spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைடிரம்ப் - மோடி 35 நிமிட காரசார உரையாடல்! முக்கியத் தகவலை சொன்ன ஐ.நா. கண்ணன்!

டிரம்ப் – மோடி 35 நிமிட காரசார உரையாடல்! முக்கியத் தகவலை சொன்ன ஐ.நா. கண்ணன்!

-

- Advertisement -

இந்தியா – அமெரிக்கா இடையிலான மோதல் என்பது தற்காலிகமானது, அது விரைவில் சரியாகி விடும். ஆனால் சீனா உடனான உறவுக்கு வாய்ப்பே கிடையாது என்று முன்னாள் ஐ.நா. அதிகாரி கண்ணன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கான காரணம் குறித்து முன்னாள் ஐ.நா. அதிகாரி கண்ணன் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- இந்தியா மீது டிரம்ப்-க்கு ஏன் இவ்வளவு பெரிய வருத்தம் என்பதற்கான முழுமையான காரணங்களை விளக்கி நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. ஜூன் 17ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப், மோடிக்கு 35 நிமிடங்கள் போன் செய்து பேசியுள்ளார். அந்த போன் கால் அவ்வளவு நன்றாக போகவில்லை. அதற்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையே உறவு கெட்டுபோய்விட்டது. அந்த காலில் தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி கொடுத்ததற்காக மிகவும் பெருமைப் படுவதாக டிரம்ப் சொல்லியுள்ளார். ஆனால், மோடி நீங்கள் அப்படி செய்யவில்லை என்று சொல்கிறார். இது நாங்களே எடுத்த முடிவு என்று சொல்கிறார். அதை டிரம்ப் ரசிக்கவில்லை. கடந்து செல்கிறார்.

எனக்கு பாகிஸ்தானியர்கள் நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ய போகிறார்கள் என்று சொன்னபோது, மோடி அதை கடந்து செல்கிறார். அந்த தொலைபேசி உரையாடலுக்கு பிறகு தனது ட்ரூத் சமுக வலைதளத்தில் டிரம்ப் எதையும் குறிப்பிட வில்லை. ஆனால் இந்தியா தரப்பில் போர் நிறுத்தம் என்பது இருநாடுகளும் சேர்ந்து எடுத்த முடிவு என்று தெரிவிக்கப்பட்டது. அதை டிரம்ப் உன்னிப்பாக கவனித்தார் என்றும் அறிக்கையில் சொல்லியிருந்தோம். அது டிரம்ப்-ஐ மிகவும் கஷ்டப்படுத்தி விட்டதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கூறியுள்ளனர். அதற்கு பிறகு அவர்கள் பல முறை இவர்களை அழைக்க முயன்றதாகவும், ஆனால் இவர்கள் அந்த அழைப்பை எடுக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். இதை அவர்கள் மறுத்துள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு பிறகு இரு நாடுகள் இடையிலான உறவு மிகவும் கெட்டுப்போய் உள்ளது. பிப்ரவரி மாதம் முதலே நாம் வர்த்தக பேச்சுவார்த்தைகளை தொடங்கி விட்டோம். இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை டிரம்ப் நிறுத்தியதாக சொல்வது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் அழுத்தம் கொடுத்தன. இதனை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினர். ஆனால் அவர், டிரம்ப் சொல்வது தவறு என்று நேடியாக சொல்ல முடியாத இடத்தில் உள்ளார். கடைசியாக டிரம்ப் 36-வது முறையாக போரை நிறுத்தியது நான்தான் என்று சொல்லி இருந்தார். இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினை எவ்வளவு ஆழமான பிரச்சினையாகும். இதை எல்லாம் ஒன்றும் தெரியாமல், அது ஆயிரம் ஆண்டு பிரச்சினையாகும் என்று டிரம்ப் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசியும், எழுதியும் வருகிறார்.

இந்த சூழலில் கனடாவில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை சந்தித்த அதிபர் டிரம்ப், திரும்பி செல்கிறபோது வாஷிங்டன் வந்துவிட்டு போகிறீர்களா? என கேட்கின்றார். இதனால் மோடியுடன் இருந்த அதிகாரிகள் மிகவும் துன்பப்பட்டு போய் இருப்பார்கள். காரணம் அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் ராணுவ தளபதியை அமெரிக்காவுக்கு அழைத்திருந்தார். மோடி அங்கு சென்றிருந்தால் இருவரையும் கைகுலுக்க சொல்லி அவர்கள் முன்னால் நின்று புகைப்படம் எடுத்திருப்பார் என்று அஞ்சினார்கள். அதன் பிறகு டிரம்பின் தொலைபேசி அழைப்பை ஏன் எடுக்கவில்லை என்றால், என்ன பேசினாலும், அதனை தன்னுடைய ட்ரூத் சமுகவலைதள பக்கத்தில் அவர் ஒரு கோணத்தில் கருத்தை போட்டு விடுவார். அதை தடுக்கிற வல்லமை உலக தலைவர்கள் யாருக்கும் இல்லை. அவருடைய பதிவுகள் ஒருவழி பாதையாகும். அதை தடுக்க முடியாது. இப்படி பட்டசூழலில் தான் பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார்.

இந்தியா – ரஷ்யாவுக்கும் எப்போது நல்ல உறவு நன்றாகவே இருந்து வருகிறது. அவர்கள் பலம் இழந்துள்ளனர். அவர்களால் நமக்கு பெரிய உதவி கிடையாது. கச்சா எண்ணெயை மலிவாக தருகிறார்கள். நம்மை ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கக் கூடாது என்று சொல்கிற அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறார்கள். முதலில் இந்தியர்கள் அவர்களின் தேவைக்காக ஒரு சதவீதம் எண்ணெய் வாங்கினார்கள். இன்றைக்கு 40 சதவீதம் வாங்குகிறார்கள். வாங்கி சுத்திகரிப்பு செய்து, வெளி நாடுகளுக்கு விற்பனை செய்கிறார்கள். நீங்கள் போர் லாபம் செய்கிறீர்கள் என்றும், மற்றவர்களின் இறப்பில், பணம் சம்பாதிக்கிறீர்கள் என்றும் அமெரிக்கா சொல்கிறது. ஆனால் நம்மை முதலில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குமாறு சொன்னது அமெரிக்கா தான்.

அமெரிக்கா, ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்து உள்ளாதால், கச்சா எண்ணெய் விலையை சமச்சீராக வைப்பதற்காக தடை விதிக்காத இந்தியா போன்ற நாடுகள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கலாம் என்று தெரிவித்தன. இதன் மூலம் உலக சந்தையில் எண்ணெய் விலை சமச்சீராக இருக்கும் என்று சொன்னார்கள். கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்து, விற்பனை செய்வதையும் கடந்த பல ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறோம். அதனால் அம்பானியின் பங்குகளின் விலை உச்சத்திற்கு சென்றுவிட்டன. எனவே இதனை இன்றோ நேற்றோ நாம் செய்யவில்லை. அவர்களும் இன்றைக்குதான் விழித்துக்கொண்டு அதை கண்டுபிடிக்கவும் இல்லை. அப்போது அவர்களுக்கு வேறு ஏதோ வருத்தம் உள்ளது. அதனால் எண்ணெய் விற்பனை செய்யும் நிகழ்வை தற்போது பெரிது படுத்துகின்றனர்.

சரியும் Crude Oil விலை... சரியாத Petrolவிலை

இந்தியா, அமெரிக்காவுக்கு 10 மில்லியன் டாலருக்கு இறால் ஏற்றுமதி செய்தோம். அதற்கு இரட்டை இலக்கத்தை விட குறைவாக வரி. தற்போது அதற்கு வரி 61 சதவீதம் ஆகிவிட்டது. அதனால் இறாலின் விலை 20 சதவீதம் சரிந்துவிட்டது. ஆந்திராவில் இதை சார்ந்த பல தொழில்நிறுவனங்கள் உள்ளன. அங்கு பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அதேபோல் பின்னலாடை, வைரங்கள் போன்றவற்றுக்கும் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் மருந்துகளுக்கு மட்டும் விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் வாங்கும் சக்தி அமெரிக்கர்களுக்கு தான் அதிகம் உள்ளது. மற்றொன்று அவர்களை போல வாங்குபவர்கள் வேறு யாரும் இல்லை. ஐரோப்பியர்கள் 2 உலகப் போர்களை சந்தித்தவர்கள். அவர்கள் மிகவும் சிக்கனமாக செலவு செய்வார்கள். எனவே அமெரிக்கா என்பது பெரிய சந்தை. அது நாம் எட்ட முடியாத இடத்திற்கு சென்றுவிட்டனர்.

இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகளின் தலைவர்கள் சந்திப்புக்கு பிறகு அமெரிக்காவின் செயல்பாட்டில் பெரிய மாற்றம் இருக்காது. ஏனென்றால் இதை அறிந்துதான் டிரம்ப் செய்திருக்கிறார். அவர் நம்மை சீனாவை நோக்கியும், ரஷ்யாவை நோக்கியும் தள்ளுகிறார். இதை அவருடன் இருப்பவர்கள் சொல்லி இருக்க மாட்டார்களா? மிகப்பெரிய அறிவாளிகள் அவரிடம் இருப்பார்கள்.  சீனா பயணம் என்பது இந்தியாவுக்கு லாபம் தான். நம்மால் இரண்டு பெரிய சக்திகளை எதிர்த்து சண்டை போட முடியாது. அமெரிக்கா உடனான மோதல் என்பது தற்காலிகமானது. டிரம்ப் போன உடன், அவரை விட மோசமான ஒரு அதிபர் வர மாட்டார். எனவே இரு நாடுகள் இடையிலான பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும். ஆனால் சீனா உடனான உறவு என்பது, மிகவும் சிக்கலானதாகும். அவர்கள் உடனான முரண்களை கண்டு கொள்ளாமல் இருந்துவிட வேண்டும். நம்மால் அவர்களால் சேரவே முடியாது. அவர்கள் நம்முடைய நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள். ஆனால் அமெரிக்கா கொடுத்த அழுத்தம் காரணமாக சேர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ