பால் குடித்தபோது 1.5வயது பெண் குழந்தை, மூச்சு திணறல் ஏற்பட்டு பலியானது.
ஆவடி அருகே பட்டாபிராம் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் மணி பிரபு. இவர் தனது மனைவியுடன் வண்டலூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று மாலை வீடு திரும்பியுள்ளார்.
தாய் ஜெயலட்சுமி தனது 1.5 வயது பெண் குழந்தையான மிகில்யா ஸ்ரீ-க்கு பாட்டிலில் பால் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை வாந்தி எடுத்துள்ளது.
குழந்தை சுய நினைவை இழந்ததை அடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து ஆவடி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றனர். மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
மதுரை மாவட்டத்தில் 8 மாதக் குழந்தையை சாலையில் வீசிய தந்தை (apcnewstamil.com)
குழந்தையின் உடலை கே.எம்.சி. அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து சம்பவம் குறித்து பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.