Homeசெய்திகள்கட்டுரைஉதயநிதி ஸ்டாலின்தான் குறி... அவதூறு பரப்பும் நாதக... பத்திரிகையாளர் கரிகாலன் பரபரப்பு புகார்

உதயநிதி ஸ்டாலின்தான் குறி… அவதூறு பரப்பும் நாதக… பத்திரிகையாளர் கரிகாலன் பரபரப்பு புகார்

-

- Advertisement -

ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த விவகாரத்தில் ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், துணை முதலமைச்சரை குறிவைத்தே பிரபல யூடியூப் நிறுவனம், நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பரப்பி வருவதாக பத்திரிகையாளர் கரிகாலன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரத்தில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ரங்கராஜன் நரசிம்மன் கடந்த ஞாயிறுக்கிழமை அன்று சென்னை சைபர் கிரைம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தின் முழு பின்னணி குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு, பத்திரிகையாளர் கரிகாலன் சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:- ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் யார் என்றால் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஒரு ஆன்மீக செயல்பாட்டாளர் ஆகத்தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் வசித்து வந்தபோது பொது இடத்தில் ஆபாசமான முறையில் நடந்து கொண்டதாக அந்நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டவர் ஆவார். கடந்த 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, தமிழ்நாட்டில் பெரிய கோவில்களில் கிடைக்கும் வருவாய் மூலம் சிறிய கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் தான் ரங்கராஜன் நரசிம்மன். இதேபோல கடந்த 2021ஆம் ஆண்டு கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருகிறார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது என்று ஆகமத்தில் தெரிவிக்கவில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலை தொடர்பாக பிரபல தொழிலதிபர் வேணு சீனிவாசனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் விதித்த தடையை மீறி வேணு சீனிவாசனுக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டார். இந்த வழக்கில் நீதிமன்றம் ரங்கராஜன் நரசிம்மனை கண்டித்தபோது, நிபந்தனை அற்ற மன்னிப்பு கோரினார். இதேபோல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரங்கராஜன் நரசிம்மன், அய்யா வைகுண்டர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்தார். இதேபோல், ஸ்ரீரங்கம் கோவில் பட்டர்களிடம் பிரச்சினையில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை விமர்சிப்பவர்கள் குறித்து சமுக வலைதளங்களில அவதூறு பரப்புவதையே வழக்கமாக கொண்டவர் ரங்கராஜன் நரசிம்மன் ஆவார். நிகழ்ச்சி ஒன்றில் மதுரை ஆதீனம் திமுக அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாலும், பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட மறுத்ததாலும் அவரை கடுமையாக விமர்சித்திருந்தார். இப்படி அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த நிலையில் தான் தற்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர், துர்கா ஸ்டாலின் ஆகியோருக்கு எதிராக தனது எக்ஸ் சமுக வலைதள பக்கத்தில் அவதுறு கருத்துக்களை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பாத பூஜை செய்து, பிராயசித்தம் செய்த உதயநிதி என்ற தலைப்பில் ரங்கராஜன் நரசிம்மன் வெளியிட்டுள்ள அந்த வீடியா சுமார் 20 நிமிடங்கள் கொண்டதாகும். அந்த வீடியோவில் முதல் 17 நிமிடங்களுக்கு உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து பேசுகிறார். சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதற்காக நீதிமன்றம் உள்ளிட்ட எங்கும் மன்னிப்பு கோரவில்லை. தனது கருத்தில் கடைசி வரை உறுதியாக உள்ளதாக தெரிவித்துவிட்டார்.

இந்த நிலையில் ரங்கராஜன் நரசிம்மன், தனது வீடியோவில் சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசியதால் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிராமண தோஷம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 100 ஆண்டுகளாக திராவிட இயக்க தலைவர்களுக்கு எதிராக பிரபல பார்ப்பன ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்புவது போல, அவர்களது உத்தியையே ரங்கராஜன் நரசிம்மன் கையில் எடுத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு பிராமண தோஷம் பிடித்துள்ளதாகவும், இதற்காக அவர் 3 பார்ப்பனர்களை அழைத்து பாத பூஜை செய்துள்ளதாகவும், அவ்வாறு செய்யாவிட்டால் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின், திமுக ஆகியோர் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது என ஜோதிடர் கூறியதால்  துர்கா ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் பாதபூஜை செய்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ பதிவில் 3 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆடியோ ஒன்றை இணைத்துள்ளார். அதில் ரங்கராஜ நரசிம்மன், ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் செல்போனில் பேசுகிறார். அப்போது, எம்பார் ஜீயர் தான் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்றதாகவும், அங்கே பாத பூஜையில் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு செல்லவில்லை என்றும் தெரிவிக்கிறார். மேலும், தான் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பார்க்க மட்டுமே சென்றதாகவும் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் வீட்டில் சாப்பிட்டீர்களா என்றும் ரங்கராஜ நரசிம்மன் கேட்க, அதற்கு ஜீயர் தான் உணவு அருந்தவில்லை என்றும் பதில் அளிக்கிறார். இந்த உரையாடலை  பதிவு செய்து, வீடியோவில் இணைத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் தரப்பில் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்படுகிறது. அதில் ரங்கராஜ நரசிம்மன் தனக்கு செல்போன் மூலம் மிரட்டல் விடுத்ததாகவும், மடத்தின் மீதான நம்பிக்கையை தகர்க்கும் விதமாக அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீரங்கத்தில் தனது வீட்டில் இருந்த ரங்கராஜ நரசிம்மனை கைது செய்துள்ளனர். அப்போது,போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து ரங்கராஜ் பாண்டே, கிஷோர் கே சாமி போன்றோரை சமூக வலைதளங்கள் வழியாக உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

'சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு'- 2 பேர் கைது

இந்த விவகாரம் தொடர்பாக தான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்திருந்தார். மேலும், பிரபல யூடியூப் நிறுவன செய்தியாளர் பெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகியும் இயக்குநருமான களஞ்சியம் ஆகியோர் ரங்கராஜ நரசிம்மனின் வீடியோக்களை பயன்படுத்தி, துணை முதலமைச்சருக்கு எதிரான அவதூறை பரப்புகின்றனர். பெண் காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த விவகாரத்தில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அதே வழக்கில் பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் அவரது யூடியூப் நிறுவனத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் வரை சென்று தடை நீக்கினார். இந்த நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுகவை பழிவாங்கும் விதமாகவும் பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு அவதூறு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அவர்கள் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு தவர் தெரிவித்தார்.

MUST READ