spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஉடைகிறதா காங்கிரஸ் கட்சி? எனக்கு ப.சிதம்பரம் அனுப்பிய மெசேஜ்! திருஞானம் நேர்காணல்!

உடைகிறதா காங்கிரஸ் கட்சி? எனக்கு ப.சிதம்பரம் அனுப்பிய மெசேஜ்! திருஞானம் நேர்காணல்!

-

- Advertisement -

மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்களால் திமுக கூட்டணியின் ஸ்பிரிட்டை பாஜக குறைத்துவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் திருஞானம் குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

திமுக – காங்கிரஸ் நிலவும் மோதல் போக்கின் பின்னணி குறித்து புன்னகை இதழ் ஆசிரியர் திருஞானம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- காங்கிரஸ் ஒரு பல வண்ண கட்சி. அதில் ஏகப்பட்ட குழுக்கள் இருக்கும். அண்மையில் உருவாகியிருக்கும் ஒரு குழு ஆர்.எஸ்.எஸ் குழுவாகும். ஆர்.எஸ்.எஸ் நபர்களால் திட்டமிட்டு திணிக்கப்பட்ட ஒரு குழு. அதனுடைய குரல்தான் பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர், திருச்சி வேலுச்சாமி போன்றவர்கள். இவர்களை எல்லாம் குருமூர்த்தி தூக்கிப் பிடிக்கிறபோதே தெளிவாக தெரியும் இது ஆர்.எஸ்.எஸ் அணி என்று. குருமூர்த்தியின் எக்ஸ் பக்கத்தில் இவர்களின் ஆதரவு தொடர்ச்சியாக தரப்படும். இதுபோன்ற சக்திகளை உடனடியாக கண்டறிந்து களையக்கூடிய நிலையில் காங்கிரஸ் தலைமை இல்லை.  ஒரு கட்சி வளர கொள்கை மற்றும் களப்பணியாற்றுவது அவசியம். இவற்றை அவர்கள் செய்யவில்லை.

கொள்கை அளவில் பிரவீன் சக்கரவர்த்தியோ, மாணிக்கம் தாகூரோ ஆர்எஸ்எஸ்-ஐ எந்த இடத்திலும் எதிர்த்து பேசியது கிடையாது. தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் களையப்பட வேண்டும் என்று நினைக்கும் குருமூர்த்தி இவர்களை உயர்த்திப் பிடிக்கிற போது, அவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். இரண்டாவது களப்பணிகள் எதுவும் கிடையாது. மதுரை கோ.தளபதி சொன்னது உண்மை. இன்றைக்கு காங்கிரசில் களப்பபணியாற்ற யாரும் இல்லை. தொகுதிக்கு 3000 பேர் கூட இல்லை. வாக்குச்சாவடி முகவர்களோ, தேர்தல் களப்பணி ஆற்றுவதற்கான அமைப்புகளோ இல்லை.

இன்றைய தேர்தல் காலகட்டத்தில் சிறிய வாக்கு வங்கி உள்ள கட்சிகளும் முக்கியம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணியை ஒருங்கிணைத்து செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். 2011, 2016 தோல்விகள் தந்த படிப்பினை மிகவும் வலிமிகுந்தது. ப.சிதம்பரம், எவ்வளவு அக்கரையோடு ஸ்டாலின் கூட்டணியை ஒருங்கிணைத்து செல்கிறார் என்று வியப்போடு சொல்லியுள்ளார். 2021, 2024 தேர்தல்களில் கூட்டணி கட்சி தலைவர்களை மதித்து, அரவணைத்து செல்கிற பண்பு மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது. ஆனால் கூட்டணி கட்சித்தலைவர்களை மதித்து நடத்துவதில் ராகுல்காந்தி மிகவும் பலவீனமானவர். அதில் அவர் அக்கறை காட்டுவதில்லை.

திமுக, காங்கிரஸ் கட்சிகளில் தீவிரமாக களமாடக்கூடியவர்கள் இந்த கூட்டணி தொடர வேண்டும் என்று நினைக்கும் சூழலில், பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதில் கட்சி தலைமையும் தலையிடாத நிலையில் கூட்டணி தொடருமா? தலைமையின் எண்ணம் என்ன? என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு கேள்வி எழுப்பி குறுஞ்செய்தி அனுப்பினேன். அவர் Yes என்று பதில் அளித்தார். எனவே 100 சதவீதம் இந்த கூட்டணி தொடரும்.

"1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகம் செய்தாலும் வியப்பதற்கில்லை"- ப.சிதம்பரம் ட்வீட்!
File Photo

பிரவீன் சக்கரவர்த்திக்கு பதில் அளித்திருக்கும் கார்த்தி சிதம்பரம், அவர் காங்கிரசில் உள்ள ஒரு அணியின் நிர்வாகி மட்டுமே, கட்சி தலைமை எடுக்கும் முடிவை அவரால் மாற்ற முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளார். ராகுல்காந்தியை குழப்புவதில் முக்கியமான நபர் கே.சி.வேணுகோபால். அவருக்கு கேரளா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வென்றால் முதல்வராக வேண்டும் என்கிற ஆசை உள்ளது. அதற்கு விஜய் உதவுவார் என்று நினைக்கிறார். அதுமட்டுமின்றி மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி போன்றவர்களை ராகுல்காந்தியை சந்திக்க வைத்து அதற்கு தூபம் போடுகிறார்.

அண்மையில் மதுரை மாவட்ட செயலாளர் கோ.தளபதி பேசிய வீடியோவை ராகுல்காந்தியிடம் அவர் போட்டுக்காட்டியதாகவும் கூறப்படுகிறது.  அந்த வேலை செய்வதற்கு இவர்களுக்கு துணை போவது கே.சி.வேணுகோபால். ஆனால் திமுக கூட்டணி தொடர வேண்டும் என்று நினைப்பவர்கள் ராகுலுக்கு நெருக்கமாக இல்லை. அந்த இடைவெளியை கே.சி.வேணுகோபால் பயன்படுத்திக் கொள்கிறார். அதை மதிப்பிடுவதில்  ராகுலுக்கு குழப்பம் உள்ளது. ஆனால் அது நீண்ட காலம் நீடிக்காது. ஒருசில நாட்களில் நல்ல அறிவிப்புகள் வரலாம்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டு, மாநிலம் தழுவிய காங்கிரஸ் உருவாக போவதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் அதற்கு சாத்தியமில்லை. பிரதான காங்கிரஸ் திமுக அணியோடுதான் வரப் போகிறது. ஆர்எஸ்எஸ் காங்கிரஸ் வேண்டுமானால் விஜயுடன் போகலாம். அதுவும் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், திருச்சி வேலுசாமி போன்ற தொண்டர்களின் ஆதரவு இல்லாதவர்கள்தான் போவார்கள். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் என்பது திமுக Vs என்டிஏ என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

ஆனால் ஆர்எஸ்எஸ் பிரிவு காங்கிரஸ்காரர்கள், தமிழ்நாடும் ஆர்எஸ்எஸ் – பாஜகவால் மிகப்பெரிய பாதிக்கப்படுவதை ஏற்க மறுக்கிறார்கள். பாஜகவுக்கு எதிராக தமிழ்நாட்டில் மட்டும் தான் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் கொள்கை தெளிவோடு போராடுகிறார்கள். அவர்களுடைய நம்பிக்கையை உடைக்கும் வேலையை தான் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் செய்கிறார்கள். இவர்கள் கூட்டணியில் பலவீனத்தை உருவாக்கும் வேலையை ஏற்படுத்திவிட்டனர்.

இந்த சூழலில் திமுக கூட்டணிக்கு பிளஸ் பாய்ண்ட் ஆக மணிசங்கர் அய்யரின் கருத்து அமைந்துள்ளது. இந்தியா கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆர்எஸ்எஸ்-ஐ எதிர்த்து தேசிய அளவில் களமாடவேண்டிய ஒரு இயக்கத்தை வழிநடத்த அனுபவம் வேண்டும். பீகார் தேர்தலுக்கு கடைசி வரை கூட்டணியை இறுதி செய்யாமல் இருந்ததுதான் காரணம். தமிழ்நாட்டிலும் அதை செய்வதற்கு ஆர்எஸ்எஸ் பிரிவு காங்கிரஸ்காரர்கள் முயற்சி செய்கிறார்கள். அது உடைத்து சரிசெய்யப்படும். மணிசங்கர் அய்யருடைய கருத்து என்பது மிகவும் மெச்சூரிட்டியானது.

திமுக தரப்பில் தனித்துப் போட்டியிட தொண்டர்கள் தயார் நிலையிலேயே உள்ளனர். காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறதா? இல்லையா? என்றும் மட்டும் அறிவிக்க சொல்கிறார்கள். காங்கிரஸ் ஒருவேளை விஜய் கூட்டணிக்கு செல்கிறபட்சத்தில் தேசிய அளவில் பெரிய கூட்டணியை இழக்கும். விஜய்க்கு எவ்வளவு கொடுத்தாலும் 15 சதவீதத்தை தாண்டாது. இவர்களுக்கு 3 சதவீதம் என்றாலும் 18 சதவீதத்தை வைத்து எதுவும் செய்ய முடியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ