஒழிக்கும் வரை இந்த திராவிட இயக்கங்கள் இருக்கும். சாதிகள் ஒழிந்து சமத்துவம் வந்துவிட்டால் திராவிட இயக்க தேவையில்லை.
சாதி என்பது இருப்பதால்தான் சாதி மறுப்பு என்று சொல்கிறோம். கடவுள் மறுப்பு என்று ஏன் சொல்கிறோம். அதை வைத்து மக்களை ஏற்றுவதால் சொல்கிறோம். உனக்குதான் கடவுள் இல்லையே என்று சொன்னால் என்ன அர்த்தம்? சாதிவாரி கணக்கெடுப்பை திமுக ஆதரிப்பது ஏன் என்று நிர்மலா சீதாராமன் கேட்கிறார். அப்படி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் நீங்கள் 3 சதவீதம் தான் என்று நிரூபிக்க முடியும். பாஜகவில் தமிழ்நாட்டை சேர்ந்த எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எல்லாம் கிடைக்காத வெளிச்சம், நிர்மலா சீதாராமனுக்கு ஏன் கிடைக்கிறது. ஏனென்றால் நீங்கள் பிராமணர் சாதியை சேர்ந்தவர் என்பதால் தான். அதனால் தான் உங்களை தூக்கி தலையில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை ஒழிப்பதுதான் திராவிடம். கட்சியில் உங்களுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை எல். முருகனுக்கும் கொடுக்க வேண்டும். உங்கள் வீட்டில் எல்.முருகன் வந்து சாப்பிட வேண்டும். அவர் வீட்டில் நீங்கள் சென்று சாப்பிடுவது இல்லை. அது வருகிற வரை திமுக இருக்கும். 3 சதவீதம் இருந்துகொண்டு நீங்கள் எந்த எந்த பதவிகளில் எல்லாம் உட்கார்ந்து கொண்டு இந்தியாவையே ஆட்டம் காட்டி கொண்டிருக்கிறீர்கள் என்பதை நிருபிப்பதற்காக தான் சாதிவாரி கணக்கெடுப்பு கேட்கிறோம். அதனால்தான் அவர்கள் பயப்படுகிறார்கள். எங்களை காட்டிக் கொடுத்து விடுவார்களோ என்று பயப்படுகிறார்கள்.
பாஜக ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கிறார்கள் என்றால், அவர்கள் என்ன கோணத்தில் எடுப்பார்கள், அதில் என்ன முடிவுகள் வரப் போகிறது என்று யாருக்கும் தெரியாது. அமித்ஷாவும், மோடியும் என்ன செய்வார்கள் என்று யாருக்கு தெரியும். அதில் என்ன ஒரு விஷயம் என்றால் அமித்ஷா, மோடி இருவருமே பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். அவர்களுக்கும் தெரியவரும் நம்ம சாதி எங்க இருக்கிறது என்று. இன்றைக்கும் தமிழ்நாட்டில் பல்வேறு தெருக்களின் பெயர்களில் சாதி இருக்கிறது. அது இன்னும் ஒழியவில்லை என்று நிர்மலா சொல்லியுள்ளார். அது உண்மைதான். அதை நான் மறுக்க மாட்டேன். 1957, 1962, 1967 ஆகிய 3 சட்டமன்ற தேர்தல்களிலும் திமுகவில் சாதி பார்த்து யாரும் போட்டியிடவில்லை. அப்படி அப்படியே அந்த ஊர்களில் நின்றவர்கள் போட்டியிட்டார்கள். 1971 தேர்தல் வந்தபோதுதான் மீண்டும் சாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிற்க வைத்தன. இந்த ஊரில் இந்த சாதிக்காரர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அந்த சாதிக்காரர்களை தேர்தலில் நிற்க வைக்கலாம் என்பது அன்றைக்கு இருந்த காங்கிரஸ் அரசாங்கம் கொண்டு வந்ததாகும். அகிலன் அது குறித்து பெரிய நாவலே எழுதினார். அன்றைக்கு இருந்த ஒரு தினசரி பத்திரிகை தமிழ்நாட்டின் மிகப்பெரிய சாதிகள் என்ன என்று தினமும் போட்டார்கள். இப்படி எல்லாம் செய்து, ஒழிந்திருந்த சாதியை மீண்டும் கொண்டு வந்தார்கள். பேருக்கு பின்னால் போடாத ஒரே புண்ணியத்தை தவிர தமிழகத்தில் சாதியை ஒழித்துவிட்டோம் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் கிடையாது.
திமுக அமைச்சர்கள் 2 பேர் பதவி இழந்தார்கள். குற்றாவளி என்று நிரூபிக்கவில்லையே. உச்சநீதிமன்றம் ஜாமின் வேண்டும் என்றால் பதவியை விடுங்கள் என்கிறார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஜாமின் கொடுப்பதற்கும், பதவிக்கும் என்ன சம்பந்தம். தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் முதலமைச்சராக இருந்து தேர்தலில் தோற்றவர்கள் 3 பேர். அவர்கள் பக்தவட்சலம், அதற்கு பிறகு வி.என்.ஜானகி. இறுதியாக ஜெயலலிதா. வேறு யாரும் முதலமைச்சராக இருந்து தேர்தலில் தோற்றது இல்லை. அதேபோல் ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்று பதவி இழந்த ஒரே முதல்வர் ஜெயலலிதா. வேறு யாரும் கிடையாது. இதை நிர்மலா சீதாராமனுக்கு சொல்ல வேண்டும்.
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய யாரையாவது ஒருத்தரையாவது கைது செய்தார்களா? பஹல்காம் என்பது பாகிஸ்தானில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் அங்கு பேருந்து வசதி கிடையாது. பல இடங்களில் இறங்கி நடந்து தான் செல்ல வேண்டும். அப்படி பட்ட இடத்திற்கு தீவிரவாதி நடந்தே உள்ளே வந்துள்ளான். அப்போது எல்லையில் என்ன பாதுகாப்பு வைத்திருந்தார்கள் என்று அமித்ஷா தான் பதில் சொல்ல வேண்டும். பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் ஆதரிக்கவில்லை. தீவிரவாதிகளை பிடிப்பதை விட்டுவிட்டு அட்டாரி – வாகா எல்லையை மூடுகிறேன் என்று சொல்வது என்ன? பாதிக்கப்பட்ட மக்களை ராகுல்காந்தி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் சொல்கிறார். ஆனால் பிரதமர் இதுவரை அவர்களை சந்திக்கவில்லை. உத்தரபிரதேசத்தில் 2 பெண்கள் கேட்டார்கள். அவர்களை சிறையில் அடைத்து விட்டார்கள். பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.
பிரதமர் மோடி காஷ்மீரில் அமைதியை கொண்டுவருவார் என்று நடிகர் ரஜினிகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அப்படி நம்பிதான் சுற்றுலா பயணிகள் பஹல்காமுக்கு சென்றார்கள். அதைதான் அமித்ஷாவும் சென்னார். காஷ்மீர் அமைதிப்பூங்காவாக உள்ளது. எல்லோரும் சுற்றுலா போங்க என்று சொன்னார். பிறகு தான் தெரிகிறது சுற்றுலா எங்கே செல்வது என்று. இப்படிபட்டவர்களின் பேச்சை நம்பி சென்றுதான் 26 பேரின் உயிர்கள் அநியாயமாக போனது. பிரதமர் மோடி என்ன என்ன போராட்டம் நடத்தினார் ரஜினிகாந்துக்கு தான் தெரியும். ஆக இவருக்கும் மிரட்டல் வந்துள்ளது என்றுதான் அர்த்தம். அவர்கள் ரவுண்ட் அடித்து ரவுண்ட் அடித்து ரஜினிகாந்தை பார்த்தார்கள். விஜயை பார்த்தார்கள். எதுவும் தேறவில்லை. தற்போது மீண்டும் ரஜினிகாந்திடம் போய்விட்டார்கள். மறுபடியும் கதை வசனம் எழுதி கொடுக்கிறார்கள். அந்த சீனை ரஜினிகாந்த் நடிக்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.