Homeசெய்திகள்ஆவடிஆவடியில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் நாசர்

ஆவடியில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் நாசர்

-

ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாமை எம்எல்ஏ  நாசர் தொடங்கி வைத்தார்.

போலியோ சொட்டு மருந்து முகாம் 1995-ம் வருடம் முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று மார்ச் 3 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இம்முகாமின் மூலம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 57 லட்சம் குழந்தைகளுக்கு மொத்தம் 43 ஆயிரம் பூத்துகள் மூலம் மருந்துகள் வழங்கப்படுகிறது. இதில் ஆவடி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 7 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் 26,495 குழந்தைகளுக்கு 91 பூத்துகள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்தினை வழங்குவதற்கு மொத்தம் 395 சுகாதாரப்பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆவடி மாநகராட்சிக்கு 32000 போலியோ சொட்டு மருந்துகள் தரப்பட்டுள்ளது.
ஆவடி, விளிஞ்சியம்பக்கம் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக அரசின் சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாமினை திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான சாமு நாசர் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆவடி மாநகர மேயர் உதயகுமார்,துணை மேயர் சூரியகுமார், CHO மருத்துவர் திரு ராஜேந்திரன், மண்டல குழு தலைவர் திருமதி ஜோதி லட்சுமி, நாராயண பிரசாத், எத்திராஜ்,மாநகர பொறுப்பாளர் சண் பிரகாஷ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ