spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை70 இடங்களில் தவெக வெற்றி! கருத்துக்கணிப்பின் ரகசிய பின்னணி! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

70 இடங்களில் தவெக வெற்றி! கருத்துக்கணிப்பின் ரகசிய பின்னணி! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

-

- Advertisement -

விஜய்க்கு அதிகபட்சமாக 5 முதல் 6 சதவீதம் வாக்குகள் தான் இருக்கும் என்று மத்திய உளவுத்துறையே சொல்வதாகவும், எனவே தவெக 70 இடங்களை வெல்லும் என்று கருத்துக்கணிப்பு வெளியிடுவது மோசடியானது என்றும்  மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- மத்திய உளவுத்துறை சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் திமுக கூட்டணி 90 இடங்களும், விஜய் 70 இடங்களும், அதிமுக 35 இடங்களும், நாதக 1, 38 இடங்கள் இழுபறியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் 10 கருத்துக்கணிப்புகளை நக்கீரனுக்காக எடுத்தவன் நான். ஒரு டிரெண்ட் செட் ஆகிறது என்றால், ஒரு டிரெண்ட்தான். அதுதான் தமிழ்நாட்டின் வாக்காளர்கள். ஒரு டிரெண்ட் நெகட்டிவ் என்றால், நெகட்டிவ்தான்.

1991-96ல் அடித்த ஒரு அலை. 1996ல் ஜெயலலிதாவுக்கு எதிராக இல்லை. ராஜிவ் மரணத்திற்கு முன்பு ஒரு அலை அடித்தது. மரணத்திற்கு பிறகு ஒரு அலை அடித்தது. ஆனால் எதுவும் ஜே.வி.சி.ஸ்ரீராம் சொல்வது போன்று கிடையாது. அவர் திமுக கூட்டணி 45, அதிமுக கூட்டணி 40 சதவீதம் கிடையாது. நடுவில் விஜய் புகுந்து எல்லாவற்றையும் 30 ஆக்கிவிட்டார். சென்னையில் திமுக காலி. தவெக தான் முன்னணியில் உள்ளது என்று சொல்கிறார்கள். தற்போது இந்த கணக்குகளை எல்லாம் சொல்கிறார்கள்.

மத்திய உளவுத் துறையின் இயக்குநர் என்னுடைய நெருங்கிய நண்பர். அவரிடம் பாதுகாப்பு மிக்க உளவுத் துறை அறிக்கையை எடுத்து ஏன் ஜே.வி.சி.ஸ்ரீராம் வசம் கொடுத்திருக்கீர்கள்? என்று கேட்டேன். அவர் சத்தியமாக அது எங்களுடைய அறிக்கை இல்லை என்று மறுக்கிறார். மத்திய உளவுத் துறை தலைவர் பல தேர்தல்களை பார்த்தவர். அவருடைய  மதிப்பீட்டின்படி தவெக அதிபட்சமாக 5 முதல் 6 சதவீதம் வாக்குகளை தான் வாங்குவார்கள் என்கிறார். இது சீமானை விட குறைவு ஆகும். அவர்களால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது. இப்படி ஊடகங்கள் மிகைப்படுத்தி பேச காரணம் ஆதவ் அர்ஜுனா. அவர் ஊடக விவாதத்தில் பங்கேற்கும் பத்திரிகையாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.1.25 லட்சம் வழங்குகிறார்.

இதுவரை ரூ.150 – ரூ.200 கோடி வரை செலவு செய்துள்ளார். இதே ஆதவ் அர்ஜுனா, பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்து தவெகவுக்கு 20 சதவீதம் வாக்குகள் உள்ளதாக சொன்னார். ஆனால் நமக்கு சொல்கிற ஐ.பி. இயக்குநர் 6 சதவீதம் என்கிறார். அப்போது 20 சதவீதம் என்று பிரசாந்த் கிஷோர் சொன்னது பொய்தானே. அதே பிரசாந்த் கிஷோரால் பீகாரில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லையே. அன்றைக்கு 20 சதவீதத்தில் தொடங்கியவர்கள், இன்றைக்கு 35 சதவீதம் வாக்குகளில் வந்து நிற்கிறார்கள். தவெக தரப்பில் ஏதேனும் ஒரு தேர்தலில் பங்கேற்று, தாங்கள் வாங்கிய வாக்குகளை காண்பித்திருக்கிறார்களா?

புதுச்சேரியில் விஜய் பிரச்சார நிகழ்ச்சி நடத்த உள்ளனர். அந்த நிகழ்ச்சிக்கு 5000 பேருக்கு தான் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. வெளி மாநிலத்தவருக்கு அனுமதி இல்லை என்கிறார்கள். அரங்கக் கூட்டம் என்றால் 5000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கலாம். ஆனால் பொதுக்கூட்டம் என்று வைத்துவிட்டு, 5000 பேர் தான் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். கரூரில் விபத்தை ஏற்படுத்தி மக்களின் மரணத்திற்கு காரணமாகிவிட்டு, தற்போது தான் கூட்டங்களை நல்லபடியாக நடத்துவதாக காட்டுகிறார்.

திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என்று சொல்கிறார்கள். ஆனால் தவெக செலவு செய்வது போன்று, திமுக, அதிமுக, பாஜக என எந்த கட்சியும் செலவு செய்யவில்லை. இந்த அறிக்கை திட்டமிட்டு உருவாக்கப்பட்டதற்கு காரணம் திமுகவில் உள்ள கூட்டணி கட்சியினரை தவெக பக்கம் இழுப்பதற்கான ஒரு முயற்சியாகும். எனக்கு தெரிந்து எந்த அரசியல்வாதியும் இதை நம்பவே மாட்டார்கள். அமித்ஷாவும் தான் கூட்டணி ஆட்சி என்று சொல்கிறார். அதிமுக இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

100 நாள் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படும் - அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

அமலாக்கத்துறை கே.என்.நேரு மீது உள்ளாட்சி துறையில் ரூ.1020 கோடி ஊழல் நடைபெற்றதாக தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதுகிறார்கள். அந்த கடிதம் பொதுவெளியில் வெளியாகிறது. தற்போது திமுக அமைச்சர்களை குறிவைத்து, தங்களுடைய செயல்பாடுகளை அதிகரித்துள்ளனர். கே.என்.நேரு, துரைமுருகன், எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, பொன்முடி, உதயநிதி உள்ளிட்டவர்களை குறிவைத்துள்ளனர். இதுபோன்று 4 அமைச்சர்களை தூக்கி உள்ளே வைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதேபோல் ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றவர்களை என்டிஏவுக்குள் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தான் வியூகங்களை வகுக்கிறார்கள். அப்படி இருக்கும்போது தவெக 70 இடங்களில் வெல்லப் போகிறது என்றால் யாருமே நம்ப மாட்டார்கள். சிலர் யூடியூப்களில் உட்பகார்ந்து பேச வேண்டுமானால் அது பயன்படலாம்.

பிரவீன் சக்ரவர்த்தி, மயிலாடுதுறையில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். பி.டி.ஆர் டேப்பை வெளியிட்டவர் பிரவீன் சக்ரவர்த்திதான். அதனால் அவருக்கு வாய்ப்பு தரவில்லை. தற்போது மயிலாப்பூர் தொகுதியில் கேட்டார். அதற்கும் திமுக மறுத்துவிட்டது. அவரை எந்த விதத்திலும் ஊக்குவிக்க மாட்டோம் என்று சொல்லி விட்டார்கள். அந்த பிரவீன் சக்ரவர்த்தி, விஜயிடம் கேரளாவுக்காக பேசினாரா? கே.சி.வேணுகோபால், கேரளாவுக்காக விஜயிடம் பேசினாரா? என்கிற கேள்வியும் எழுகிறது. இது குறித்து செல்வப்பெருந்தகை, கட்சி தலைமையிடம் புகார் அளித்து விட்டார்.

திமுக, விஜயுடன் கூட்டணிக்கு செல்வதாக இருந்தால் இப்போதே சென்றுவிடுங்கள் என்று சொல்லிவிட்டது. சபரீசன் டெல்லிக்கு சென்று ராகுல்காந்தி, சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டில் நடப்பது எல்லாவற்றையும் பேசியுள்ளார். திமுக கூட்டணியில் இருப்பது தான் காங்கிரசுக்கு பலன் அளிக்கும். என்றைக்கும் திமுக காங்கிரஸ் உடன் இருக்கும் என்று கூறியுள்ளார். கே.சி.வேணுகோபால், சசிகாந்த் செந்தில், ஜோதிமணி போன்றவர்கள், விஜயுடன் கூட்டணி வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

சிறுபான்மையினரின் வாக்குகள் தங்களுக்கு தான் வரும் என்று சொல்கிற விஜய், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாய் திறக்கவில்லை. பாஜக வாய் திறக்கக்கூடாது என்று சொல்லி இருக்கான். அதனால் அவர் வாய் திறக்கவில்லை. ஒரு இப்தார் நோன்பில் விஜய் பங்கேற்றால் அவர் இஸ்லாமியரா? பாஜகவின் சோதனைகளுக்கு மார்ட்டினே பயப்படுகிறார். அவருடைய மருமகன், ஆதவ் பயப்பட மாட்டாரா? பாஜகவின் உத்தரவு இல்லாமல் திருப்பரங்குன்றம் மட்டும் அல்ல. பாபர் மசூதி இடிப்பு விவகாரத்திலேயே அவர் கருத்து சொல்ல மாட்டார். அதனால் விஜய் அரசியலுக்கு வரும்போதே, அவரை பாஜகவின் பி டீம் என்று சொன்னோம். யாரும் நம்பவில்லை. இந்த தேர்தலுக்கு பின்னர் விஜயும் காணாமல் போவார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ