முட்டை புதுசா, பழசா கண்டுபிடிப்பது எப்படி?
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் முட்டைக்கு முக்கிய இடம் உண்டு, புரோட்டின் சத்து நிறைந்த முட்டைகள் குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கப்படும் ஒர் உணவும் கூட. ஆனால் இந்த முட்டைகளிலும் கலப்படம் என்றால் என்ன செய்வது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 14ம் தேதி ‘உலக முட்டை தினம்’ கொண்டப்பட்டு வருகிறது. முட்டைக்கும் ஒரு தினமா? என்று நீங்கள் கருதலாம்.. அப்படி உலக தினம் வைத்து கொண்டாட படும் இந்த முட்டையின் சிறப்புகள் பலருக்கும் தெரிந்திருக்கும், ஆனால் இந்த உலக தினம் கொண்டாடப்படுவதே மக்களுக்கு அதன் நன்மை தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தத் தான் என்பது நம்மில் பலர் தெரிந்திருக்கவில்லை.
ஒவ்வொரு முட்டையிலும் 6.3 கிராம் புரோட்டின் சத்து நிறைந்து இருக்கும். வெள்ளைக்கருவில் 3.5கிராமும், மஞ்சள் கருவில் 2.8 கிராமும் இருக்கும்.
முட்டையின் வெள்ளைக்கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டஷியம், சோடியம், சல்பர், ஜிங்க் உட்ப்பட 11 மினரல்கள் இருக்கும். மலிவான விலையில் கிடைக்கும் ஒரு ஊட்டசத்து நிறைந்த உணவு எதுவென்று கேட்டால் அதில் முட்டைக்கு முக்கிய இடம் உண்டு.
அப்படி நாம் தேடி சென்று வாங்கும் முட்டை புதியதா, பழையதா? கலப்பட முட்டையா? முட்டையை எத்தனை நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்? என்பது போன்ற உங்களது சந்தேகங்களுக்கு இதோ விடை..
*முட்டை வாங்கும் பொழுதே அவை வெள்ளையாக உள்ளதா எனப் பார்க்க வேண்டும். பழைய முட்டையாக இருந்தால் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
*அல்லது ஒரு முட்டையை கையில் எடுத்து, காதின் ஓரம் வைத்து அசைவு கொடுக்கவும், 10 நிமிடம் கூர்ந்து கவனிக்கவும் சிறிது ஓடு உடையும் சத்தம் கேட்டால் நல்ல முட்டையல்ல. அது சமையலுக்கும் ஏற்றது அல்ல.
*ஒரு பாத்திரத்தில் முட்டையை வைத்து அதற்கு மேல் தண்ணீரை நிரப்பிக் கொள்ளவும்; நல்ல முட்டை என்றால் தண்ணீரில் மூழ்கி விடும்
கெட்ட முட்டை என்றால் தண்ணீரின் மேல் மிதக்கும்.
*முட்டை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் பொழுது அதற்குரிய இடத்தில் (Egg Tray) வைக்க வேண்டும், Egg Tray-யில் மட்டும் தான் அதற்கான தட்பவெப்ப நிலை இருக்கும். விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும்.
*குறைந்தது 3 வாரத்திற்கு மேல் உபயோகிக்க கூடாது. குளிர்ச்சி தன்மை இல்லாத சுழலில் 3 நாட்களுக்கு மேல் உபயோகிக்க கூடாது.
* தோசைக்கல்லின் மேல் முட்டையை உடைத்து ஊற்றும் பொழுது மேல் எழும்பினால் அது நல்லவை
* மேல் எழும்பாமல் கல்லில் நிறைந்து ஓடினால் அது பழைய முட்டை
* சாதாரண முட்டையில் சால்மோநெல்லா என்ற கிருமி இருப்பதனால் பச்சையாக சாப்பிடாமல், சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. குறைந்தது 2மணி நேரத்திற்குள் சமைத்த முட்டையை சாப்பிட வேண்டாம்.
*நாட்டுக்கோழி முட்டையை பச்சையாக சாப்பிடலாம். ஆனால் வேக வைத்து சாப்பிட்டால் இருமடங்கு சத்து கிடைக்கும்.