ஆவடியில் சாலை விபத்துகளை முற்றிலும் தவிர்க்கும் வகையில், ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில், பள்ளி மாணவர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை அருகே ஆவடி செக்போஸ்ட் பகுதி சிக்னலில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ. மாணவிகள் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. சாலை சிக்னல் மாற்றத்தின் போது வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலையின் நடுவே மாணவ, மாணவிகள் பல்வேறு வாசகங்கள் கொண்ட பாதகை கையில் ஏந்தியபடி போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து வாகன ஓட்டிகளிடம் ஆய்வாளர் ஜெயக்குமார் பேசியதாவது: வாகன ஓட்டிகள் கட்டாய தலைக்கவசம் அணிய வேண்டும், வாகனங்கள் ஓட்டி செல்லும் பொழுது கட்டாயம் கைபேசி உபயோகப்படுத்தக் கூடாது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, சாலை விதிகளை வாகன ஓட்டிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார்.. இந்நிகழ்ச்சியில் ஆவடி போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், போக்குவரத்து பாதுகாவலர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.