Homeசெய்திகள்கட்டுரைவேங்கை வயல் ஆடியோ லீக்! க்ளைமேக்ஸை நெருங்கிடுச்சா போலீஸ்!

வேங்கை வயல் ஆடியோ லீக்! க்ளைமேக்ஸை நெருங்கிடுச்சா போலீஸ்!

-

- Advertisement -

வேங்கை வயல் பிரச்சினையில் அரசின் அவசரப்போக்கு அவசியம் அற்றது என்றும், இந்த விவகாரத்தில் மறுஆய்வு மேற்கொண்டு உண்மை குற்றவாளியை கண்டு பிடிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர் கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி  வலியுறுத்தியுள்ளார்.

வேங்கை வயல் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி சிபிஐ விசாரணை கோரிக்கை விடுத்துள்ளது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- வேங்கை வயல் விவகாரம் என்பது சிக்கலான விஷயமாகும். குடிநீரில் மலம் கலப்பது என்பது வளர்ந்த சமூகத்தில் மனிதனை கடந்து வேறு இடத்தில் உள்ள ஒருவராகத்தான் இருப்பார். எந்த அரசு வந்தாலும் இதுபோன்ற பிரச்சினைகள் வரும். இது எங்கு கொண்டு சென்று நிறுத்தப்படுகிறது என்றால் சாதிய பிரச்சினையாக நிறுத்தப்படுகிறது. இதன் நோக்கம் என்ன என்றால், திமுக அரசுக்கு பிரச்சினை ஏற்படுத்துவது. மற்றொருன்று தவறு செய்தவர்கள் சாதிக்குள் சென்று ஒளிந்துகொள்வதற்கான ஏற்பாடு ஆகும். வேங்கை வயல் விவகாரத்தில் சாதிப் பிரச்சினை என கூறப்படுவது தவறு. மேல் சாதியினர் என்று அனைவரும் கூடி மலத்தை கலந்திருப்பார்களா? இது தனிநபரின் வன்முறை இது.

வ்

கடந்த 2 வருடமாக இந்த விவகாரத்தில் காவல்துறையால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. விஜய் திடீரென வேங்கை வயல் வருகிறேன் என சொன்னதற்காக  இந்த பிரச்சினையை அவசர அவசரமாக முடிக்க பார்க்கிறார்கள். விஜய் அந்த ஊருக்குள் வந்தால் எந்த கட்சிக்காரரும், எந்த சமுதாயத்தினரும் அவரை அனுமதிக்க மாட்டார்கள். இன்று வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் முரளிராஜா ஆவார். காவல்துறையை சேர்ந்தவர். தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். மலம் கலந்த பின்னர் தண்ணீர் தொட்டியில் ஏறி அதனை சேகரிக்க சென்ற நபர்தான் முரளிராஜா. அவருடன் மற்றொரு நபரும் செல்கிறார். அப்படி சேகரிக்க சென்ற நபரை நீ தான் குற்றவாளி என்று சொல்வது சரியா?. வேங்கை வயல் விவகாரத்தில் முழுமையாக விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சமுதாயத்தை நெருக்குவது கொடுமை. மலம் கலந்த தண்ணீரால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் முரளிராஜாவின் உறவினர் ஆவார். தான் வீட்டில் உள்ள ஒருவர் அந்த தண்ணீரை குடிக்க முரளிராஜா மலத்தை கலப்பாரா? குற்றத்தை ஒப்புக்கொள்ள வலியுறுத்தி முரளிராஜாவுக்கு அழுத்தம் தரப்படுவதாக சிபிஎம் கட்சியிடம் தெரிவித்துள்ளார்.

விஜய்க்காக வேங்கை வயல் விவகாரத்தில் அவசரம் காட்டப்படக்கூடாது. இதற்காக ஒருவரை பலி கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. வேங்கை வயல் விவகாரத்தை அவசரமாக முடிப்பதை விட நேரம் எடுத்துக்கொண்டு தீர விசாரியுங்கள். அவசர அவசரமாக ஒரு வழக்கை முடிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு ஒருவர் மீது பழியை சுமத்துகிறார்கள். முரளி ராஜாவின் அம்மா, அவரிடம் உன்னை ஒத்துக்கொள்ள வைக்க அழுத்தம் கொடுக்கிறார்கள். நீ ஒப்புக்கொள்ளாதே என கூறினார். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளாதே என சொன்னதை மட்டும் கட் செய்து, சமூக ஊடகங்களில் பரப்புகின்றனர். முரளிராஜா தான் கலந்தார் என்பதற்கான எந்த ஆதராமும் இல்லை. டிஎன்ஏ பரிசோதனை, உண்மை கண்டறியும் சோதனை என எதிலும் ஆதாரம் கிடைக்கவில்லை. யாரோ ஒருவருக்காக இன்னொருவரை பலி கொடுப்பது சரியில்லை.

விசிக போராட்டம் அறிவிப்பால் வேங்கைவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் குவிப்பு

இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என விசிக சொல்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறுஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. என்னை கேட்டால் இந்த வழக்கை இப்படியே விட்டுவிடலாம் என்றுதான் கூறுவேன். இந்த 2 வருடத்தில் அரசு நினைத்தால் குற்றவாளியை கண்டுபிடித்து இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. ஆனால் வெறும் கட் செய்யப்பட்ட ஆடியோவை வைத்துக்கொண்டு குற்றம்சாட்டுவது சரியில்லை. வேங்கை வயல் வழக்கில் மறுஆய்வு தேவை. குற்றவாளியை கண்டுபிடித்து சட்டப்படியான தண்டனை கொடுங்கள். தமிழ்நாட்டில் உள்ள தலித்துகள் பிரச்சினை குறித்து பேசுவதற்கு ஆளுநருக்கும், பாஜகவினருக்கும் எந்த தகுதியும் இல்லை.

வேங்கை வயல் விவகாரத்தில் போலீசாரின் குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என்றும், சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கோரியுள்ளார். இந்த விவகாரத்தில் வேறு வழி இல்லாததால் அவர் சிபிஐ விசாரணை கோரியுள்ளார். வேங்கை வயல் விவகாரத்தில் 2 வருட காலம் ஆகிவிட்டது. இதில் ஒன்றும் நடைபெறவில்லை. காவல்துறையினர் இன்னும் 6 மாத காலம் கூட எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் விஜய்க்காக ஒரு அப்பாவியை கைகாட்டக் கூடாது. அரசு நினைத்திருந்தால் 3 மாதத்தில் குற்றவாளிகளை கண்டு பிடித்திருக்கலாம். ஆனால் ஏதோ ஒன்று அரசை தடுக்கிறது. 2 வருடமாக காவல் துறையில் உள்ள முரளிராஜாவை குற்றம் செய்தாரா என தெரியவில்லையா? ஊராட்சி மன்ற தலைவருக்கும், கவுன்சிலருக்கும் பிரச்சினை உள்ளது. ஆனால் அதனுடன் இந்த பிரச்சினையை தொடர்பு படுத்துவது தவறு. தன் குடும்பத்தினர் தண்ணீர் குடிக்கும் தொட்டியில் எப்படி ஒருவர் மலத்தை கலப்பாரா?. வேங்கை வயல் விவகாரத்தில் இந்த அவசரப் போக்கு தேவையில்லை. இந்த விவகாரத்தில் உண்மைத் தன்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதுபோன்ற நிகழ்வு இனி எங்கும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ