spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - உங்கள் ஆற்றலை ஒழுங்குபடுத்துங்கள் - ரயன் ஹாலிடே

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – உங்கள் ஆற்றலை ஒழுங்குபடுத்துங்கள் – ரயன் ஹாலிடே

-

- Advertisement -

சூழ்நிலையால் நீங்கள் உலுக்கப்பட்டால், உடனடியாக நீங்கள் உங்களுடைய அகத்துக்குள் செல்லுங்கள். முடிந்த அளவு உங்களுடைய தாளகதியைத் தவறவிட்டுவிடாதீர்கள்” – மார்கஸ் ஆரீலியஸ்தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - உங்கள் ஆற்றலை ஒழுங்குபடுத்துங்கள் - ரயன் ஹாலிடே

ஒரு டென்னிஸ் விளையாட்டு வீரர் என்ற முறையில் ஆர்தர் ஆஷ் ஓர் அழகான முரண்பாடாக விளங்கினார். அமெரிக்காவில் 1950களிலும் 1960களிலும் நிலவிய கறுப்பர் இனப் பாகுபாடுகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, அவர் டென்னிஸ் விளையாட்டு அரங்கில் தன் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதை அவர் தன் தந்தையிடமிருந்து கற்றிருந்தார். தவறவிட்டுவிட்ட அடிகளுக்காக மனமுடைந்து போவது, மோசமான தீர்ப்புகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பது போன்றவற்றில் அவர் ஈடுபடவில்லை. அவர் ஒரு கறுப்பராக இருந்ததால், தன்னுடைய வெற்றியைப் பிரமாதமாகக் கொண்டாட முடியாத நிலையில் அவர் இருந்தார்.

we-r-hiring

அவர் தனக்குள் இப்படி அடக்கி வைக்கப்பட்டிருந்த உணர்வுகளையும் ஆற்றலையும் தன் விளையாட்டுக்குள் திருப்பிவிட்டார். அதன் காரணமாக, அவர் துணிச்சலாகவும் வசீகரமாகவும் விளையாடினார். அவருடைய முகம் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் இருந்தபோதிலும் அவருடைய உடல் துடிப்பாக இயங்கியது.

உங்களுடைய துரதிர்ஷ்டமான நிலை உங்களுக்கு ஒரு சுமையாக மாறக்கூடும். அல்லது, அது உங்களை இறுக்கத்திலிருந்து விடுவித்து மேம்பட்ட ஒருவராக ஆக்கக்கூடும்.

ஜோ லூயிஸ் என்ற கறுப்பினக் குத்துச்சண்டை வீரர், வெள்ளை இனவெறி கொண்டிருந்த இரசிகா்கள் ஒரு கறுப்பரின் உணர்ச்சி வெளிப்பாடுகளை சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை அறிந்து வைத்திருத்தாா். அதனால் அவர் தன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் இருந்தார். ஆனால், குத்துச்சண்டை வளையத்திற்குள் அவர் தன் போட்டியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். தன்னுடைய பாதகமான நிலையை அவர் ஒரு சாதகமான அம்சமாக மாற்றிக் கொண்டார்.

நாம் கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டிய ஒருசில பாரம்பரிய விதிகளைக் கையாள்வதில் நம் அனைவருக்குமே சில சிக்கல்கள் இருக்கின்றன. சில இடங்களில் கட்டாயமாக ஆக்கப்பட்டுள்ள, குறிப்பிட்ட ஆடைகள் குறிப்பிட்ட முறையில் அணியப்பட வேண்டும் என்ற விதி, சில இடங்களில் நடைமுறையிலுள்ள நடத்தை விதிகள், சட்ட விதிமுறைகள், நிறுவனங்களின் அடுக்கதிகார அமைப்புமுறை போன்ற அனைத்தும் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகின்றன. அவை அளவுக்கதிகமாகும்போது அது நம்மை மூச்சுத் திணற வைக்கிறது. நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், நாம் விளையாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுவிடுவோம்.

இது குறித்து விரக்தியடைவதற்கு பதிலாக அதை நம்மால் நல்லவிதமாகப் பயன்படுத்த முடியும். நாம் இறுக்கமற்றும் துணிவாகவும் இருக்கும்போது நம்முடைய செயல்நடவடிக்கைகள் வலுவடையும். மற்றவர்கள் விதிமுறைகளைப் பின்பற்றுவதில் தீவிரமாக இருக்கின்றபோது, நாம் அதில் நீக்குப்போக்காக இருந்து அவற்றை நமக்கு அனுகூலமாக ஆக்கிக் கொள்ளலாம். நீரைப் பற்றி யோசியுங்கள். அது மனிதனால் ஓர் அணையின் வடிவில் கட்டுப்படுத்தப்படுகின்றபோது, அது வெறுமனே தேங்கித் கிடப்பதில்லை. நீர்மின்சக்தி என்ற வடிவில் ஒரு முழு நகரத்திற்கே அது ஆற்றலை வழங்குகிறது.தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - உங்கள் ஆற்றலை ஒழுங்குபடுத்துங்கள் - ரயன் ஹாலிடேடூசைன்ட் லூவர்ச்சர் என்பவர் ஹைட்டி நாட்டைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் ஓர் அடிமையாக இருந்த அவர் பின்னாளில் ஹைட்டி நாட்டின் படைத்தளபதியாக உயர்ந்தார். தன் நாட்டை ஆக்கிரமித்திருந்த பிரெஞ்சுப் படைகளுக்கு எதிராக அவர் போரிட்டார். அவருடைய உத்திகளைக் கண்ட பிரெஞ்சுப் படையினர், எப்படி இந்த மனிதரால் எல்லா இடங்களிலும் நுழைந்து தாக்க முடிந்தது என்று வியந்தனர். அவர் போர்க்களத்தின் எல்லா இடங்களிலும் புகுந்து புறப்பட்டார். அவரைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு கடினமாக இருந்தது. அவருடைய வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட அனைத்தும் முட்டுக்கட்டைகளாகவே இருந்தன. ஆனால் தன்னால் முடிந்த அளவு அவர் அவற்றை உடைத்தெறிந்தார்.

ஆனால் நாம் விளக்கவுரை அளிக்கவிருக்கின்ற தருணத்தில் நம்முடைய புரொஜெக்டா் திடீரென்று வேலை செய்யாமல் போனால் நம் உடைந்து போய்விடுகிறோம். அதை ஓரமாக ஒதுக்கித் தள்ளி வைத்துவிட்டு, பவர்பாயின்ட் ஒளிப்படங்கள் இல்லாமலேயே நம்முடைய விளக்கவுரையை அருமையாக அளிப்பதற்கு நமக்குக் கிடைத்த வாய்ப்பை நாம் நழுவ விட்டுவிடுகிறோம்.

ஆனால் ஆடுகளத்தில் நிற்கின்ற தலைசிறந்த ஒரு விளையாட்டு வீரரைப் பாருங்கள். உடைத்தெறியப்பட முடியாததாகத் தோன்றுகின்ற தடைகளை அவர் உடைத்தெறிகிறார். அவருடைய இயக்கங்களில் சிலவற்றை நீங்கள் கட்டுப்படுத்தக்கூடும், ஆனால் அவர் தன்னுடைய இலக்கை அடைவதை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது.

ஆனால் நாம் எப்படி? நாம் தடைகளைக் கண்டு துவண்டுவிடுகிறோம். அது வடிகட்டிய பொறுப்பற்றத்தனம். சரியான செயல்நடவடிக்கை நமக்குத் தேவை. நீங்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் இறுக்கமாக இருக்கிறீர்களா? அதற்குப் பதற்றம் என்று பெயர். அதுவும் வேலைக்கு ஆகாது. இறுதியில் நாம் முற்றிலுமாக உடைந்து போகிறோம். ஆனால் உடல் தளர்வாக இருந்து, மனம் கட்டுப்பாட்டில் இருந்தால்? அது ஆற்றல்மிக்கது.

அந்த ஆற்றல்தான் நம்முடைய எதிாிகளையும் போட்டியாளர்களையும் வெலவெலக்கச் செய்யும். நாம் அவர்களை நியாயமற்று நடத்துகிறோம் என்று அவர்கள் நினைத்துக் கொள்வர். வெளியேயிருந்து வருகின்ற அழுத்தங்கள் நம்மை பாதிக்க அனுமதிக்காமல் நம்முடைய இலக்கை நோக்கி நாம் வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பது போன்ற ஒரு பிரமையை அது ஏற்படுத்தும்.

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – தடைக்கற்களை அவற்றுக்கு எதிராகப் பயன்படுத்துங்கள் – ரயன் ஹாலிடே

MUST READ