spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின்! வாயடைத்த எடப்பாடி!

ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின்! வாயடைத்த எடப்பாடி!

-

- Advertisement -

இரட்டை இலை சின்னத்தை வைத்துக்கொண்டு தேர்தலில் 10 முறை தோற்றவர்கள் எடப்பாடி பழனிசாமி என்று மருத்துவர் காந்தராஜ் விமர்சித்துள்ளார்.

we-r-hiring

மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டம் குறித்தும், ஆபரேணன் சிந்தூர் நடவடிக்கைகள் குறித்தும் மருத்துவர் காந்தராஜ் யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- மதுரையில் திமுக பொதுக்குழு மற்றும் ரோடு ஷோ நடைபெற்றுள்ளன. திமுக தேர்தலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. காரணம் அவர்களிடம் பிரச்சினை இல்லை. திமுக தலைமையிலான கூட்டணி உறுதியாக உள்ளது. அதனை எதிர்க்கட்சிகளால் உடைக்க முடியவில்லை. அமலாக்கத்துறையை வைத்து மிரட்டிப் பார்த்தார்கள் ஒன்றும் நடைபெறவில்லை. திருமாவளவனை குறிவைத்து, கூட்டணியை விட்டு போய்விடுவார் என்று வதந்திகளை பரப்பினார்கள். ஆனால் அவர் நீ என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள் என்று கண்டுகொள்ளாமல் விட்டார்.

தற்போது வைகோவுக்கு ராஜ்யசபா தராததால் அவர் வெளியே போகிறார் என்று சொல்கின்றனர். அது எங்களுக்கு பெரிய பிரச்சினை இல்லை என்று அவர்கள் போய்விட்டனர். இன்றைக்கு இருக்கும் சூழலில் எதிர்க்கட்சிகள் எங்கே உள்ளன என்பது கேள்விதான். திமுக அரசு மீது குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகளை ஒப்பிடுகிறபோது இந்த குறைகள் பரவாயில்லை என்று தோன்றுகிறது.

திராவிடர் கழகத்தில் மாநாடு தொடங்குவதற்கு முன்பாக ஊர்வலம் நடத்துவார்கள். சேலத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் எம்.ஆர்.ராதா கலந்துகொண்டார். திராவிட இயக்க கருத்துக்கள், சாதனைகளை விளக்க அலங்கார ஊர்திகள் செல்லும். 1971ல் சேலத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் வால்மீகி ராமாயணத்தில் வரும் காட்சிகளை அடிப்படையாக கொண்டு காட்சிகள் இடம்பெற்றன.அதில் ராமன் மாட்டிறைச்சி, சுறாபானம் அருந்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் ராஜாஜியும், காமராஜரும் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர்.

ஊடகங்கள் எல்லாம் ஊர்வலக்காட்சிகளை போட்டு இந்து மதத்தின் விரோதிகள் திமுக, இவர்களுக்கா உங்கள் வாக்கு? என்று கேட்டனர். சோ ராமசாமி, இவர்களுக்கா உங்களின் வாக்கு? என்று கேட்டார். கருத்துக்கணிப்புகள் எல்லாம் காங்கிரஸ் தான் வரும் என்று எழுதிவிட்டன. வாக்குப்பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது தொடக்கத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்றது. இதனால் அப்போதைய தலைமை செயலாளர் காமராஜரை சந்தித்து பதவி ஏற்புக்கு நேரம் கேட்டுவிட்டார். ஆனால் 12 மணிக்கு எல்லாம் நிலைமை மாறிவிட்டது. அந்த தேர்தலில் திமுக 184 இடங்களை பெற்றது. காங்கிரஸ் 50 இடங்களில் இருந்து 15 இடமாக சரிந்துவிட்டது.

"காமராஜர் தனது தாயாருக்கு மாதம் எவ்வளவு தொகை அனுப்புவார் தெரியுமா?"- நடிகர் சிவக்குமார் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
File Photo

இந்தியா டுடே ஆய்வில் திமுக தான் களத்தில் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நியாயமாக எடப்பாடி தான் முன்னிலையில் வந்திருக்க வேண்டும். அவருக்கு அதிமுக தலைமை கழகம், இரட்டை இலை சின்னம், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் என அனைத்தையும் பாஜக செய்து கொடுத்தது. இதற்கு மேல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இரட்டை இலையை வைத்துக்கொண்டு 10 முறை தேர்தலில் தோற்றவர் அவர் தான். பத்து தோல்வி பழனிசாமி என்று பெயர் வாங்கிவிட்டார். கடைசியில் தேர்தலில் நிற்காமலே புறக்கணித்துவிட்டார். கட்சி தொண்டனுக்கு உற்சாகத்தை கொடுக்க வேண்டும். நம்ம கட்சி நிற்கனும், ஜெயிக்கனும் என்கிற வெறியை ஏற்படுத்த வேண்டும். ஆனால் எதாவது காரணத்தை சொல்லி தேர்தலை புறக்கணித்தால் ஈரோட்டில் அதிமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவுக்கு தான் கிடைத்தன.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தோல்வி அடைந்துவிட்டது. பாட்னாவில் ரோடு ஷோவில் மக்கள் கூட்டம் இன்றி மோடி தனியாக செல்கிறார். பகல்காமில் தீவிரவாதிகள் 20க்கும் மேற்பட்டோரை கொன்றுவிட்டு போய்விட்டார்கள். அவர்களில் ஒருவரை கூட பிடிக்க உங்களால் பிடிக்க முடியவில்லை. சுப்பிரமணியசாமி சொல்கிறார், இந்தியாவின் 6 ரபேல் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திவிட்டார்கள் என்று. ராணுவ அதிகாரிகளிடம் கேட்கிறபோது விமானிகள் எல்லாம் காப்பாற்றப்பட்டு விட்டார்கள் என்று சொல்கிறார். ஆனால் விமானங்களை காணவில்லை. விமானத்தின் உடைந்த பாகங்களை சிஎன்என், பிபிசி போன்ற தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளன.

எதற்காக 6 எம்.பிக்கள் குழுவை அமைத்து, உலக நாடுகளுக்கு எல்லாம் விளக்கம் அளிக்கிறார்கள். நீங்கள் யோகியனாக இருந்தால் அங்கே போய் சொல்ல வேணடியதன் அவசியம் என்ன? இதன் மூலம்அத்தனை நாடுகளும் பாகிஸ்தானை ஆதரிக்கிறது என்று தானே அர்த்தம்.  தீவிரவாத தாக்குதலுக்கு மறுநாள் ஐஎம்எப் பாகிஸ்தானுக்கு நிதி வழங்குகிறது. 40 நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டுள்ளன. நீங்கள் தாக்குதல் நடத்த சென்றீர்களா? அல்லது அவர்கள் சென்றார்களா? என தெரியவில்லை.

சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு தலைவர் சஞ்சய் ராவத், பகல்காம் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை மோடி அரசு சுட்டுக்கொல்லவில்லை. இன்னும் கொஞ்சநாளில் அவர்கள் பாஜகவில் சேர்ந்துவிடுவார்கள் என்று சொல்லியுள்ளார். இதை தான் ராகுல்காந்தியும் சொல்கிறார். மோடியிடம் ஒரு சலவைப் பொடி உள்ளது. என்ன ஊழல் செய்தாலும் மோடியிடம் சேர்ந்தால், அந்த சலவைப்பொடியில் துவைத்து எடுத்தால்  நீங்கள் புனிதர் ஆகிவிடலாம். அப்படிதான் பல பேர் புனிதர் ஆகியுள்ளனர். பகல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் தீவிரவாதிகள் என்று யாருக்கு தெரியும். பிரதமர் மோடி சொன்னதுதான். 140 கிலோ மீட்டர் சர்வ சாதாரணமாக உள்ளே சுற்றுலா வருவது போல வந்துவிட்டு, சுட்டுக்கொன்றுவிட்டு, சாப்பாடு எல்லாம் சாப்பிட்டு விட்டு திரும்பி செல்கிறார்கள் என்றால் அவர்கள் எப்படி தீவிரவாதிகளாக இருப்பார்கள்? ஏற்பாடு பண்ணியது போல உள்ளது.

ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்! அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு…

பகல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் பல கேள்விகளுக்கு பதில் இல்லை. அமித்ஷா அன்று போனவர் எங்கே இருக்கிறார் என்று தகவல் இல்லை. அவர் சொல்லிதான் சுற்றுலா பயணிகள் அங்கே போனார்கள். அது பொய் என்று ஆகிவிட்டது. பிறகு நாங்கள் தான் குண்டு போட்டோம் என்றார்கள். ரபேல் விமானங்கள் 6 விழுந்து கிடக்கின்றன. அதுவும் பொய் என்று தெரிந்துவிட்டது. இதுவரை சொல்லவில்லை. ஆனால் விமானிகள் உயிருடன் உள்ளனர் என்று சொல்கிறார்கள். அப்போது எதற்காக எம்.பி.க்கள் குழுபோட்டு ஒவ்வொரு நாடாக சென்று பாகிஸ்தான் தான் தவறு செய்தது என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு அந்த விஷயம் தெரிந்தால் நீங்கள் எதற்கு ஆள் அனுப்புகிறீர்கள்?.  உங்களுக்கு ஆதரவு இருந்தால் நீங்கள் ஆள் அனுப்ப வேண்டியதில்லையே. இந்தியாவுக்கு பதிலடியாக பாகிஸ்தான் இதுபோன்று தூதுக்குழுவை அனுப்பவில்லையே. அப்போது  பாஜக அரசின் அயலுறவுக் கொள்கையும் தோற்றுவிட்டது. ராணுவ நடவடிக்கையும் தோற்றுவிட்டது. பகல்காமில் கொல்லப்பட்டவர்களின் வீடுகளுக்கு தற்போது வரை பிரதமர் மோடியோ, பாதுகாப்புத்துறை அமைச்சரோ நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்கவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ