Homeசெய்திகள்ஆன்மீகம்சிதம்பரம் நடராஜர் கோயில்; நீதிமன்றம் புதிய உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோயில்; நீதிமன்றம் புதிய உத்தரவு

-

- Advertisement -

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவில் சொந்தமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்திலும், 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளதாகவும், அவற்றை மீட்கக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலங்களை பொது தீட்சகர்கள், முறையாக பராமரிக்கவில்லை என்பதால், அவற்றை பாதுகாக்க வேண்டும் என, முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியதாகவும், அந்த புகார் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் விசாரணை கூட்டம் கூட்டிய போதும், அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமாக, கடலூர் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள நிலங்களை மீட்பது தொடர்பாக விசாரணை நடத்தி, 12 வாரத்திற்குள் நிலத்தை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

MUST READ