Homeசெய்திகள்ஆவடிபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை!

-

ஆவடியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டால் காவல் எண் 100ஐ தொடர்பு கொண்டால் உடனடியாக சரி செய்யப்படும் என காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார்.

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் போக்குவரத்து காவல் துறையினருக்கு தொப்பி, கண்ணாடி, நீர், மோர், குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி அம்பத்தூரில் நடைபெற்றது.. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆவடி காவல் ஆணையர் சங்கர் கலந்து கொண்டு போக்குவரத்து காவல் துறையினருக்கு தொப்பி, கண்ணாடியை அணிவித்து நீர் மோர் குளிர்பானங்களை வழங்கினார்.. இதனை தொடர்ந்து தொப்பி அணிந்து சாலை பாதுகாப்பு உறுதிமொழி வாசகங்கள் அடங்கிய புகைப்பட பூத்தில் நின்று புகைப்படம் எடுத்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் சங்கர், பொது தேர்வு தொடங்கியுள்ளதால் ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.. தேர்வு எழுதும் மாணவர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் தேர்வு மேற்கொள்ளவேண்டும்.. தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து தடை இருந்தால் காவல் உதவி எண் 100ஐ தொடர்பு கொண்டால் உடனடியாக போக்குவர்த்து சரி செய்யப்படும் என தெரிவித்தார். இந்த் நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையர் ராஜேந்திரன், துணை ஆணையர் ஜெயலட்சுமி அம்பத்தூர் போக்குவரத்து ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் தலைமை போக்குவரத்து காவலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..

MUST READ