spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆட்டோமொபைல் உதிரி பாகங்களை கள்ள சந்தையில் விற்று பண மோசடி செய்தவர் கைது!

ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை கள்ள சந்தையில் விற்று பண மோசடி செய்தவர் கைது!

-

- Advertisement -

போலி மின்னஞ்சல் மூலம் 43 லட்சம் மதிப்புடைய ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை கள்ள சந்தையில் விற்று பணம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

we-r-hiring

ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அம்பத்தூர் இணை ஆணையர் அலுவலகத்தில், இணைய வழி குற்ற பிரிவு போலீசாருக்கு மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் புகார் மனு ஒன்று அளித்திருந்தார், அதில் தான் டெஸ்ட்ஸ்டீல் சப்ளையர் என்ற தனியார் ஸ்டீல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை மணலி பகுதியில் நடத்தி வருகிறேன். இந்நிலையில் அவருக்கு ஓசூர் டிவிஎஸ் நிறுவனம் பொருட்கள் சப்ளை செய்ய azhagu sundaram tvs@gmail.com மின்னஞ்சல் மூலம் ஆர்டர் கொடுத்தனர். அதன் பேரில், 43 லட்சம் மதிப்புள்ள ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை தயார் செய்து, தனது ஊழியர் மூலம் ஹோசூருக்கு லாரியில் அனுப்பினேன்.  அதன்பின்,அழகு சுந்தரம் என்பவர் துணை மேலாளர் என்று என்னிடம் தொலைபேசியில் பொருட்களை பெற்றுக் கொண்டதாகவும் பேசினார்.  ஸ்ரீதர் அனுப்பிய பொருட்களை பெற்று கொண்டதாக கூறிய அந்த நபர், விரைவில் பணம் அனுப்புவதாக கூறினார். ஆனால் அழகு சுந்தரம் கூறியது போல் பணம் அனுப்பவில்லை.

இது குறித்து ஆவடி இணைய வழி குற்றபிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், அழகு சுந்தரம் என்ற பெயரில் போலியான மின்னஞ்சல் முகவரி அனுப்பி, பொருட்களை பெற்று, அதனை ஸ்கிராப்பாக விற்று பணத்தை திருடியதும் மேலும் அவர் அனுப்பிய மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண் மூலம் தெரிய வந்தது. இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட மீஞ்சூர்,பாலாஜி நகரைச் சேர்ந்த அப்துல் ரஹீம் 36  என்பவரை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

MUST READ