spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜய் கைதுக்கு சிபிஐ தீவிரம்! டிரைவர் கக்கிய உண்மைகள்! அமித்ஷா போட்ட பகீர் ஆர்டர்!

விஜய் கைதுக்கு சிபிஐ தீவிரம்! டிரைவர் கக்கிய உண்மைகள்! அமித்ஷா போட்ட பகீர் ஆர்டர்!

-

- Advertisement -

கரூர் சம்பவத்தின்போது வீடியோ வெளியிட்டு சவால் விட்ட விஜய், சிபிஐ, வருமான வரித்துறைக்கு சவால் விடுக்காதது ஏன்? என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

we-r-hiring

விஜய்க்கு ஜனநாயகன் பட பிரச்சினை, சிபிஐ, வருமான வரித்துறை என நெருக்கடிகள் முற்றும் நிலையில், இதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- தவெக தலைவர் விஜயின் ஜனநாயகன் படத்திற்கு அவசர அவசரமாக சென்சார் போர்டு தடை வாங்குகிறது. கரூர் கூட்டநெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு நாளை ஆஜராக வேண்டி சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் அவர் மீதான வருமான வரி வழக்கும் திடீரென சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படுகிறது. இந்த நடவடிக்கைகளின் மூலம் பாஜக ராஜதந்திரமாக செயல்படவில்லை என்பது தெரிகிறது.

விஜயை மிரட்ட சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவை தேவையே இல்லை. அவரை காவல்துறையை அழைத்தே பேசி இருக்கலாம். அல்லது விஜய்க்கு நெருக்கமானவர்களை விசாரணைக்கு அழைத்தால், விஜய் தாமாகவே போயிருப்பார். இந்த சாதாரண விஷயம் அமித்ஷாவுக்கு தெரியவில்லையா என தோன்றுகிறது. ஆனால் அவரை மடக்க சிபிஐ, வருமான வரித்துறை சோதனை என்று அனுப்புகிறார்கள். விஜயின் பிரச்சார வாகனத்தை ஆயுத பூஜை அன்று சுத்தம் செய்து கழுவிட்டார்கள். அதில் எந்தவிதமாக தடயங்களும் இருக்க வாய்ப்பு இல்லை. இந்த சூழலில் அந்த வேனை பறிமுதல் செய்துள்ளனர். அதில் என்ன கொலையாளியின் கைரேகை பதிவாகி இருக்கப் போகிறதா? இதை வேண்டும் என்றே எடுத்திருக்கிறார்கள்.

விஜய்க்கு வேண்டப்பட்ட முக்கிய நபரை போலீசார் விசாரணைக்கு அழைத்தாலே, அவர் தாமாகவே விசாரணைக்கு வருகிறேன் என்று போயிருப்பார். கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தின்போது சிஎம் சார் என்னிடம் நேரடியாக மோதுங்கள். என் ரசிகர்களிடம் மோதாதீர்கள் என்று சொன்ன வாய், இன்று புஸ்ஸி ஆனந்தை பிடித்துச்செல்கிற போது சிபிஐ, வருமான வரித்துறையினரிடம் சொல்லி இருக்க வேண்டும். அவர்கள் இவரை தேடி வர மாட்டார்கள். இவர் தான் டெல்லிக்கு போக வேண்டும். இந்த விவகாரத்தில் விஜய்க்கு வேன் ஓட்டுநராக வந்தவர் தான் மாட்டிக் கொண்டார். பாஜகவினர் ஆதவ் அர்ஜுனாவிடம் காசு கொடுத்து, அவர் கொடுப்பது போல விஜய் கட்சிக்கு செலவு செய்தனர்.

தாங்கள் சொல்லும்போது விஜயை அழைத்துவர வேண்டும் என்று சொல்லி இருந்தனர். தற்போது ஆதவ் அர்ஜுனா தலைவர்களை பார்க்கலாம் வாங்க என்று டெல்லிக்கு கூப்பிடுகிறபோது விஜய் வர மறுக்கிறார். நீ தான் கைக்கூலியா, நீ தான் இவ்வளவு வேலையை செய்ததா? என்று விஜய் கடுப்பாகி விட்டார். அவர் வர முடியாது என சொன்னதை ஆதவ் அர்ஜுனா போய் சொன்னதும், காசை வாங்கிக் கொண்டு வர மறுப்பாயா? என கேட்கிறேபோது விஜயை அழைத்து போங்க என சொல்கிறார். அதனால் விஜயை விசாரிக்கிறார்கள். விஜய் கடைசியில் அமித்ஷாவிடம் தான் போய் நிற்க வேண்டும்.

விஜயின் படத்தை விட மறுக்கிறார்கள். அவரிடம் இருந்து பணத்தையும் பிடுங்க பார்க்கிறார். அரசியலை விட்டே விரட்டவும் முயற்சிக்கிறார்கள். கடந்த ஒரு வார காலமாக ஆதவ் அர்ஜுனா பேசவே இல்லை. இதை தான் நாம் தொடக்கத்தில் இருந்தே சொல்லி வந்தோம். விஜயை குழிக்குள் தள்ளப்போவது ஆதவ் அர்ஜுனா தான். அவர் ஆதவ் அர்ஜுனாவிடம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விஜய் சிறைக்கு சென்றால் அதற்கு காரணம் ஆதவ் அர்ஜுனா தான். புஸ்ஸி ஆனந்த், ஜனநாயகன் படத்தின் போஸ்டரை கோயிலில் வைத்து பரிகார பூஜைகளை செய்துள்ளார். அவர் என்ன செய்தாலும் சென்சார் போர்டுகாரர்கள் சான்றிதழ் தர மாட்டார்கள்.

அனுமதி வேண்டும் என்றால் அமித்ஷா வீட்டிற்கு சென்று முட்டை மந்திரித்து வைக்க வேண்டும். டெல்லியில் அவர்கள் என்ன செய்தாலும் எடுபடாது. விஜய் சினிமாவே வேண்டாம் என்று செல்கிறபோது இந்த படம் வெளியே வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? என்று அவர் கும்பிடுகிற சாமியே கூட நினைக்கும். எனவே படப் பெட்டியை வீசி விட்டு, அரசியலுக்கு போங்க, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ