டாஸ்மாக் சோதனையின் இறுதியில் முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்களை கைது செய்து, சிறையில் அடைப்பது தான் பாஜகவின் நோக்கம் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அசோகன் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை மற்றும் அதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் ஐஏஎஸ் அவர்களின் வீடு உள்ளிட்ட இடங்கள், திமுக தலைமைக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 2 நாட்களாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை அமலாக்கத்துறை சோதனை மிகவும் ரகசியமாக இருக்கும். கடந்த முறை எந்த ஊடகங்களும் அனுமதிக்கப்படவில்லை. அமலாக்கத்துறை 100 சோதனைகள் நடத்துகிறது என்றால் அதில் 75 சோதனை தமிழ்நாட்டில் நடைபெறுகின்றன. அந்த அளவுக்கு அமலாக்கத்துறை தீவிரமாக உள்ளது. அமலாக்கத்துறை வழக்கறிஞர் ஒருவர், பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்டு சோதனைக்கு முன்னதாகவே மணப்பாக்கத்தில் உள்ள விசாகன் ஐஏஎஸ் இல்லத்திற்கு போக சொல்கிறார். அப்போது குப்பைத் தொட்டியில் ஆவணங்கள் கிழித்து எறியப்பட்டு உள்ளதாகவும் சொல்கிறார். அதேவேளையில் அந்த வழக்கறிஞருக்கு நெருக்கமான பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் அந்த ஆவணங்களை எல்லாம் முன்கூட்டியே வெளியிடுகிறார்.
பத்திரிகையாளர்கள் சென்று கிழித்தெறியப்பட்ட ஆவணங்களை பொருக்குகிறபோது ஒரு ஆச்சரியமான ஆவணம் ஒன்று கிடைக்கிறது. விசாகன், ரத்தீஷ் ஆகியோர் பேசியதாக சொல்லப்படுகிற கம்பியூட்டர் குறிப்புகள். நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுகவுக்கு எப்படி உதவ வேண்டும் என்று பேசியுள்ளனர். மற்றொன்று அவர்கள் இருவருக்கும் தெரிந்த தகவல். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அமலாக்கத்துறை போட்டிருப்பார்கள். விசாகன் வந்து உதயநிதிக்கு பூங்கொத்து கொடுப்பது போன்ற புகைப்படத்தை மூலையில் மட்டும் கிழித்துவிட்டு போடுகிறார்கள். அந்த புகைப்படத்தை போட வேண்டிய தேவை அவருக்கு என்ன உள்ளது? அதாவது அவர்கள் இந்த தேர்தலுக்கு உள்ளாக உதயநிதியை குறிவைக்கிறார்கள்.
திண்டுக்கல்லில் அங்கித் திவாரி என்கிற அமலாக்கத்துறை அதிகாரி மாட்டினார். கேரளாவில் இதேபோல் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதாக மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் கேரள காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், சவுக்கு சங்கர் பெசன்ட் நகரில் ஒரு அறை வைத்துள்ளார். அந்த அறையில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் எல்லாம் வருவார்கள். ரியல் எஸ்டேட் அதிபர்கள் உதயநிதிக்கு நெருக்கமானவர்கள் என்று டார்கெட் செய்வார். அதற்கு முன்பாக சவுக்கு சங்கர் அவர்களிடம் போனில் மாமுல் கேட்டு மிரட்டுவார். மாமுல் கொடுக்காதவர்களின் வீடுகளுக்கு சோதனை நடத்துவார்கள். வழக்கை எப்படி பதிவு செய்வார்கள் என்றால் யாரிடம் சோதனை நடத்துகிறார்களோ அவர்கள் உதயநிதிக்கு நெருக்கம் என்று பதிவு செய்து மேலே அனுப்புவார்கள். உதயநிதி தொடர்புடையது என்பதால் உடனடியாக சோதனை நடத்துங்கள் என்று உத்தரவிடுவார்கள். அதுபோன்று பல இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது. தற்போது நடைபெறுவதும் அதன் தொடர்ச்சியாகும்.
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை சரியான உதை வாங்கிவிட்டது. அவர்கள் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரே தவறானது ஆகும். 55 எப்.ஐ.ஆர். நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, போன்றோர் காலத்தில் பதிவு செய்யப்பட்டது. 14 வருடங்கள் அடிப்படையில் ஆயிரம் கோடி திருட்டு பணம் புலங்கியுள்ளது. ரத்தீஷ், விசாகன் ஆகியோர் பார் லைசன்ஸ் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பேசியதாக ஆவணங்ஙகளை போட்டுள்ளனர். இது ஆவணமா? ஆவணம் எப்படி டைப் செய்து வந்தது? அது எப்படி குப்பையில் கிடக்கிறது. உதயநிதி விசாகன் இருக்கிற படம் எப்படி வருகிறது? என்பது போன்ற நிறைய கேள்விகள் உள்ளன. பாஜகவின் இலக்கு என்பது 5 திமுக அமைச்சர்களை உள்ளே தள்ளிவிட வேண்டும் என்பதாகும்.
டாஸ்மாக் விவகாரத்தில் குறிவைக்கப்படுவது செந்தில் பாலாஜி மட்டும் அல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். இந்த சோதனைகளின் கடைசி கட்டம் என்பது முதலமைச்சரை சிறைக்கு அனுப்புவது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் போன்ற முக்கியமான அமைச்சர்களை சிறைக்கு அனுப்புவது. திமுக ஆட்சி ஊழல் ஆட்சி என்று குற்றம்சாட்டுவது. இவர்களுக்கு சட்டவிரோத பணப் பறிமாற்ற சட்டம் காரணமாக ஜாமின் கிடைக்காமல் தவிப்பது. இதனால் தேர்தல் வேலைகள், பிரச்சார வேலைகள் பாதிக்கப்படுவது. இதன் மூலம் அதிமுக . பாஜக கூட்டணி லாபமடைவது என்பது தான் அவர்களுடைய திட்டம். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிகழ்ந்தது போலவே நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். அதனால்தான் உதயதிதியும், விசாகனும் இருக்கும் புகைப்படத்தை போட்டிருக்கிறார்கள்.
தற்போது இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் என்பவரும் குறிவைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷின் உறவினர் வாளாடி கார்த்திக். இவரது சொந்தக்காரர் ஆகாஷ் பாஸ்கரன். மு.க.முத்துவின் பேத்தி தாரணியை ஆகாஷ் பாஸ்கரன் திருமணம் செய்துள்ளார். இவர் குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோக்களின் படங்களை தாயரித்துள்ளார் என்பது அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஆகும். இதெல்லாம் டாஸ்மாக் மூலம் வந்த பணம். ரத்திஷ் உதயநிதியின் வலது கரம். ஆகாஷ் பாஸ்கரன் அவரது இடதுகரம். அதனால் அவரை குறிவைக்கிறார்கள். அவரது குடும்பத்தினரை குறிவைக்கிறார்கள். உதயநிதிக்கு நெருக்கமானவர்களை குறிவைக்கிறார்கள். விசாகன் இதற்கு தயாராக உள்ளவர்தான். இதுபோன்று ஐஏஎஸ் அதிகாரிகளை குறிவைத்தால் அதிகாரிகள் கடும் அதிருப்தி உள்ளது. இதை செய்வார்கள் என்று எதிர்பார்த்ததுதான். அதனால் இதை பற்றி கவலைப்பட வேண்டாம் என்பதுதான் அரசின் நிலையாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.