Homeசெய்திகள்ஆவடிதிருமுல்லைவாயலில் மக்களுடன் முதல்வர் திட்டம் – ஆவடி சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்!

திருமுல்லைவாயலில் மக்களுடன் முதல்வர் திட்டம் – ஆவடி சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்!

-

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 8,9,10,29ஆகிய வார்டு மக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் அனைத்து துறை பங்கேற்கும் சிறப்பு முகாம் திருமுல்லைவாயல் பகுதி  மங்களம் திருமண மண்டபம் வளாகத்தில் இன்று (09.01.2024) நடைபெற்று வருகிறது.

திருமுல்லைவாயலில் மக்களுடன் முதல்வர் திட்டம் – ஆவடி சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்!

இதில் வருவாய்த்துறை, மாநகராட்சி, காவல்துறை, மின்சாரத்துறை, வீட்டு வசதிவாரியம், மாற்றுத்திறனாளி நலத்துறை, சமூக நலத்துறை, ஆதி திராவிடர்/ பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தொழிலாளர் நலவாரியம், சமூக பாதுகாப்பு திட்டம், வேலைவாய்ப்பு துறை, மாவட்ட தொழில் மையம் என தனி தனி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

திருமுல்லைவாயலில் மக்களுடன் முதல்வர் திட்டம் – ஆவடி சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்!

இந்த நிலையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை முன்னாள் அமைச்சர் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர் மற்றும் மாநகர ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான் ஆகியோர் தொடங்கி வைத்தனர். துறை சார்ந்த அதிகாரிகள் மனுக்களை முறையாக பெற்று பதிலளிக்கின்றார்களா? முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? எனவும் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

திருமுல்லைவாயலில் மக்களுடன் முதல்வர் திட்டம் – ஆவடி சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்!

 

இதனை தொடர்ந்து பொது மக்களிடம் மனுக்களை பெற்று மாநகர ஆணையரிடம் ஒப்படைத்தார்.  இந்த மனுக்கள் மீது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆவடி மாநகர மேயர் திரு உதயகுமார், மாநகர பொறுப்பாளர் திரு சன் பிரகாஷ், மண்டல தலைவர் திருமதி அமுதா பேபி சேகர் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட உறுப்பினர்கள்,கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.மனு

MUST READ