spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஸ்டாலின்தான் ஜெயிக்கப் போகிறார்! மோடிக்கு கிடைத்த ரிப்போர்ட்! அடித்துச்சொல்லும் ரவீந்திரன் துரைசாமி!

ஸ்டாலின்தான் ஜெயிக்கப் போகிறார்! மோடிக்கு கிடைத்த ரிப்போர்ட்! அடித்துச்சொல்லும் ரவீந்திரன் துரைசாமி!

-

- Advertisement -

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக முன்னிலை வகிப்பதாக இந்தியா டுடே நாளிதழில் கருத்துக்கணிப்புகள் வந்துள்ளதாகவும், இதனை மோடி நம்புவதாகவும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

as

we-r-hiring

இந்தியா டுடே, ரங்கராஜ் பாண்டே ஆகியோரது கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து ரவீந்திரன் துரைசாமி பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவுகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 55 சதவீத வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். நாட்டில் 2-வது சிறந்த முதலமைச்சர் என்கிற சிறப்பு ஸ்டாலினுக்கு உள்ளது. முதலிடம் யூனியன் பிரேதச முதலமைச்சர் ஒருவர் வந்தார். இந்த கருத்துக்கணிப்பை பிரதமர் மோடி நம்புகிறார். தமிழ்நாட்டில் ஸ்டாலின் மூலம் காங்கிரசுக்கு 10 எம்.பிக்கள் கிடைக்கிறார்கள். அதை தடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்.  எதிர்வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலை வைத்து தான் கணக்குகளை போடுகிறோம். அமலாக்கத்துறை வந்ததும், மு.க.ஸ்டாலின் வந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் ஸ்டாலின்தான் தமிழ்நாடு என்று மோடி மதிக்கிறார். அதன் காரணமாக அவருக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்கிறார். 2019, 2024ல் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு ஸ்டாலின்தான் காரணம் என்றும் மோடி நினைக்கிறார்.

ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேவின் கருத்துக்கணிப்பில் 2026ல் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று சொல்கிறார். ஆனால் அவரது கருத்துக்கணிப்பு சாத்தியமில்லாதது. 2024 தேர்தலில் திமுக அணி 48 சதவிகிதம் வாக்குகளையும், 35 இடங்களையும் பெறும் என்று சொன்னேன். என்டிஏ 15 சதவீதத்திற்கு மேலாகவும், சீமான் 8 சதவீதம் வரும் என்றும் சொன்னேன். அதில் பெரும்பாலும் வந்தது. பாண்டே தமிழ் தேசியம் குறித்து பேச முடியாது. விஜய் குறித்து பேசினால் ரசிகர்கள் பார்ப்பார்கள்.  விஜய் என்கிற பிம்பம் என்றைக்கு கடலில் அலை ஓயும், என்றைக்கு நீச்சல் அடிக்கப் போகிறார். அவர் நீச்சல் அடிக்க வரமாட்டார். அலைக்கு பயந்தவர்கள் கடலில் இறங்க மாட்டான். 2026 தேர்தலிலும் விஜய் களத்துக்கு வர மாட்டார். அப்போது விஜயை மையமாக வைத்து கற்பனையாக கட்டமைக்கப்படும் வாக்குகள் உண்யானது கிடையாது. சர்கார் திரைப்படத்தில் விஜய் இலவசங்களை போட்டு உடைப்பார். ஆனால் எடப்பாடி பழனிசாமி உடன் கூட்டணிக்காக இலவசங்களுக்கு ஆதரவாக பேசினார். இது சந்தர்ப்பவாதமாகும்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்தோ, கொடுநாடு கொலை கொள்ளை குறித்தோ விஜய் பேசவில்லை. தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு உயர்வு, பஞ்சமி நிலம் மீட்பு குறித்து விஜய் பேசவில்லை. பெரியார் குறித்து சீமான் பேசியதால், அவருக்கு பிராமணர்கள் வாக்களிப்பார்கள். அண்ணாமலையின் உழைப்புக்கான வாக்குகளை நயினார் வாங்கவில்லை என்றால்? இந்து நாடார்கள், தேவேந்திர குல வேளாளர்கள், முத்தரையர்கள் சீமானுக்கு வாக்களிப்பார்கள்.  ஸ்டாலின் விவகாரத்தில் நான் கணித்தது எல்லாம் சரியாக வந்தது. ஆனால் கொங்கு மண்டலம் ஸ்வீப் செய்யும் என்று சொன்னது மட்டும் தவறானது. எனது கணிப்பிற்கு பிறகு ஆ.ராசா, வெடிகுண்டை தூக்கி வீசிவிட்டார். மீண்டும் அப்படி ஒரு வெடிகுண்டை பொன்முடி வீசியபோது தான், அமைச்சரவையில் இருந்து ஸ்டாலின் நீக்கினார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ