மோடி, குஜராத்தில் இருந்து ஒரு வைரஸ் போல நாடு முழுவதும் பரவி வாக்குகளை திருடியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதை உறுதிபடுத்தி உள்ளார் என்று பத்திரிகையாளர் மகிழ்நன் குற்றம்சாட்டியுள்ளார்.

பீகாரில் தேர்தல் ஆணைய மோசடிக்கு எதிராக ராகுல்காந்தி மேற்கொண்ட யாத்திரை குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பத்திரிகையாளர் மகிழ்நன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:- குஜராத் மாநிலத்திலும் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்ததுள்ளன. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல்காந்தி, வாக்கு திருட்டு விவகாரத்தை இத்துடன் விடமாட்டோம். ஒவ்வொரு மக்களவை தொகுதியாக அம்பலப்படுத்துவோம் என்று சொல்கிறார். அப்போது மக்கள் கூட்டத்தில் இருந்து ஒருவர் வாரணாசி என்று சொல்கிறார். அப்போது அங்கேயும் வருகிறேன் என்று சொன்னார். தற்போது அணுகுண்டு கேள்வி பட்டிருப்பீர்கள். அடுத்து ஹைட்ரஜன் குண்டு போட போகிறேன் என்று ராகுல் சொல்லி உள்ளார். காங்கிரஸ் கட்சி சிசிடிவி காட்சிகளையும், வாக்காளர் விவரங்களையும் வழங்கினால், மோடி வாரணாசி தொகுதியில் தோற்றுவிட்டார் என்பதை நிரூபித்து காட்டுகிறோம் என்று சவால்விட்டிருக்கிறது. குஜராத் மாடல்… என்பது ஒரு ஏமாற்று வேலையாகும். அந்த குஜராத்தில் மோடி வெற்றி பெற்றது எப்படி? முதன் முறையாக மோடி குஜராத்தில் முதலமைச்சர் ஆன போது 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். அந்த தேர்தலுக்கு பிறகுதான் குஜராத்தில் கலவரம் நடைபெற்றது.
பாஜக மாநில தலைவர் சி.ஆர்.பாட்டில் தொடர்புயை நவ்சாரி மக்களவை தொகுதியில் மோசடி நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் அமித் சவுதாலா குற்றம்சாட்டியுள்ளார். அவர்கள் மொத்தம் சோதித்து பார்த்தது 40 சதவீத வாக்குகளை தான். 30 ஆயிரம் வாக்காளர்கள் சந்தேகத்திற்கு உரியதாக இருக்கிறது. ஒரே தொகுதியில் பல வாக்காளர் அடையாள அட்டைகள். ஒரு மாநிலத்திற்குள் 62 லட்சம் போலி வாக்காளர்கள் இருக்கலாம் என்று அவர் சந்தேகப்படுகின்றனர். இந்தியாவுக்கு மோடி கொடுத்துள்ள குஜராத் மாடல் இதுதான் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது நாடு முழுக்க மெல்ல மெல்ல பரவி வருகிறது. இன்றைக்கு மோடிக்கு 75 வயதாக போகிறது என்பதால், அவரை பதவி விலகுமாறு ஆர்எஸ்எஸ் வலியுறுத்தி வருகிறது. மற்றொருபுறம் மோடி எதிர்க்கட்சிகளை திரட்டுகிற வேலையை செய்து கொண்டிருக்கிறார். தன்னுடைய பிரதமர் தக்கவைக்க வேண்டும் என்றால் மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பின் உதவியை நாட வேண்டும். ஆனால் ஆர்எஸ்எஸ் தங்களுக்கு சாதகமான ஒரு நபரை பிரதமராக கொண்டுவரத்தான் விரும்பும். இல்லாவிட்டால், ஆர்எஸ்எஸ் உடன் சமரசமாக சென்றால், அவர்கள் இந்த விவகாரத்தில் இருந்து திசை திருப்பக்கூடும்.
பிரதமர் மோடி, சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ளார். சீனா, பாகிஸ்தானுக்கு உதவி செய்யக்கூடாது. இந்திய பகுதிக்குள் இருக்கும் சீனவீரர்களை வெளியேற்றுங்கள் என்று சொன்னால் சரியாக இருக்கும். ஆனால் அமெரிக்கா எங்களை சீண்டுகிறார்கள். எங்களுக்கு உதவுங்கள் என்று கேட்பதற்காக தான் சீனாவுக்கு சென்றுள்ளார். அமெரிக்காவின் 50 சதவீத வரியால் ஜவுளித்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கி, அதை சுத்திகரித்து ஐரோப்பாவுக்கும், அமெரிக்காவுக்கும் தான் விற்பனை செய்கிறார்கள். அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்த்க ஆலோசகர் பீட்டர் நவேரா, இதை பயன்படுத்திக் கொண்டு பார்ப்பனர்கள்தான் வளர்கிறார்கள் என்று சொல்லிவிட்டார். அவர் நேரடியாக அதானி என்று சொல்லி இருக்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வாக்காளர் பட்டியலை சுத்தம் செய்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள். வால்மீகி நகர் தொகுதியில் மட்டும் SIR நடவடிக்கைக்கு பின்னர் 34 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளனர். அதில் சந்தா ராம் என்பவருக்கு 2 மாநிலங்களில் வாக்கு உள்ளது தெரியவந்துள்ளது. திரிவேணிகன்ச் பகுதியை சேர்ந்த அஞ்சலிகுமார் என்பவருக்கு ஒரே வாக்காளர் பட்டியலில் 2 வாக்குகள் உள்ளன. போதிய தரவுகள் இல்லாமல் ஏராளமானோர் வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ளனர். கிட்டத்தட்ட 2 முதல் 3 லட்சம் வாக்காளர் உள்ள தொகுதியில் 34 ஆயிரம் பேர் போலியான வாக்காளர்கள் உள்ளனர். பூத் எண் 320-ல் ஒரே வீட்டில் 319 வாக்குகள். பூத் எண் 459ல் ஒரே வீட்டில் 509 வாக்குகள், பூத் எண் 27ல் ஒரே வீட்டில் 269 வாக்குகள் உள்ளன. இதில் ஒரு இடத்தில் சன்னியாசிகள் வசிப்பதாக விளக்கம் அளிக்கின்றனர். இப்படியாகவே அவர்கள் வாக்களிக்கின்றனர்.

SIR நடவடிக்கை என்கிற பெயரில் இவர்கள் வெளிப்படையாக மோசடி செய்துள்ளனர். மோடி, குஜராத்தில் இருந்து வைரஸ் போல பரவி, வாக்குகளை திருடியாவது வெற்றி பெற வேண்டும் என்று ஊர்ஜிதப்படுத்தி வைத்திருக்கிறார்கள். மக்களுக்கு இன்று தேவை ஒரு கூடுதலான நம்பிக்கையாகும். ஏற்கனவே பீகாரில் ராகுல் யாத்திரைக்கு மக்கள் சாரை சாரையாக புறப்பட்டு வருகிறார்கள். இந்த நம்பிக்கையை கெடுக்காமல் இருப்பதற்கு இந்தியா முழுக்க எதிர்க்கள் பணியாற்ற வேண்டும்.