Homeசெய்திகள்ஆவடிமனித கழிவுகளை மனிதர்களே அகற்றிடும் நிலையை மாற்றிட விழிப்புணர்வு பேரணி

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றிடும் நிலையை மாற்றிட விழிப்புணர்வு பேரணி

-

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றிடும் நிலையை மாற்றிட விழிப்புணர்வு பேரணி

தூய்மை பாரதத்தின் கீழ் ஆவடி மாநகரை குப்பையில்லா மாநகரமாக மாற்றுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆவடி ஒ.சி.எஃப் மைதானத்தில் நடைபெற்றது.

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றிடும் நிலையை மாற்றிட விழிப்புணர்வு பேரணி

இந்நிகழ்வை தலைமையேற்று நடத்திய ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ் ஐ.ஏ.எஸ்., மற்றும் சுகாதாரத்துறை செயல் அலுவலர் மொய்தீன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றிடும் நிலையை மாற்றிட கீழ்கண்ட உறுதிமொழிகளை ஏற்று, தனியார் பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் நிரந்தர பணியாளர்கள் இணைந்து பல்வேறு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி பேரணியாக சுமார் 10 கிலோ மீட்டர், ஆவடி ஒ.சி.எஃப் மைதானத்திலிருந்து,செக்போஸ்ட், காமராஜர் நகர், ஆவடி மார்க்கெட் வழியாக மீண்டும் ஆவடி ஒ.சி.எஃப் மைதானத்திற்கு சென்று பேரணியை முடித்தனர்.

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றிடும் நிலையை மாற்றிட விழிப்புணர்வு பேரணி

உறுதிமொழிகள்

மனிதர்களைக் கொண்டு கைகளால் மனித கழிவுகளை அகற்றுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் கீழ் மீறப்படும் குற்றங்களுக்கு ஜாமீனில் வர அனுமதி கிடையாது.

ஒரு ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ, அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படலாம்.

எனவே நாம் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தானியங்கி கழிவுநீர் அகற்றும் வாகனத்தை பயன்படுத்த வேண்டும்.

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றிடும் நிலையை மாற்றிட விழிப்புணர்வு பேரணி

பின்பு ஒ.சி.எஃப் மைதனாத்தில் மாணவ – மாணவிகள் 14420 என்ற கழிவுநீர் புகார் எண்ணை எண் வடிவமாக உட்கார்ந்து மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

MUST READ