spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - தடைக்கற்களை அவற்றுக்கு எதிராகப் பயன்படுத்துங்கள் - ரயன் ஹாலிடே

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – தடைக்கற்களை அவற்றுக்கு எதிராகப் பயன்படுத்துங்கள் – ரயன் ஹாலிடே

-

- Advertisement -

”தங்களுடைய பகைகளைக்கூடத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்ற வல்லமை புத்திசாலிகளிடம் இருக்கிறது” – புளுட்டார்ச்தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - தடைக்கற்களை அவற்றுக்கு எதிராகப் பயன்படுத்துங்கள் - ரயன் ஹாலிடேஇந்தியாவின் சுதந்திரத்திற்காக காந்தி சண்டையிடவில்லை. ஆங்கிலேய சாம்ராஜ்ஜியம்தான் மொத்தச் சண்டையையும் போட்டது. அது தோல்விக்கான போராட்டம் என்பதைக் காலம் நிரூபித்தது.

ஆனால், அது திட்டமிடப்பட்ட முறையில் நடத்தப்பட்டது. காந்தியின் சத்தியாக்கிரகங்களும், அவருடைய ஒத்துழையாமைப் போராட்டங்களும், செயல்நடவடிக்கைக்குப் பல்வேறு வரையறைகள் இருப்பதை எடுத்துக்காட்டின.

we-r-hiring

சில சமயங்களில், நீங்கள் முட்டுக்கட்டைகளைத் தாக்குவதன் மூலமாக அல்லாமல், அவற்றிலிருந்து விலகிக் கொண்டு அவை உங்களைத் தாக்க அனுமதிப்பதன் மூலமாக உங்களால் அவற்றிலிருந்து மீள முடியும். நீங்கள் எந்தச் செயல்நடவடிக்கையிலும் இறங்காமல், மற்றவர்களுடைய செயல்நடவடிக்கைகளை அவர்களுக்கு எதிராகவே திருப்பிவிட முடியும்.

ஆங்கிலேயப் படையினரோடு ஒப்பிடுகையில் மிகவும் பலவீனமாக இருந்த காந்தி, அந்த பலவீனத்தை இன்னும் ஊதிப் பெருக்கித் தன்னுடைய பாதுகாப்பின்மையை மேலும் வெளிப்படுத்திக் கொண்டார். உலகிலேயே பெரும் வலிமை வாய்ந்த காலனித்துவ இராணுவத்திடம், “நான் உங்களுடைய சட்டங்களை மதிக்காமல் கடற்கரைக்குச் சென்று உப்புக் காய்ச்சப் போகிறேன்,” என்று அவர் சவால்விட்டார். “உங்களால் எங்களை என்ன செய்ய முடியும்?” என்று அவர் அவர்களைச் சீண்டினார். அவர், காலாவதியாகிப் போன ஒரு திட்டத்தைத் தாங்கள் செயல்படுத்த வேண்டுமா அல்லது அதைக் கைவிட வேண்டுமா என்று தீர்மானிக்க முடியாமல் ஆங்கிலேயர்கள் தவிக்கும்படி செய்தார். ஆங்கிலேய இராணுவத்தின் மிகப் பெரிய பலம் முடக்கப்பட்டது. அதன் பயன்பாடு அதற்கு ஏதிரான விளைவையே உருவாக்கியது.

காந்தியின் வழியைப் பின்பற்றிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் தன் தொண்டர்களிடம், “அதிகார சக்தியை நாம் ஆன்ம சக்தியால் எதிர்கொள்வோம்,” என்று முழங்கினார். அதன்படி, அவர்கள்மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டபோது, அவர்கள் அதை அமைதியின் மூலம் எதிர்கொண்டனர். அவர்கள்மீது வெறுப்பு உமிழப்பட்டபோது, அதற்கு பதிலாக அவர்கள் அன்பை வெளிப்படுத்தினர். இச்செயல்முறையின் மூலம், தங்களுடைய எதிரியின் பண்புநலன்கள் கேடு விளைவிப்பவை, ஆபத்தானவை என்பதை அவர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டினர்.

ஒன்றும் செய்யாமல் இருப்பதே ஒரு நடவடிக்கையாக ஆக முடியும். இது மற்றவர்களுடைய சக்தியைப் பயன்படுத்துகிறது, அவர்களுடைய சக்தியை நம்முடைய சக்தியாக கிரகித்துக் கொள்ள வழி வகுக்கிறது. நாம் செய்ய வேண்டியதை அவர்கள் செய்துவிடுவர். அதாவது, முட்டுக்கட்டைகள் நமக்கான வேலையைச் செய்ய அனுமதிப்பது இது.

இரஷ்யர்கள் தங்களுடைய எதிரிகளான ஹிட்லரையும் நெப்போலியனையும் இப்படித்தான் தோற்கடித்தனர். அவர்கள் தங்கள் எதிரிகளைத் தங்கள் நாட்டின் எல்லைக்குள் நுழைய விடாமல் தடுக்கவில்லை. மாறாக அவர்கள் படிப்படியாகப் பின்வாங்கி, எதிரிப் படைகள் தங்களுடைய நாட்டுக்குள் வெகுதூரம் வர அனுமதித்துவிட்டு அவர்களைக் கையாளும் பொறுப்பைக் குளிர்காலப் பனியிடம் ஒப்படைத்துவிட்டனர்.

இது ஒரு நடவடிக்கையா? அதிலென்ன சந்தேகம்?

ஒருவேளை, உங்களுடைய எதிரியோ அல்லது முட்டுக்கட்டையோ சமாளிக்கப்பட முடியாத ஒன்றாக இருக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில், முட்டுக்கட்டையின் ஆற்றலை நீங்கள் உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - தடைக்கற்களை அவற்றுக்கு எதிராகப் பயன்படுத்துங்கள் - ரயன் ஹாலிடேமாவீரன் அலெக்சாண்டர் தன்னுடைய இளமைக்காலத்தில் ஒரு முட்டுக்கட்டையை அதற்கு எதிராகப் பயன்படுத்தியதைப் பற்றிய ஒரு கதை இருக்கிறது. அவன் பின்னர் ஒருநாள் இந்த உலகத்தையே ஆள்வான் என்பதற்கான முதல் அறிகுறியை அது வெளிப்படுத்தியது. அலெக்சாண்டர், தன் தந்தைக்கே படிய மறுத்த பூசிபெலஸ் என்ற குதிரையை அடக்கிய கதைதான் அது. தங்களுடைய பலத்தையும் சாட்டையையும் கயிறுகளையும் பயன்படுத்தி அக்குதிரையை அடக்க முயன்ற பலரும் அதில் தோல்வியைத் தழுவினர். ஆனால் அலெக்சாண்டர், மென்மையாக அக்குதிரைமீது ஏறி அமர்ந்து கொண்டு, அக்குதிரை அமைதியடையும்வரை, அது தன்னைக் கீழே தள்ளிவிடாமல் பார்த்துக் கொண்டான். இறுதியில் மிகவும் களைத்துப் போன அக்குதிரைக்கு, தன்மீது ஆரோகணித்த வீரனுக்கு அடிபணிவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. அதன் பிறகு அது அலெக்சாண்டரின் மிகவும் நம்பகமான குதிரையாக ஆகிப் போனது. அதற்கடுத்த இருபது ஆண்டுகள் அக்குதிரையின்மீது பயணித்துத்தான் அந்த மாவீரன் இவ்வுலகமெங்கும் வெற்றிக் கொடி நாட்டினான்.

இப்போது சொல்லுங்கள், உங்களுடைய முட்டுக்கட்டை எதுவென்று!

சில நேரங்களில், நாம் அமீலியாவிடமிருந்து பாடம் கற்றுக் கொண்டு செயலில் இறங்க வேண்டும். சில நேரங்களில், இழுத்துப் பிடிப்பது சரியான செயலாக இருக்கக்கூடும் என்பதையும் நாம் உணர வேண்டும். சில நேரங்களில், தற்காலிகமான தடைகள் தாமாகவே நீங்குவதற்காக நீங்கள் பொறுமையாகக் காத்திருக்க வேண்டியிருக்கும். சில நேரங்களில், ஒரு பிரச்சனையைத் தீர்க்க நீங்கள் அவ்வளவாகத் தேவைப்படுவதில்லை.

சில நேரங்களில் நாம் அவசர அவசரமாகச் செயல்பட்டு, நாமே நம்முடைய எதிரியாக ஆகிவிடுகிறோம். சகதியில் மாட்டிக் கொண்டுவிட்ட நம்முடைய காரின் சக்கரத்தை விடுவிப்பதற்கு வண்டியை வேகமாக ஓடவிட்டு, அச்சக்கரத்தை இன்னும் ஆழமாகச் சகதிக்குள் புதைத்துவிடுகிறோம்.

எப்பாடுபட்டாவது முன்னே செல்ல வேண்டும் என்ற முனைப்பில் நாம் தீவிரமாக இருப்பதால், அங்கு சென்றடைய வேறு வழிகள் இருக்கலாம் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். சில நேரங்களில், அதே இடத்தில் நின்று கொண்டிருப்பது அல்லது பின்னேறிச் செல்வதுகூட மேம்பட்ட வழிகளாக இருக்கலாம்.

ஒரு சம்பள உயர்வுக்காக, ஒரு புதிய வாடிக்கையாளருக்காக, அல்லது ஒரு புதிய அவசர நிலை உருவாகாமல் தடுப்பதற்காக நாம் முட்டி மோதக்கூடும். ஆனால் நம்முடைய விருப்பங்களை மறு ஆய்வு செய்வதுதான் உண்மையிலேயே நாம் பெற விரும்புவதைப் பெறுவதற்கான சிறந்த வழியாக இருக்கும். நம்முடைய முட்டுக்கட்டையை, ஒரு புதிய திசையை நோக்கி நகர்வதற்கான ஒரு வாய்ப்பாக நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அது ஒரு புதிய தொழிலுக்கு இட்டுச் சென்று நம்முடைய பணப் பிரச்சனையைத் தீர்க்கக்கூடும். நாம் அஞ்சிய அவசர நிலை உண்மையில் நமக்கு நன்மை பயக்கும் ஒன்றாக மாறக்கூடும்.

இந்த அணுகுமுறையில் ஒருவிதமான பணிவு தேவைப்படுகிறது. அதாவது, விஷயங்களைச் செய்வதற்கு நீங்கள் முதலில் வகுத்திருந்த திட்டம் சாத்தியமில்லை என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். பாரம்பரியமான முறையில் அதைச் செய்ய உங்களால் முடியவில்லை. சரி, அதனால் என்ன?

ஒரு குறிப்பிட்ட அணுகுமுறை நீங்கள் நினைத்திருந்த இடத்திற்கு உங்களைக் கொண்டுபோய்ச் சேர்த்ததா என்பதுதான் இங்கு முக்கியம். எதுவும் செய்யாமல் இருப்பது என்பது வேறு, முட்டுக்கட்டைகளை அவற்றுக்கு எதிராகவே பயன்படுத்துவது என்பது முற்றிலும் வேறு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அமைதியான எதிர்ப்பும் ஒரு விதத்தில் ஒரு செயல்நடவடிக்கைதான். ஆனால் அது சுயஒழுங்கு, சுயகட்டுப்பாடு, அச்சமின்மை, உறுதிப்பாடு போன்றவற்றின் வடிவில் வருகிறது.

ஒவ்வொரு நேர்மறைக்கும் ஓர் எதிர்மறை இருக்கிறது. அதேபோல, ஒவ்வோர் எதிர்மறைக்கும் ஒரு நேர்மறை இருக்கிறது. ஓர் எதிர்மறை ஒரு நேர்மறையாக மாறும்வரை அதை மறுபக்கத்திற்குத் தள்ளிக் கொண்டிருப்பதில்தான் செயல்நடவடிக்கை அடங்கியிருக்கிறது.

இது நமக்குப் பெரும் ஆறுதலாக இருக்க வேண்டும். அதாவது, வெகு சில முட்டுக்கட்டைகளே நம்மால் கடக்க முடியாத பெரிய முட்டுக்கட்டைகளாக இருக்கும். அவை பெரிதாக இருப்பதே நமக்கு ஓர் அனுகூலமாக அமையக்கூடும். அந்தப் பெரிய அளவை அந்த முட்டுக்கட்டைகளுக்கு எதிராக நம்மால் பயன்படுத்த முடியும். ஒரு கோட்டையின் பிரம்மாண்டமான தோற்றம் நம்மை பயமுறுத்தக்கூடும். ஆனால் அதை முற்றுகையிட்டு அதை ஒரு சிறைச்சாலையாக மாற்றிவிடலாம். வித்தியாசம் நாம் தேர்ந்தெடுக்கின்ற அணுகுமுறையிலும் நாம் மேற்கொள்கின்ற நடவடிக்கையிலும்தான் இருக்கிறது.

பூசிபெலஸ் என்ற குதிரை எந்த அளவுக்கு வேகமாக ஓடியதோ, அந்த அளவுக்கு விரைவாக அது களைப்படைந்தது. ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டிருந்தவர்களைக் காவல்துறையினர் எந்த அளவுக்கு மோசமாக நடத்தினார்களோ, அந்த அளவுக்கு அந்த இயக்கத்தில் ஈடுபட்டிருந்தோர்மீது அனுதாபம் அதிகரித்தது. நீங்கள் எந்த அளவு கடினமாகப் போராடுகிறீர்களோ, அந்த அளவு குறைவாக நீங்கள் சாதிப்பீர்கள்.

நம்முடைய பிரச்சனைகளுக்கும் இது பொருந்தும்.

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – பிறரின் பலவீனப் பகுதியைக் குறி பார்த்துத் தாக்குவதில் தப்பில்லை – ரயன் ஹாலிடே

MUST READ