ஆவடியில் ஒன்றிய அரசின் ஓய்வுப் பெற்ற அதிகாரிகளுக்காக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் மாடியில் இருந்து 15/வ சிறுவன் விழுந்து பரிதாபமாக உயிரிழந்திர்.
ஆவடி, பருத்திப்பட்டில் மத்திய அரசின் கேந்திரியா விகார் அடுக்கு மாடி குடியிருப்புகள் 1000-த் திற்கும் மேல் உள்ளது. அங்கு தற்போது கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் அங்கேயே தங்கி கட்டுமான பணிகளை இரவும் பகலுமாக செய்து வருகின்றனர்.
அதில் 800 குடியிருப்புகள் கொண்ட கட்டிடத்தில் கட்டிட வேலையில் பணிபுரியும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ரபியூல் ஹக்கீ வ/15 என்பவர் அங்கு தங்கி தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளார்.
நேற்று நள்ளிரவில் பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் அணியாமல் கட்டிட வேலை செய்யும் போது 8 வது தளத்திலிருந்து தவறி விழுந்து பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்.
மேலும், கட்டிட மேற்பார்வையாளர் அளித்த தகவலின் பெயரில் ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பணியிடத்தில் தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்காத ஒப்பந்ததாரர் மீது குற்ற பிரிவு 304A பிரிவில் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவ இடத்தில் பணியில் இருந்து கட்டட பொறுப்பு மேற்பார்வையாளர்கள் ரூபேல் உசேன் வ/25, மணிகண்டன் வ/29,ஷாஜகான் உள்ளிட்ட மூன்று பேரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் அவர்களின் உத்தரவின் பேரில் ஆவடி வட்டாட்சியர் வெங்கடேசன் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.