spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - எதிரியை முற்றுகையிடுங்கள் - ரயன் ஹாலிடே

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – எதிரியை முற்றுகையிடுங்கள் – ரயன் ஹாலிடே

-

- Advertisement -

தங்களுடைய வாய்ப்புக்காகக் காத்திருந்தவர்கள் சிறந்த மனிதர்கள் அல்லர். மாறாக, அவற்றைத் துணிச்சலாக எதிர்கொண்டு, முற்றுகையிட்டு, வெற்றி கொண்டு, தங்கள் முன்னால் மண்டியிட வைத்தவர்களே சிறந்த மனிதர்கள்” – எஃப். எச். சாப்பின்தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - எதிரியை முற்றுகையிடுங்கள் - ரயன் ஹாலிடேஅமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா முதல் முறையாகப் போட்டியிட்டபோது, 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதவாக்கில் அவர் ஒரு பெரும் சிக்கலைச் சந்திக்க நேர்ந்தது. ஒபாமாவின் முன்னாள் பாதிரியார் எரேமியா ரைட் அளித்திருந்த சில பழைய தேவாலயப் பிரசங்கங்கள் திடீரென்று பத்திரிகைகளில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அது ஒபாமாவுக்குச் சிறிது பின்னடைவை ஏற்படுத்தியது.

பாதிரியார் எரேமியா அளித்திருந்த இரண்டு பிரசங்கங்கள் கறுப்பர் மற்றும் வெள்ளையர் இனப் பிரச்சனை, மதம், தீவிரவாதம் போன்றவற்றின் ஆபத்தான கலவையாக இருந்தன. அரசியில்ரீதியாக அவை பெரும் நாசத்தை விளைவிக்க வல்லவையாக இருந்தன. பொதுவாக இப்படிப்பட்ட அரசியல் அணுகுண்டுகளைச் சந்திக்கின்ற வேட்பாளர்கள் நிலைகுலைந்து உறைந்து போய்விடுவர். இப்படிப்பட்டத் தேர்தல் பிரச்சாரச் சேறுகளில் மாட்டிக் கொள்பவர்கள், பெரும்பாலும் அவற்றிலிருந்து மறைந்துகொள்ள, அவற்றை அலட்சியப்படுத்தவோ அல்லது அவற்றுக்கும் தங்களுக்கும் எந்தவிதமான கிடையாது என்பதுபோலக் காட்டிக் கொள்ளவோ மட்டுமே விரும்புவர்.

we-r-hiring

ஒபாமாவின் அரசியல் பற்றிப் பலருக்கும் வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால் அவா் அதைக் கையாண்ட விதம் அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது தன் பிரச்சாரத்தில் ஒரு கரும்புள்ளியாக உருவெடுத்த ஒரு சம்பவத்தைக் கண்டு ஒபாமா பின்வாங்கிவிடாமல் முன்னேறித் தாக்கினார்.

நடைமுறைப் பாரம்பரியத்தையும் பலர் அவருக்கு அளித்த அறிவுரைகளையும் மீறி அவர் செயல் இறங்கி, அந்த எதிர்மறையான சூழலை, பிறருக்குப் பாடம் கத்துக் கொடுக்கின்ற ஒன்றாக மாற்றிவிட்டார்.

அந்தச் சர்ச்சையின் விளைவாகத் தன்மீது விழுந்திருந்த, நாட்டின் ஒட்டுமொத்த கவனக்குவிப்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அமெரிக்க மக்களைப் பிரித்தாளுகின்ற இனப் பிரச்சனையைப் பற்றி அவர் அவர்களிடம் துணிச்சலாக நேரடியாகப் பேசினார்.

இன்று அவருடைய அந்த உரை, ‘அதிகக் கச்சிதமான சங்கமம்’ என்று அழைக்கப்படுகிறது. அவருடைய பேச்சு, தேர்தல் போக்கை முற்றிலுமாக மாற்றியமைத்த ஒரு நிகழ்வாகும். அந்தச் சர்ச்சைக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று தற்காப்புரீதியில் பேசுவதற்கு பதிலாக, ஒபாமா, எல்லாவற்றைப் பற்றியும் வெளிப்படையாகப் பேசினார். அவருடைய பேச்சு, சர்ச்சையால் உருவாகியிருக்கக்கூடிய ஒரு பெரும் பின்னடைவைத் தவிர்த்ததோடு, அறநெறிரீதியாக அவருக்கு ஓர் உயர்ந்த இடத்தையும் கொடுத்தது. அந்த எதிர்மறையான சூழ்நிலையின் சக்தியால் ஆற்றல் கிடைக்கப் பெற்ற அவருடைய பிரச்சாரம் அவரை வெள்ளை மாளிகையில் கொண்டு போய் அமர்த்தியது.

உங்கள் வாழ்க்கையில் எழுகின்ற வாய்ப்புகளை உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாலே போதும் என்று நீங்கள் நினைத்தால், உங்களால் மாபெரும் விஷயங்களைச் செய்ய முடியாது. சிறிதளவு புத்தியுள்ளஎவனொருவனாலும் அதைச் செய்துவிட முடியும். நீங்கள் எதிர்கொண்டுள்ள சூழலில், உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் பேரழிவைப் பார்க்கின்றபோது, எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவது எப்படி என்பதுதான் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

வெளிப்பார்வைக்கு மோசமாகத் தெரிகின்ற சூழல்களில், மக்கள் துளிகூட எதிர்பாராதிருக்கின்ற சமயத்தில், துரிதமாகச் செயல்பட்டு, ஒரு மாபெரும் வெற்றியை வென்றெடுக்க நம்மால் முடியும். மற்றவர்கள் ஊக்கமின்மையால் தவித்துக் கொண்டிருக்கின்றபோது, சூழலை வேறொரு கோணத்தில் உற்று நோக்கி, தக்கச் செயல்நடவடிக்கையில் நம்மால் இறங்க முடியும்.

நாம் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், நம்முடைய தலைசிறந்த தலைவர்களில் பலர், அதிர்ச்சிகரமான அல்லது எதிர்மறையான நிகழ்வுகளின் ஊடாக அவசியமாகத் தேவைப்பட்டப் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்திருந்ததை நம்மால் அறிந்து கொள்ள முடியும். அவை சாதாரணமான காலங்களில் ஒருபோதும் நிறைவேறியிருக்காது. நம்முடைய சொந்த வாழ்க்கையிலும் இந்த அணுகுமுறையை நம்மால் செயல்படுத்த முடியும்.

வாழ்க்கையில் நீங்கள் அதைச் செய்ய வேண்டும். இதைச் செய்ய வேண்டும் என்று திட்டம் வைத்திருப்பீர்கள்: ஒரு திரைப்படத்திற்குத் திரைக்கதை எழுதுவது. பயணங்கள் மேற்கொள்வது; சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்குவது; ஒரு வழிகாட்டியை அணுகுவது; ஓர் இயக்கத்தைத் தொடங்குவது.தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - எதிரியை முற்றுகையிடுங்கள் - ரயன் ஹாலிடேஆனால் திடீரென்று உங்கள் திட்டத்தில் மண் விழுந்துவிட்டது. ஒரு தோல்வி அல்லது ஒரு விபத்து அல்லது ஒரு சோகமான சம்பவம் உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்துவிட்டது. அதை உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒரு விபத்திலிருந்து நீங்கள் மீண்டு கொண்டிருக்கலாம். அப்படியெனில், நீங்கள் ஆசைப்பட்டத் திரைக்கதையை எழுதுவதற்கு இப்போது நேரம் கிடைத்துள்ளது. வலிமிக்க அனுபவங்கள் ஏற்பட்டு உங்களுடைய உணர்ச்சிகள் கிளறிவிடப்பட்டிருக்கலாம். அதை ஒரு படைப்பாக மாற்றுங்கள். ஒருவேளை நீங்கள் உங்கள் வேலையை இழந்திருக்கலாம் அல்லது உங்களுடைய உறவு முறிந்திருக்கலாம். அது உங்களுக்குக் கடினமானதாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது எந்தச் சிக்கலுமின்றி உங்களுடைய பயணக் கனவை உங்களால் நிறைவேற்றிக் கொள்ள முடியுமே? உங்களுக்கு ஒரு பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதா? கவலைப்படாதீர்கள். நீங்கள் அணுகத் திட்டமிட்டிருந்த வழிகாட்டியை அணுகுவதற்கு இப்போது உங்களுக்கு ஒரு முகாந்திரம் கிடைத்துள்ளது. உங்களுடைய மனத்தின் அடியாழத்தில் வெகுகாலமாகத் தூங்கிக் கிடக்கின்ற திட்டங்களுக்கு உயிர் கொடுக்க இக்கணங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சாதாரண மக்கள் எப்படித் தோல்வியைக் கண்டவுடன் தலைதெறிக்க ஓடுகிறார்களோ, அதுபோலவே எதிர்மறைக் சூழ்நிலைகளைக் கண்டாலும் அவர்கள் ஓடுவர். பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு அவர்கள் தங்களால் முடிந்த அளவு முயற்சி செய்வர். ஆனால் சாதனையாளர்கள் இதற்கு நேரெதிரானதைச் செய்வர். தோல்வி, தனிப்பட்ட இழப்பு என்று எதுவாக இருந்தாலும், அவர்கள் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வர்.

உங்களுக்கு ஏற்பட்டுள்ள ஒரு நெருக்கடியின் காரணமாக, உங்களை நீங்களே வருத்திக் கொள்வது அல்லது உங்கள்மீது ஏமாற்றம் அடைவது போன்றவற்றால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை. நீங்கள் ஒரு வாய்ப்பை வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள், அவ்வளவுதான். துணிகின்றவர்களுக்கே வாழ்க்கை வெகுமதிகளை வழங்குகிறது என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

நமக்கு மட்டும் வாய்ப்புகள் வருவதில்லை என்று நாம் தனியாக உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல. நமக்கு வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

அவற்றைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால், அதற்கு நீங்கள் உங்களைத் தவிர வேறு எவரையும் குறை சொல்ல முடியாது.

போரைப் பற்றி நெப்போலியன் இவ்வாறு எளிய வார்த்தைகளில் விவரித்துள்ளார்: இரண்டு இராணுவங்கள்என்பவை, ஒன்றோடொன்று மோதி ஒன்றையொன்று பயமுறுத்துகின்ற இரண்டு உடல்களைப் போன்றவை. ஒரு இராணுவம் மற்றொன்றின்மீது மோதுகின்ற அக்கணத்தில் ஒரு பீதி ஏற்படும். அக்கணத்தைத்தான் மேம்பட்ட இராணுவத் தலைவன் தனக்குச் சாதகமானதாக ஆக்கிக் கொள்கிறான்.

ஜெர்மானியப் படைத்தளபதி இதற்குப் பெயர் பெற்றவர். துல்லியமாக எக்கணத்தில் முன்னேறித் தாக்க வேண்டும் என்பதை அவர் உள்ளுணர்வுரீதியாக அறிந்து வைத்திருந்தார். அதன் விளைவாக அவர் எண்ணற்ற முறை கடைசி நிமிடத்தில் தோல்விகளை வெற்றிகளாக மாற்றினார்.

போர்களிலும் சரி, வாழ்க்கையிலும் சரி, மோதிக் கொண்டிருக்கின்ற இரு தரப்பினரும் ஒரு கட்டத்தில் எப்படியும் மிகவும் களைப்படைந்துவிடுவர். அக்கட்டத்தில், எந்த அணி பின்வாங்காமல் முன்னேறித் தாக்குகிறதோ. அதுவே வெற்றியடைகிறது.

இதைத்தான் ஒபாமாவும் செய்தார். சச்சரவைக் கண்டு சோர்ந்து போகாமல் அவர் முன்னேறித் தாக்கினார். அது அவருக்கு வெற்றியை ஈட்டித் தந்தது.

இங்கெல்லாம் முட்டுக்கட்டைகள் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டிருந்ததோடு மட்டுமல்லாமல், அவை ஒரு கவட்டையைப்போலப் பயன்படுத்தப்பட்டிருந்தன.

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – உங்கள் ஆற்றலை ஒழுங்குபடுத்துங்கள் – ரயன் ஹாலிடே

MUST READ