Homeசெய்திகள்கட்டுரைசீனாவில் இருந்து வந்த போன்கால்! டிரம்பின் இறுதி எச்சரிக்கை!  இதுதான் காரணம்!

சீனாவில் இருந்து வந்த போன்கால்! டிரம்பின் இறுதி எச்சரிக்கை!  இதுதான் காரணம்!

-

- Advertisement -

இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா களமிறங்கியதால், அமெரிக்கா இந்த விவகாரத்தில் தலையிட்டு போர் நிறுத்ததை ஏற்படுத்தி உள்ளது என்று அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார். 

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த அறிவிப்பும், அதன் பின்னால் உள்ள சர்வதேச அரசியல் குறித்தும்  யூடியூப் சேனல் ஒன்றுக்கு, அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:- இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்தத்தை வரவேற்கிறேன். போர் எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது. அதற்காக தீவிரவாதத்தை ஆதரிக்க முடியாது. தீவிரவாதம் வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிக்கப்பட வேண்டும். மதவாதத்தை விதைப்பவர்கள், அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பணங்கள், ஆயுதங்கள், போதை பொருட்கள் போன்றவை எல்லாம் அவர்களுக்கு இன்புட் போல வந்துகொண்டிருக்கிறது. தீவிரவாதத்தை வளர்த்து எடுத்தால் ஒரு நாடு அமைதியான நாடாகவோ, வளமான நாடாகவோ இருக்க முடியாது. மதவாதம், இனவாதம் போன்றவை ஒருநாட்டில் அழிவைத்தான் கொண்டுவரும். இளைஞர்களின் கனவை கருக்கும். இதை பாகிஸ்தான் கைவிடும் வரை அந்த நாடு நல்ல நாடாக வருவதற்கு வாய்ப்பு இல்லை. இதனை பாகிஸ்தான் இந்த போர் மூலம் உணர்ந்து கொண்டுள்ளது.

சண்டை நீடித்தால், இந்தியாவுக்கு இழப்பு ஏற்படும். ஆனால் அதைவிட பன்மடங்கு அதிகமாக பாகிஸ்தானுக்கு இழப்பு ஏற்படும்.போர் என்று வந்தால் அப்பாவி மக்களும், பொதுமக்களும், குழந்தைகள் தான். பொருளாதார சேதம், உட்கட்டமைப்பு சேதம் ஏற்படும். இதனை தவிர்க்க வேண்டும் என்பதுதான் நடுநிலையாளர்களின் கோரிக்கையாகும். இந்த போர் முடிவுக்கு வருவதற்கு பெரும்பங்கு ஆற்றியுள்ளது அமெரிக்கா. போர் நிறுத்தத்தை முதலில் அறிவித்தது அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியா – பாகிஸ்தான் நாடுகளின் பிரதமர்கள், ராணுவ ஜெனரல்களுடன் பேசி இந்த உடன்படிக்கையை கொண்டு வந்து, அவர் போர் நிறுத்தத்தை அறிவித்தார்.

இந்தியா – பாக். மோதலை முதலில் அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் போன்றவர்கள் பொருட்படுத்தவில்லை. பின்னர் இந்த போரில் சீனா களமிறங்குகிறது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர், பாகிஸ்தான் பிரதமருக்கு போன் செய்கிறார். அப்போது பாகிஸ்தானுக்கு சீனா இரும்பு போன்ற வலிமையான நண்பன் என்றும், உங்களுக்கு சீனா துணை நிற்கும் என்று சொல்லியுள்ளனர். இந்தியாவின் ரபேல் விமானங்களை வீழ்த்திவிட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதற்கு இந்திய தரப்பில் விளக்கம் அளிக்கவில்லை. இந்நிலையில், ரபேலை வீழ்த்தியது  சீனாவின் ஜே 10-சி சென்ங்டு என்கிற போர் விமானமாகும். இதன் காரணமாக அந்த விமான நிறுவனத்தின் ஷேர்கள் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்து இருக்க வேண்டும். ஆனால் பங்குச்சந்தையை சரியவிடாமல் குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் தாங்கி பிடிக்கிறார்கள். அப்போது எங்கோ தவறு நடக்கிறது.

அமெரிக்க

அப்போது முதலில் போரை நிறுத்துவது தங்களின் வேலை இல்லை என்று சொன்ன அமெரிக்கா, வெளியுறவுத்துறை அமைச்சரை வைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த போரில் சீனா களமிறங்கினால், இந்தியாவுக்கு எதிரான போரை சீனா தான் நடத்தும். பாகிஸ்தான் போரை நடத்தாது. ஐஎம்எப்-பில் இருந்து 8000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குகிறார்கள் எப்படி? டிரம்ப் வீட் செய்கிறார், காஷ்மீர் பிரச்சினைக்கு நாங்கள் தீர்வு காண தயாராக உள்ளேன். இரு நாடுகளுடனும் வர்த்தகம் மேற்கொண்டு பொருளாதாரத்தை உயர்த்த தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். அப்போது, அமெரிக்காவை பொருத்தவை இந்தியா , பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளும் பெரிய சந்தையாகும். இவை சீனாவின் கைகளுக்கு போய்விடக்கூடாது என்று அமெரிக்கா நினைக்கிறது. மேலும் சீனாவுக்கு எதிராக இந்தியாவை பயன்படுத்த அமெரிக்கா நினைக்கிறது.

ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்! அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு…

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போரை, இரு நாட்டு பிரதமர்கள் அறிவித்திருக்க வேண்டும். அல்லது இரு நாடுகளை சேர்ந்த  மூத்த ராணுவ தளபதிகள் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் டொனால்டு ட்ரம்ப் போர் நிறுத்தத்தை அறிவிக்கிறார். எப்படியோ இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும். தீவிரவாத செயல்களுக்கு புகலிடமாக இருக்கும் பாகிஸ்தான் தன்னை திருத்திக்கொண்டு, தங்கள் நாட்டின் வளங்களை பெருக்க பாடுபட வேண்டும். வேலையில்லா திண்டாட்டம் பெருகினால் இளைஞர்கள் தீவிரவாதம் பக்கம் சென்றுவிடுவார்கள். அதனால் வேலைவாய்ப்பை பெருக்கிட வேண்டும். பாகிஸதானை வளப்படுத்தவும், அமைதி திரும்பவும் அந்நாட்டு மக்களும், ராணுவமும் இணைந்து ஜனநாயக முறைப்படியான ஒரு ஆட்சியை தோற்றுவித்து, முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சி நடைபெறுவதற்கு அந்நாட்டு மக்கள் பாடுபட வேண்டும். இல்லாவிட்டால் அந்நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் இடையிலான போர் நிறுத்தத்தை முதலில் டிரம்ப் அறிவிக்கிறார். அதன் காரணமாக டிரம்ப் தான் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்பது உலக நாடுகளுக்கே தெரிந்துவிட்டது. இதனை ஏன் வெளியுறவுத்துறை செயலாளர் மறைக்க வேண்டும். அப்போது டிரம்பின் அடிமையாக மோடி உள்ளார் என்பதை இந்நிகழ்வு காட்டுகிறது. பாகிஸ்தானின் டிஜிஎம் உடன் முதல் நாள் இரவு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அப்படி பேச்சுவார்த்தை நடைபெற்றதை வெளியில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லைதான். ஆனால், உண்மையை சொல்வதில் தவறு இல்லை. வடஇந்திய ஊடகங்கள், ஒட்டுமொத்த பாகிஸ்தானையே காலி செய்துவிட்டோம் என்று பொய் செய்திகளை பரப்பினார்கள். வெளியுறவு செயலாளர் உண்மையை பேசுகிறார். பாதுகாப்புத்துறை சார்பில் பெண் அதிகாரிகள் தகவல்களை தெரிவிக்கின்றனர். ரபேலை சுட்டுவீழ்த்தியதாக சொல்கிறார்கள். அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து இருக்க வேண்டும். இந்திய ராணுவம் இந்த போரை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

நாட்டிலேயே அதிகளவு ராணுவம் குவிக்கப்பட்டிருக்கும் இடம் காஷ்மீர் ஆகும். அங்கே ஏன் அங்கே பாதுகாப்பு இல்லை. பொதுமக்களை கொள்வதற்கு  தீவிரவாதிகளுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தவர் யார்? தாக்குதல் நடத்தியவர்களை ஏன் இன்னும் பிடித்து நிறுத்தவில்லை. பாகிஸ்தானும் அதைதான் கேட்கிறார்கள். தாக்குதல் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று சர்வதச சமூகத்தின் முன்னால் ஏன் நிருபிக்க முடியவில்லை. ஏன் அவர்களை தப்பி ஓடவிட்டனர். தாக்குதல் நடத்திவிட்டு சென்றவர்களை எங்கேயும் சோதனை நடத்தவில்லை. தாக்குதலை தொடர்ந்து சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி,  ஏர்போர்ட்டிலேயே மீட்டிங் போட்டார். பின்னர் நேராக பீகார் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்று, குற்றவாளிகளை தேடி தேடி அழிப்பேன் என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்.

பாகிஸ்தான் ராணுவம், சீனா – துருக்கியுடன் சேர்ந்துகொண்டு  சராசரி டிரோன்களை அனுப்பி இந்தியாவின் பிரதான வான் பாதுகாப்பு அமைப்பை  பலவீனப்படுத்தி உள்ளன. இந்த தந்திரம் தெரியாமல் என்ன செய்தீர்கள் என்கிற கேள்வி வருமா? இல்லையா? ராணுவம் ஒன்று செய்கிறது. ஆனால் டிவியில் நீங்கள் வேறு ஒன்றை கட்டமைக்கிறீர்கள். அப்போது ராணுவம் உழைத்ததும், விமானப்படை உழைத்ததும் பின்னால் தள்ளப்பட்டு, ஊடகங்கள் கட்டமைத்த போர்தான் மக்கள் மனதில் போய் நிற்கிற்து.  அப்போது உங்களுடைய தேர்தல் தேவைக்காக போரை நடத்தினீர்கள். அதனால்தான் போர் தேவையில்லை என்று நாம் சொன்னோம். சரியான நேரத்தில் சீனா உள்ளே வந்துவிடும என்று பயந்து, அமெரிக்கா உள்ளே வந்து போரை நிறுத்தியுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ