பிரதமர் பதவியில் இருந்து மோடியை நீக்க ஆர்எஸ்எஸ் தீவிரம் காட்டி வரும் நிலையில், அண்மையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை, அமெரிக்க எம்.பி.க்கள் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளிகியுள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்

பிரதமர் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இதன் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி வெளியிட்டுள்ள காணொலி பதிவில் தெரிவித்துள்ளதாவது:- பிரதமர் மோடியை 75 வயது நிறைவு பெற்ற உடன் எப்படியாவது பதவியில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் ஒரு மிகப்பெரிய நாட்டையே கையில் வைத்திருக்கக்கூடிய ஜாம்பவான் மோடி. அவருக்கு துணையாக அமித்ஷா உள்ளார். முப்படைகள், ஜனாதிபதி ஆகியோர் அவரது கட்டுப்பாட்டில் உள்ளனர். அவ்வளவு சீக்கிரத்தில் மோடியை மாற்றிவிட முடியாது. ஆனால் அதற்கான முயற்சிகளை தீவிரமாக ஆர்எஸ்எஸ் எடுத்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளை சேர்ந்த 5 எம்.பி-க்கள், இந்தியாவிற்கு வந்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேசியுள்ளனர். அமெரிக்க எம்.பி-க்கள், ஒரு நாட்டின் பிரதமருக்கோ, உள்துறை அமைச்சருக்கோ அல்லது வெளியுறவுத்துறைக்கே தெரியாமல் வர முடியாது. நாட்டில் உள்ள எந்த விமான நிலையத்திற்கு அவர் வந்தாலும் சோதனையில் கண்டுபிடித்துவிடுவார்கள். இந்த நிலையில், ஐந்து எம்.பி-க்களும் கடந்த 3 வாரங்களுக்கு முன்னதாக இரு வெவ்வேறு தருணங்களில் மோகன் பகவத்தை சந்தித்து பேசியுள்ளனர்.
அமெரிக்காவின் துணையோடு தான் மோடியை பிரதமர் பதவியில் இருந்து அகற்ற முடியும் என்று, அதற்கான நடவடிக்கைகளை ஆர்எஸ்எஸ் இயக்கம் மேற்கொண்டு வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும், அதற்கு முயற்சித்தார்கள். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. அமித்ஷா, மோடி ஆகியோர் தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை போன்றவற்றை பயன்படுத்தி, மோடி மீண்டும் பிரதமராகி விட்டார். இதனால் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் அதிர்ச்சி அடைந்தது. இந்நிலையில், தற்போது 75 வயது ஆவதை காரணம் காட்டி அவரை பிரதமர் பொறுப்பில் இருந்து நீக்க முயற்சிக்கிறார்கள். இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த 5 எம்.பிக்கள் வந்துள்ளது முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும், காஞ்சி சங்கராச்சாரியாருக்கும் இடையே தற்போது பிரச்சினை போய் கொண்டிருக்கிறது. மோகன் பகவத், ஆர்எஸ்எஸ் இயக்கம் பிராமணர்களை மட்டும் தூக்கிப்பிடித்தால் சரியாக வராது. இந்துக்கள் என்ற அடிப்படையில் பொதுவாக பயணித்தால் தான் ஆர்.எஸ்.எஸ் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முடியும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார். ஆனால் மோகன் பகவத்தின் இந்த முடிவு காஞ்சி சங்கர மடத்திற்கு பிடிக்கவில்லை. அதன் காரணமாக மோகன் பகவத் உடன் அவர்கள் மோதிக்கொண்டிருக்கின்றனர்.
மற்றொருபுறம் அமெரிக்காவின் உதவியோடு 5 எம்.பிக்கள் இந்தியாவுக்கு வந்து மோகன் பகவத்தை சந்தித்து செல்கிறார்கள். மோடியை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்கு எந்த எந்த வழிகளில் எல்லாம் முயற்சி செய்ய வேண்டும். அவராகவே விலகாதபட்சத்தில் அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருபுறம் மோடி, அமித்ஷா ஆகியோர் சர்வாதிகார ஆட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்வதை கேட்க கூடிய நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் போன்றவர்கள் முக்கிய துறைகளின் அமைச்சர்களாக உள்ளனர். ராணுவ அமைச்சர் ராஜ்நாத், மோடியை எதிர்த்து எவுதும் செய்ய மாட்டார். குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடியால் நியமிக்கப்பட்ட ஒருவர். இதன் காரணமாகவே ஆர்.எஸ்.எஸ் மோடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முயற்சிக்கிறது. மோடி நினைத்தால் நாட்டில் சர்வாதிகார ஆட்சியை கொண்டுவந்து, பிராமணர்களை அழித்துவிட வாய்ப்பு உள்ளது என்பதால்தான் அவர்கள் மோடியை பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கிறார்கள்.
மோடி – அமித்ஷா, ஆகியோர் குஜராத் தொழிலதிபர்களை மட்டும் வளர்த்து விடுவதால் இருவரையும் பதவியை விட்டு நீக்கிட தீவிரம் காட்டுகிறார்கள். இந்நிலையில், அமெரிக்க எம்.பிக்கள், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துள்ளது மோடி – அமித்ஷாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த தேர்தல் வரும்வரை மோடியை பிரதமர் பதவியில் வைத்திருக்கக்கூடாது என்று அமெரிக்கா விரும்புகிறது. ஒரு நாட்டில் 2 முறைக்கு மேல் ஒருவர் ஆட்சி செய்தால், அவர் சர்வாதிகாரியாக மாறிவிடுவார் என்பதுதான் அமெரிக்காவின் அடிப்படை கொள்கையாகும். எனவே அந்நாட்டில் 2 முறைக்கு மேல் ஒருவர் அதிபர் பதவியை வகிக்க முடியாது. அந்த அடிப்படையில் அவர்கள் மோடியை பதவியை விட்டு தூக்க முயற்சிக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் உதவியுடன் இந்த வேலையை அவர்கள் செய்கிறார்கள். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்பது பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.